புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 

வாழ்வியல் தத்துவங்களை உணர்த்தும் அல்லித் தோட்டம்

வாழ்வியல் தத்துவங்களை

உணர்த்தும் அல்லித் தோட்டம்

கினிகத்தேனை பகுதியில் கெனில் வர்த் (அல்லி) தோட்டமானது கினிகத்தேனை நகரத்தின் மேற்கு பகுதியில் சுமார் 5 கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது.

கொழும்பு பிரதான வீதி மற்றும் நாவலப்பிட்டி வீதிகள் ஊடாக இத்தோட்டத்திற்கு செல்லமுடியும். தோட்டத்தின் நுழைவாயிலின் இரும ருங்கிலும் உள்ள பூச்செடிகள் வருவோரை மகிழ்ச்சியோடு வரவேற்கும் வகையில் காட்சியளிக்கின்றன.

கெனில்வர்த் தோட்டமானது ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது. மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு மூவின மக்களும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இத்தோட்டத்தின் சிறப்பு என்னவென்றால் தேயிலை தோட்டங்களில் காட்சிப்படுத் தப்பட்டுள்ள படங்களேயாகும். இப்படங்கள் இத்தோட்டத்தை மென்மேலும் அலங்கரிப் பதுடன் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் எல்லோரையும் சிந்திக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

ஒரு சரணாலயத்திலோ அல்லது பூங்காவிலோ சென்று தகவல்களைப் பெறக்கூடிய வகையில் வழிகாட்டல்களும் காணப்படு கின்றன.

தரம் ஐந்து வரையான மாணவர் களுக்கு இயற்கையில் அவதானம் செலுத்தும் வகையில் இயற்கையில் காணப்படும் உயிரினங்கள் மற்றும் சூழல் சார்ந்த விடயங்களை தேடியறியக்கூடிய கற்பித்தல் முறைகளும் அங்கு காணப்ப டுகின்றன.

இங்கு உயிரினங்கள், மரங்களின் பெயர்கள், குறியீடுகள், பறவைகள், மிருகங்கள் போன்ற அனைத்து தகவல்களும் இத்தோட்டப் பாதையில் இரு மருங்கிலும் காட் சியப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வாழ்க்கையில் தங்களை மாற்றிக்கொள்வதற்கான வாசகங்கள் இடை இடையே பொறிக்கப்பட்டுள்ளன. உண்மையில் இவ்வாறான வாசகங்கள் மக்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்கான ஓர் உந்துசக்தியென்றால் மிகையாகாது.

இத்தோட்டத்தில் மழைக்காட்டு தத்துவம் தொடர்பில் சமூக மற்றும் சுற்றாடல் முகாமைத்துவ முறைமை, சூழல் தொகுதி பராமரிப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, நீர் பராமரிப்பு, பாரபட்சமற்ற நடைமுறையும் சிறந்த தொழில் சூழலையும் பணியாளர் களுக்கு வழங்கல், தொழில் சம்பந்தமான சுகாதாரமும் பாதுகாப்பும், சமூக தொடர் புகள், ஒன்றிணைக்கப்பட்ட பயிர் முகாமைத்துவம், மண் முகாமைத்துவம், ஒன்றிணைக்கப்பட்ட கழிவு முகாமைத்துவம் ஆகிய பத்து அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தத்துவ செயற்பாடுகளுக்கேற்ப தொழிலாளர்கள் வழிநடத்தப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

குறித்த பகுதிக்கு இரசாயனம் தெளிப்பவர்கள் மாத்திரமே செல்லவேண்டு மென்பதோடு, இரசாயனம் தெளிப்பதற்கு முன் தொழிலாளர்கள் என்ன செய்யவேண்டும். இரசாயனம் தெளித்த பின் என்ன செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இத்தோட்ட மக்களின் அன்றாட நடவடிக்கைகள் ஏனைய தோட்டங்களை விட சற்று வித்தியாசமான முறையில் காணப்படுகின்றது. அவர்கள் வாழ்க்கையோடு கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள், வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள், தோட்ட நிர்வாகத்தால் மக்களை விழிப் படையச் செய்யும் முறைகள் ஏனைய தோட்டங்களுக்கு எடுத்துக்காட்டாகவே அமைகின்றது.

அல்லித்தோட்ட மக்களுடைய வாழ்க்கைத் தர உயர்ச்சிக்கு சில தொண்டு நிறுவனங்கள் உதவி புரிகின்றன. அதற்கு பெரண்டினா நிறுவனம் இத்தோட்ட மக்களின் வாழ்க்கை தர உயர்ச்சிக்கு கைகொடுக்கின்றது.

இந் நிறுவனத்தினூடாக இம்மக்களின் மலசலகூட வசதி, நீர்வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதோடு சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஒரு வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பான அம்சமாகும்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான வேலைத் திட்டமானது வயது முதிர்ந்தவர்களை அடிப்படையாகக் கொண்ட வேலைத் திட்டமாகும். இவர்களுக்கான மாதாந்தம் சிறு தொகையை வழங்குதல், சுற்றுலா அழைத்துச்செல்லல், கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, அவர்களை பங்குபெற வைத்து சந்தோசப்படுத்தல், மரண ஆதாரம் வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்களை அறிமுகம் செய்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கலைப்பண்பாட்டினை பாதுகாக்கும் நோக்கில் வருடந்தோறும் காமன்கூத்து நிகழ்வை நடத்துதல், இளைஞர் கழகத்தி னூடாக கலைநிகழ்வுகள் நடத்துதல் என்பன சிறப்பாக இடம்பெற்றுக் கொண் டிருக்கின்றன.

முன்பள்ளி பாடசாலை தோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகின்றனது.

கெனில்வர்த் இல 1, கெனில்வர்த் இல 2 ஆகிய இரு பாடசாலைகள் இத்தோட்ட மக்களின் இளம் சமூதாயத்திற்கு கல்வியை வழங்கும் ஆரம்ப பாடசாலை நிறுவனங்களாக காணப்படுகின்றன. இவ் ஆரம்ப பாடசாலையூடாக சிறந்த கல்வியை வழங்கினாலும் இடைநிலை கல்வியூடாக சற்று தொய்வான நிலைக்கு சென்று விடுகின்றது.

இதற்கு வழிகோலும் வகையில் இத்தோட்டத்தில் அரசாங்க உயர் தொழிலை கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது. இதுவரை இத்தோட்டத்தில் ஆசிரிய தொழிலில் மூன்று பேர் மாத்திரமே ஆசிரியர்களாக காணப்படு கின்றனர்.

இது தவிர வேறு படித்த உயர்தொழிலை வகிப்போர் எவரும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் இத்தோட்டம் கல்வி நிலையில் சற்று வீழ்ச்சியைக்காட்டுகின்றது.

தோட்ட பாடசாலையில் ஆசிரியர் வெற்றிடம் நிலவியதாகவும் அண்மையில் ஆசிரிய உதவியாளர் நியமனத்தில் இப் பாடசாலைக்கு நியமனம் வழங்கப்பட் டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தவிரவும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இத் தோட்டத்தில் சித்தியடைந்த வீதம் இது வரை மிக குறைவாக இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தரம் 6க்கு வேறுபாடசாலைக்கு செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டம் அமைதியாக இருந்தாலும் இத்தோட்டத்தில் மதுபானத்திற்கு இளைஞர்கள் அடிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். இதனாலேயே எமது தோட்டத்தில் கல்வி நிலை மிக தாழ்வான நிலைக்கு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

(மேற்படியான விடயம் செய்தி சேகரிக்க சென்ற போது பாதையின் அருகில் இருந்ததை அவதானிக்க கூடியதாகவி ருந்தது.)இத்தோட்டத்தில் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களாக பின்வருவனவற்றை தெரிவித்தனர்.

பாடசாலை பிள்ளைகளுக்கு முறையான பஸ் சேவை ஒன்று இல்லாததினால் எமது பிள்ளைகள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தமது தோட்டத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரமுள்ள பிரதான வீதிக்கு நடந்தே செல்ல வேண்டும். எனவே எமதுதோட் டத்திற்கு அரச பஸ் சேவையொன்றை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் எமது தோட்டத்தில் வாசிகசாலை யொன்றை அமைத்து தருமாறு கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.