புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
கல்ஹின்னை எஸ்.எம். ஜுனைத் ஆலிம் ஸாஹிப்

கல்ஹின்னை எஸ்.எம். ஜுனைத் ஆலிம் ஸாஹிப்

நீத்தார் பெருமை

கல்ஹின்னை மண் ஈன்றெடுத்த மூத்த உலமாக்களில் ஜுனைத் ஆலிம் ஸாஹிபும் ஒருவராவார். பரிசாரிக் குடும்பம் என அழைக்கப்படும் அஸ்ஸெய்யத் முஹம்மத் ஆலிம் ஸாஹிப் சுலைஹா உம்மா தம்பதிகளின் மூத்த புதல்வராக 1923 ஆம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி கல்ஹின்னையில் பிறந்தார்.

ஆரம்பக் கல்வியை கல்ஹின்னை கமாலியா முஸ்லிம் பாடசா லையில் கற்று தனது மார்க்கக் கல்வியை இலங்கையின் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட மத்ர ஸாவான வெலிகம் பாரி அரபுக் கல்லூரியில் 1937 ல் தொடர்ந்தார். 1946 இல் பட்டம் பெற்று மெளல வியாக வெளியானார்.

மத்ரஸாக் காலங்களில் கற்றுக் கொண்டிருக்கும் போது இஸ்மாயில் ஆலிமுடன் இணைந்து இலங் கையின் முதல் ஹாபிழான மர்ஹ¥ம் ஸக்கரியா ஆலிம் (ரஹ்) அவர்களுடன் தனது தகப்பனார் மூலம் கிடைத்த அறிமுகத்தை சரியாகப் பயன்படுத்தி 1947 களில் கல்ஹின்னை ஜாமியத்துல் பத்தாஹ் அரபுக் கல்லூரியின் உருவாகத்திற்கு வித்திட்டார்.

தனது தகப்பனாரின் வபாத்தின் பின் கல்ஹின் னையில் பாரிய மார்க்கப் பணிகளை செய்து வந்தார்.

1954 இல் தனது முதலாவது ஹஜ் கடமையை நிறைவேற்றிய இவர் மேலும் பல ஹஜ் கடமை களையும் உம்றாக்களையும் நிறைவேற்றியுள்ளார்.

ஒரு நாளைக்கு புனித அல்குர்ஆனின் 5 ஜுசுக்களுக்கு மேல் ஓதக்கூடியவராக இருந்து வந்துள்ளார்.

கல்ஹின்னையில் அனேகமான வீடுகளுக்கு அத்தி வாரக் கல் வைத்து ஆரம்பித்து வைத்துள்ளார். அது மாத்திரமல்ல வாசல் கடத்தல் (நிலை பாய்தல்) பெரியார் என்ற சம்பிரதாய அடிப்படையில் அநேக வீடுகளில் இவரைத்தான் அழைப்பார்கள்.

1949 ஆம் ஆண்டு முதல் ஜாமியத்துல் பத்தாஹ் அரபுக் கல்லூரியின் 11 பேர் கெண்ட ஆலோசனைக் கமிட்டியிலும் மற்றும் 1976 முதல் 1998 வரையான காலப்பகுதியில் மத்ரஸாவின் நிர்வாகத் தலைவ ராகவும் செயற்பட்டுள்ளார். 1958 இல் மெளலவி ஆசிரியராக நியமனம் பெற்று கெகிராவ கனேவல் பொல முஸ்லிம் வித்தியாலயத்திலும் குருநாகல் சதுருவெலான முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலும் தனது ஆசிரியப் பணியைச் செய்த அவர் 1984 இல் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

கல்ஹின் னையில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக மிக நீன்ட காலம் செயற்பட்டார். தனது இறுதிக்காலத்தில் நோயினால் அவதிப்பட்டு தனது 93வது வயதில் 03.09.2015 அன்று வியாழக் கிழமை கண்டி தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து இறையடி சேர்ந்தார். அன்றைய தினம் இஷாத் தொழுகையை அடுத்து பெருந்திரளான மக்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டு அன்னாருக்காக துஆப் பிரார்த்தனையிலும் ஈட்டார்கள். யா அல்லாஹ்! அன்னாருடைய பாவங் களை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தெளசினை வழங்குவானாக! ஆமீன் யாறப்பல் ஆலமீன்!

“அல்ஹம்துலில்லாஹ்”

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.