ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று மட்டு விஜயம்

பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று மட்டு விஜயம்

பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜோன் றங்கின் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேற்றுக் காலை மட்டக்க ளப்புக்கு விஜயம் செய்தனர்.

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆபள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதுடன் பள்ளிவாசலையும் சுற்றி பார்வையிட்டனர். பள்ளிவாசல் தலைவர் எம்.எச்.எம். இக்பால் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு நகரில் இடம்பெறும் அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட உயர் ஸ்தானிகர், நகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையையும் பார்வையிட்டார்.

மட்டக்களப்பு வாவி, நகர நுழைவாயில் உட்பட பல இடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.

பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு வரும் தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வருகைதரவுள்ளனர். இதற்கான முன்னோடி விஜயமாகவே பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி