ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

வாஸ் குணவர்தனவுக்கு பிணை: தொடர்ந்தும் விளக்கமறியலில்

வாஸ் குணவர்தனவுக்கு பிணை: தொடர்ந்தும் விளக்கமறியலில்

15 இலட்சம் ரூபா கப்பம் பெற்றமை தொடர்பாக கைதான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு மஹரை மாஜிஸ்திரேட் தர்ஷிகா விமலசிரி நேற்று உத்தரவிட்டார்.

களனி பிரதேச சபை உறுப்பினர் ஹஸித்த மடவளையின் கொலை சம்பந்தமாக அரச சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள சரத் எதிரிசிங்ஹ என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் சரத் என்பவரிடம் இருந்தே 15 இலட்சம் ரூபா கப்பம் பெறப்பட்டது.

பிணைத் தொகையை 05 இலட்சம் ரூபா வீதம் இரு சரீரப் பிணைகளாக வழக்கும் பிணையில் சென்று முறைப்பாட்டாளரின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்களைக் கொடுக்கக்கூடாதென்றும், பிணையாளர்களாக சந்தேக நபரின் இரத்த உறபினர்களை ஆஜர் செய்யுமாறும் உத்தரவிட்டார். சந்தேக நபரின் வெளிநாட்டுப் பயணத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

அவரின் பாஸ்போட்டை ஒப்படைக் குமாறும் பிணையாளர்களின் வதிவிடத்தை உறுதி செய்யுமாறும், பிணை நிபந்தனைகளை மீறினால் விதிக்கப்பட்ட பிணையை ரத்து செய்து மீண்டும் சந்தேக நபரை விளக்கமறியலில் வைப்பதாகவும் மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஒப்ப டைத்துள்ள எழுத்துமூல விளக்கம் சட்டமா அதிபரின் உத்தரவுக்காக பாரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபரிடமிருந்து உத்தரவு வரும் வரை பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரன்ஜித் முனசிங்க தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகள் அக்டோபர் 21 ஆம் திகதி நடைபெறும்.(எப். எம்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி