புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
அமைச்சரும் அமைச்சும் புதியவை ஆனால் கொள்கைகள் புதியவை அல்ல

அமைச்சரும் அமைச்சும் புதியவை ஆனால் கொள்கைகள் புதியவை அல்ல

மனோ கணேசன் தேசிய உரையாடல் அமைச்சர்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அண்மையில் தேசிய உரையாடல் அமைச்சராக நியமனம் பெற்றார். மாறுபட்ட கருத்துக்கொண்ட குழுக்களை நல்லிணக்கத்துக்குக் கொண்டுவர இந்த அமைச்சு கடமையாற்றும் என அவர் கூறினார். அமைச்சின் பணிகள், மற்றும் தற்கால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் அமைச்சர் மனோ தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விஷேட செவ்வி

கேள்வி: தேசிய உரையாடல் அமைச்சு என்பது புதியது. அதன் அமைச்சர் என்ற வகையில் உங்கள் அதிகார அலகு அல்லது நிர்வாக வரம்புக்குட்பட்ட அம்சங்கள் எவை என்று கூறுவீர்கள?

பதில்: அமைச்சரும் புதியவர். அமைச்சும் புதிது. ஆனால் அதன் கொள்கைகள் புதியவை அல்ல. நீண்ட காலமாக உரையாடல் பற்றி நாம் பேசி வருகின்றோம். மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களை ஒரு வழிக்குக் கொண்டு வருவது நாட்டின் தேவை. அதை ஆக்கபூர்வமாகக் கொண்டுவருவதுதான் பிரச்சினை. ஆக்கபூர்வமான அரசியல் சூழ் நிலை, தலைமைத்துவத் திறமையிலேயே தங்கி இருக்கிறது. திறமையுள்ள ஜனாதிபதியையும் பிரதமரையும் கொண்ட நல்லாட்சி அரசை நாம் நிறுவி இருக்கின்றோம். எனவே இத் துறையில் நாம் முன்னேற்றம் காண முடியும் என நம்புகின்றோம்.

நான் இன, மத ரீதியான மக்கள் குழுக் களுடன் உரையாடல்களை நடாத்திவருகிறேன். அத்துடன் நிறுத்தாமல் நான் பிரதேச ரீதியா கவும் தொழில் ரீதியாகவும் வயது, வரம்பு, சாதி ரீதியாகவும், சமூகப் பின்னடைவைச் சந்தித்துள்ள மக்கள் குழுக்களைத் தேசிய ரீதியாக ஒருமைப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சி செய்ய இருக்கிறேன். சம உரிமைக் கோட்பாட்டிலான உளப்பாங்கு இதற்குத் தேவை. சாதி ரீதியாகவும் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாகவும் உள்ள முட்டுக் கட்டைகளை நீக்க நான் இயன்றவரை பாடுபடுவேன்.

மக்களின் ஒருமைப்பாட்டுக்குத் தடையானவற்றை நீக்கவும் எனது அமைச்சைப் பயன்படுத்துவேன். தேசியப் பிரச்சினையாகவுள்ள இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ், முஸ்லிம் அரசியல் தலை வர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும். தமிழர் முற்போக்கு முன்னணி சார்ந்த நானும் அதில் இடம்பெறுவேன். அமைச்சரவை அமை ச்சர் என்ற வகையிலே அடிமட்டத்திலிருந்து பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறேன். அரசியல் தீர்வு மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்துக்கு வருவதே சரி. இயல்பாக அது நடைபெறும் வரை பொறுத்திருக்காது. கீழ்மட் டத்திலிருந்து மேல் மட்டத்துக்குக் கொண்டுவரச் செயல்படுவேன்.

கேள்வி: சமூகப் பின்னடைவான மக்கள் பற்றிப் பேசும் போது சாதி பற்றியும் குறிப்பிட்டார்கள். தற்போது சாதிப் பாகுபாடு நம் சமூகத்தில் இருக்கிறதா?

பதில்: சாதி வேற்றுமையை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். புதிய சமூகத்தில் உள்ள நீங்களும் நானும் ஏற்க மாட்டோம். ஆனால் தெற்கிலும் வடக்கிலும் சில சமூகப் புரட்சிகளுக்கு அது காரணமாக இருந்திருக்கிறது. அதைவிட்டு விட்டு சமூகத்தில் பின்னடைந்த மக்கள் பற்றித் தற்போது சிந்திப்போம். சமூக முன்னேற்ற ரீதியான செயற்பாடுகளுக்குப் பிரதமரின் ஆசி யுண்டு. சமூகத்திலே நசுக்கப்பட்டவர்களின் குரலைக் கேட்பாரில்லை. நாம் கேட்கத்தான் வேண்டும்.

இவ்வாறான சமூக முரண்பாடுகள் சிங்கள, தமிழ் சமூகங்களிடையே உள்ளன. இந்தியாவிலே பின் தங்கிய சமூகத்துக்கான சலுகைகள் உள் ளன. மலையகத் தோட்ட மக்கள் இன ரீதி யாகவும் சமூக ரீதியாகவும் பின்னடைவைக் கொண்டவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? விரிவான கண்ணோட்டத்தில் பின் தங்கிய சிங் கள - தமிழ் சமூகங்களின் பிரச்சினைகளை நாம் அணுக வேண்டும்.

கேள்வி: சமூகப் பிரச்சினைகளைக் கவனிக்க புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சு, தேசிய மொழிகளுக்கான அமைச்சு எனப் பல அமைச்சுகள் இருந்தபோதும் தேசிய உரையாடல் அமைச்சு என ஒன்று தேவை என நீங்கள் கருதுகிaர்களா?

பதில்: தேசிய மொழிகள் அமைச்சென்று ஒன்று இல்லை. அரச மொழிகளின் நிர்வாகப் பகுதியும் ஆணையமும் எனது அமைச்சின் கீழ் வருகின்றன. புனர்வாழ்வு, புனரமைப்பு என்ற அம்சங்கள் அமைச்சர் சுவாமிநாதனின் அமைச்சுக்குரியவை. அவை செயற்பாடுக ளுடன் தொடர்பானவை - முக்கியமானவை. உரையாடல் என்பது வேறு வகைச் செயற்பாடு, உரையாடல் மூலம் உள்ளங்களை ஓர் இண க்கப்பாட்டுக்குக் கொண்டுவரும் மானதரீதியான செயற்பாடு.

சமூக பொருளாதார முன்னுரிமைத்திட்டங் கள் எங்கள் அரசில் உள்ளன. தொழில் வாய் ப்பு மூ:லம் சமூக மேம்பாடு, வீடமைப்பு, தெருவமைப்பு, இளைஞர், பெண்கள் பின்தங்கியோரை மேம்படுத்தல், கல்வி அபிவிருத்தி, சுகநல அபிவிருத்தி போன்றவற்றுக்கு முன்னுரிமைச் செயற்பாடு உண்டு.

ஜனாதிபதியையும் பிரதமரையும் தலைமை யாகக் கொண்ட எங்கள் அரசு இலஞ்சம் வீண்விரயம் இன்றி தனது இலக்குகளை அடையும் என்று கூறலாம்.

சிறந்த உரையாடல் மூலம் ஏற்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே சமூக பொருளாதார மேம்பாடு சாத்தியமாகும். நல்லிணக்கம் மூலம் நமது அடைவுகளைப் பெறுவது அரச நடவடிக்கைகளில் முதன்மைத்துவம் பெறுகிறது. இந்த முக்கிய அம்சத்தை எனது அமைச்சே கையாள்கி றது. பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த விஷயத்தில் வெற்றியடைவதில் அமைச் சுடன் இணைந்து பிரதமர் மிகக் கரிசனையாக இருக்கிறார். பொதுமக்கள், சமயத்தலைவர்கள், தொழிற் சங்கங்கள், பெண்கள், இளைஞர்கள், சமூகத்தில் பின்னடைந்தவர்கள் அனை வரின் ஒத்துழைப்பும் இதற்கு பெறப்படும்.

எனக்கு இது புதிய விஷயமல்ல. நான் ஓர் அமைச்சர், கட்சித் தலைவர் என்பதை விட சமூக நல ஊழியனாகவே வாழப் பழகியவன். எனது தன்னலமற்ற சேவையால் உலக சமுதாயத்தால் மதிக்கப்பட்டிருக்கிறேன். எமது சமூக பொருளாதார அடைவுகளைப் பெற ஜனநாயக மேடைகளையும் முற்போக்குக் கட்சிகளின் ஒத்துழைப்பையும் கடந்த காலங்களில் பெற்று வந்தோம். வெள்ளை வான் கலாசாரத்தால் கடந்த காலங்களில் இருண்ட ஒரு காலகட்டத்தையும் சந்தித் தோம். பாதுகாப்பற்ற அந்தக் காலகட்டத்தில் என் இனிய நண்பர் நடராஜா ரவிராஜ் எம்.பி.கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நண்பர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டார்.

இருண்ட யுகத்தில் நாட்டிலே கடத்தப்பட்டவர்களின் குடும்ப அமைப்புகளும் போர்க்கால விதவைகளின் அமைப்புகளும், பெண்கள் விடுதலை இயக் கங்களும் சமூக நலன் காக்கும் அமைப்புக்களும் சமாதான சூழ்நிலை வேண்டி ஏங்கித் தவித்தன. சோபித தேரரின் சமூக நீதிக்கான தேசிய அமைப் பும், புறவசிபலயா, பிரஜைகள் குழுக்களும் சமூக ஆர்வலர்களும் தொழிற்சங்கங்களும் கூட நாட்டில் சாதானம் நிலைக்க ஒத்துழைத்தன. அமைச்சின் உதவியுடன் இந்தச் சமாதான அடைவை எட்ட நான் விழிப்புடன் செயற்படுகிறேன். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் நிலையான ஒத்துழைப்பு எமக்கு உண்டு. அவ ரது தலைமைத்துவமும் வழிகாட்டலும் அமை ப்புகளின் செல்நெறிக்குத் தேவை. நாட்டின் பிரதான அரசியல் கட்சித் தலைவராக இருந்த அவர் நல்ல காரியங்களை முன்னெடுக்க உதவுகிறார்.

ஒரு காலத்திலே அவருக்கும் எனக்கும் கல்லெறிந்தார்கள். எனினும் எமது இலட்சியத் தைக் கைவிடாது விடாப்பிடியாய் நின்று காரி யங்களைச் சாதித்தோம். சமூக அமைப்புகளின் தலையாய கடமை பற்றி அவர் நன்கறிந்தவர். எனவே நிதானமான சமூக அமைப்புக்களின் உதவியுடன் ஆட்சியமைக்க முடிந்தது. அவரது நெருக்கடியான காலங்களில் நான் அவருக்கு ஒத்துழைப்பு நல்கினேன். எனவே சமூக அமைப்பிலுள்ள நண்பர்களின் உதவி எமக்குப் புதியது அல்ல. சமூக நலனுக்காக அமைக்கப் படும் என்.ஜீ.ஓ க்கள் எனது அமைச்சின் கீழேயே வருகின்றன.

கேள்வி: தமிழ் முற்போக்கு கூட்டணி மலையகத் தமிழரின் நலனுக்காக அமைக்கப்பட்டது. உங்களுக்கு கிடைத்துள்ள அமைச்சு மூலம் தென்னிலங்கைத் தமிழரின் அபிலாஷைகளையும் மலையகத்தவரின் அபிலாஷைகளையும் நிறைவேற்ற என்ன செய்ய இருக்கிaர்கள் என்று கூற முடியுமா?

பதில்: மலையகத் தமிழர் என்று மட்டுமின்றிப் பரவலாக நாட்டின் தமிழ் சமூகம் என்ற நிலையில் பார்க்கிறோம். முற்போக்கு என்பது இன, மத பேதமற்றதாக அமையும். 1.6 மில்லி யன் தமிழ் மக்கள் நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு ஏனைய இடங்களிலும் வாழ்கிறார்கள். ஆகஸ்ட் 17 தேர்தலிலே ஏகோபித்த தமிழ் மக்களின் உதவி எமக்குக் கிடைத்தது.

குறுகிய காலத்துள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றோம். இந்த 1.6 மில்லியன் தமிழ் மக்க ளுள் இரண்டு இலட்சம் பேர் மலையகத் தமி ழர்கள். பொருளாதார சமூக ரீதியாக இவர்கள் பின்னடைவில் வாழ்கிறார்கள். முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற ரீதியில் அவர்களது நல்வாழ்வில் எனக்கு அக்கறை உண்டு. நான் முன்னே கூறியபடி எனது அமைச்சின் பிரதான கடமை சமூகப் பின்ன டைவை அனுபவிக்கும் மக்களுக்கு உதவுவதா கும். அவர்களின் வாழ்க்கை நிலையை மேம் படுத்தி மற்ற மக்களுடன் சமமாக இணையச் செல்வதே எனது கடமைகளுள் பிரதானமானது. இந்தத் துரதிஷ்டசாலிகளின் வாழ்வை மேம் படுத்த ஏனைய அமைச்சுக்களினதும், சர்வதேச சமூகத்தினதும் உதவிகளைப் பெற நடவடிக்கை எடுப்பேன். முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தர்கள் பழனி திகாம்பர மும், வி. இராதாகிருஷ்ணனும் தோட்டத் தொழிலாளரின் நலனுக்கான அமைச்சராகவும், கல்விப் பிரதி அமைச்சராகவும் பணியாற்றுகின்றார் கள். எனது அமைச்சு அவர்களுடன் (Cordinate) முக்கிய தொடர்புகள் வைத்திருந்து தொழிலாளரின் நலனுக்குப் பாடுபடும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.