புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
பிறப்பு எண்களில் 7ஆம் எண் இருந்தால் வெளிநாட்டு வாழ்க்கை அமையுமா?

பிறப்பு எண்களில் 7ஆம் எண் இருந்தால் வெளிநாட்டு வாழ்க்கை அமையுமா?

கடந்த வாரத் தொடரைப் படித்த பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு நட்பான, பகையான எண்களைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். “உங்களுடைய கட்டுரைத் தொடர் எங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் சொரிந்து போயிருக்கும் எங்களுக்கு ஒருவித நம்பிக்கையை ஊட்டுகிறது. எனவே இது போன்ற கருத்துக்களை நீங்கள் தொடர்ந்தும் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் கூறினார்கள். எனது உடற் பயிற்சியும் அதுவாகத்தானே இருக்கிறது.

இந்த வார கட்டுரைத் தொடரை எப்படி ஆரம்பிக்கலாம் யோசித்துக் கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பொன்று வந்தது.

“சேர்... எனது வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டிருந்தேன். அந்த சமயத்தில் தான் தினகரன் வாரமஞ்சரியில் நீங்கள் எழுதிய கட்டுரை ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நீங்கள் எழுதியிருந்த ஒரு கருத்து என்னைக் கவர்ந்தது. அதாவது வயதிற்கும் அதிர்ஷ்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. நமது நாட்டில் வசிக்கும் ஒருவர் 60ஆவது வயதில் தான் இந்த நாட்டின் ஜனாதிபதியானார். அதன் பிறகுதான் அவர் ராஜ யோகங்களை அனுபவித்தார்.

இதேபோல் பெயரை மாற்றிக் கொள்வதற்கும் வயதெல்லை கிடையாது என்று நீங்கள் அதில் குறிப்பிட்டிருந்தீர்கள். எனக்கு இப்போது 61 வயது. இதனால் எனக்குள்ளும் ஒரு புத்துணர்வு ஏற்பட்டது. அதன் பிறகுதான் உங்களை வந்து சந்தித்தேன். நீங்களும் பெயரை அதிர்ஷ்டமாக மாற்றிக் கொடுத்தீர்கள். இதற்குப் பிறகுதான் எனது வாழ்க்கையில் நம்ப முடியாத பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. பெயரை மாற்றினால் இப்படியும் நடக்குமா? என்று எண்ணி நானே ஆச்சரியப்பட்டுப் போனேன். இப்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். உங்களுக்கு நன்றி சொல்லத்தான் இப்போது போன் பண்ணினேன்.

அதோடு இன்னுமொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். எங்களது பக்கத்து வீட்டில் இருக்கும் குடும்பத்தினருக்கு நிறையவே பிரச்சினைகள் இருக்கிறது. அவர்களையும் அழைத்துக் கொண்டு விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன் என்றார்.

சரியான முறையில் பெயர் மாற்றம் செய்தால் இப்படியான நன்மைகள் ஏற்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், தப்பான முறையில் பெயர் மாற்றம் செய்து கொடுத்தால் விபரீதமான விளைவுகள் ஏற்படும். இதற்கும் ஓர் எடுத்துக்காட்டு என்னிடம் இருக்கிறது. தினகரன் வார மஞ்சரியில் வரும் கட்டுரைத் தொடரைப் படித்து விட்டு திடீரென்று ஒரு தம்பதியினர் என்னிடம் வந்தார்கள். அவர்களிடம் ஆவேசம் அடைக்கலம் புகுந்திருந்தது. என்னவென்று விசாரித்தேன்.

“பெயரை மாற்றிக் கொண் டால் அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என்று பத்திரிகையில் எழுதி வருகிaர்கள். ஆனால்,பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு, எனது குழந்தைக்கு பெயர் மாற்றச் சென்றேன். அங்கும் பெயரை மாற்றிக் கொடுத்தார். ஆனால் நடந்தது என்ன தெரியுமா? என்று கேட்டு விட்டு அந்தப் பெண்மணி எனது முகத்தை உற்றுப் பார்த்தார்.

அவர் பார்வையில் வேதனை வேறூன்றியிருந்தது. “என்ன நடந்தது” மூன்று மாதங்களுக்குப் பிறகு விபத்தொன்றில் சிக்கி எங்கள் குழந்தை இறந்து விட்டது. இப்படி சொல்லும் போது அந்தப் பெண்மணியின் விழிகளுக்குள் கங்கை நதி புகுந்து விட்டதைப் போலிந்தது.

சில நிமிடங்கள் அமைதி, நானும் மெளனமாகவே இருந்தேன். சோதிடத்தை நம்புவதில்லை என்று நாங்கள் முடிவு செய்தோம். சிறிது நேரத்திற்குப் பிறகு கணவர் தான் பேசினார்.

இதைப் பற்றி பெயரை மாற்றிக் கொடுத்தவரிடம் நீங்கள் கேட்கவில்லையா என்று நான் கேட்டேன். “கேட்டோம். பெயர் மாற்றியதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. பெயர் மாற்றத்தினால் அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லி விட்டார்.

அவர் எந்த எண்ணுக்கு பெயரை மாற்றிக் கொடுத்திருக்கிறார் என்று பார்த்தேன். வியப்பு என்னை விழுங்கிக்கொண்டது. ஆச்சரியம் என்னை அள்ளித் தின்றது.

காரணம் என்ன தெரியுமா?

அந்தக் குழந்தையின் பிறப்பு எண் 2. அவர் பெயர் வைத்திருக்கும் எண் 9. இவை இரண்டுமே ஜென்மப் பகையான எண்கள். இந்த இரண்டு எண்களும் சங்கமமாகும் போது விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. பொதுவாகவே நவீன எண் சோதிட முறைப்படி 2ஆம் எண்காரர்களுக்கு 9ஆம் எண்ணில் பெயர் வைப்பதே இல்லை. இதில்தான் தவறு நடந்திருக்கிறது. இவற்றை எல்லாம் அவர்களுக்கு விபரமாக எடுத்துக்கூறினேன். எண் சோதிடத்தில் தவறு இல்லை. நீங்கள் சந்தித்த நபரிடம் தான் தவறு இருக்கிறது என்பதையும் அவர்களுக்கு புரிய வைத்து அனுப்பினேன்.

பிறந்த திகதியில் உள்ள எண்களில் 7ஆம் எண் இருந்தால் வெளிநாட்டுப் பயணம் இருக்குமா? என்று பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாகவே இந்த 7ஆம் எண்ணை எடுத்துக் கொண்டால் மிகவும் சக்தி வாய்ந்த ஓர், எண்ணாகவே அது கருதப்படுகிறது. கலைத் துறையில் புகழ்பெறுவதற்கு வெளிநாடுகளில் புகழைப் பரப்புவதும் இந்த 7ஆம் எண்ணின் வேலை. ஒருவருடைய பிறந்த திகதியில் எந்த இடத்தில் இந்த 7ஆம் எண் இருந்தாலும் அவர்களுக்கு கண்டிப்பாக வெளிநாட்டுப் பயணம் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த எண்காரர்களுக்கும் 4ஆம் எண்காரர்களுக்கும் இடையில் ஒருவித காந்த சக்தி இருக்கிறது. இவர்கள் சந்தித்தவுடன் காதல் கொள்வார்கள். ஆனாலும் திருமணம் செய்து கொண்டால் சிலருக்கு பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும். 7ஆம் எண்காரர்களின் தாம்பத்திய வாழ்வில் நிறையவே குறைபாடுகள் இருக்கும். இவர்களின் மன நிலை அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். காலையில் ஒன்று பேசினால் மாலையில் வேறொன்று பேசுவார்கள்.

விதி எண்ணில் 7ஆம் எண் இருந்தால் 45 வயதில் இருந்து 52 1/2 வயது வரையில் வர்த்தகத் துறையிலும் வாழ்க்கையிலும் கொடி கட்டிப் பப்பார்கள். அதன் பிறகு எவ்வளவு விரைவாக உயர்ந்தார்களோ அதை விட வேகமாக கீழே இறங்குவார்கள்.

சொத்து சுகங்களை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் அதேபோல் இதயம் சம்பந்தமான (HEART ATTACK) நோய்கள் வரக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும் பெயர் அதிர்ஷ்மாக இருந்தால் அதில் மாற்றம் ஏற்படலாம்.

இவர்கள் பிறந்த இடம் ஒன்றாகவும் வாழ்கின்ற இடம் வேறாகவும் இருக்கும். சில சமயங்களில் வெளிநாட்டில் சென்று வாழக்கூடிய சூழ்நிலைகளும் உருவாகும்.

அடுத்தவாரமும் பயனுள்ள ஆக்கம் ஒன்றுடன் சந்திக்கும் வரை ஐயங்களைப் போக்கிக் கொள்ள அழுத்த வேண்டிய எண்கள் 0777686741

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.