புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

ஊர் இரண்டு பட்டால் யாருக்கு கொண்டாட்டம்

ஊர் இரண்டு பட்டால் யாருக்கு கொண்டாட்டம்

‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்’ என்பது முதுமொழி. இந்த நிலைதான் இப்போது தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பிளவு ஒரு தரப்பிற்கு கொண்டாட்டமாக உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி எமக்கிடையே பிளவுகள் எதுவும் இல்லை, நாம் எப்போதும் போலவே ஒற்றுமையா கவே இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறி க்கை விட்டாலும், பேட்டி கொடுத்தாலும் மற்றுமொரு முது மொழியான ‘நெருப்பில்லாமல் புகையாது’ என்ற கோணத்தி லும் இவ்விடயத்தை நாம் நோக்கியே ஆக வேண்டும்.

ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் சிறு சிறு சச் சரவுகள் ஏற்பட்டுள்ளதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகி றது. ஊடகங்கள் சில இவற்றை மிகைப்படுத்தினாலும் அவ் வாறு எதுவும் இல்லை எனக் கூறிவிடவும் முடியாது. அந்த அமைப்பின் ஒருசில அரசியல் தலைவர்கள் சுயலாப அரசிய லுக்காக விட்டுவரும் எதிர்மறையான அறிக்கைகள் இதனை உறுதி செய்வதாக உள்ளது.

உண்மையில் இந்நாட்டில் வாழ்கின்ற குறிப்பாக வடக்கு, கிழ க்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக தமிழ்க் கூட்டமைப்பே உள்ளது. குறிப்பாக அம்மக்களின் அரசியல் எதிர்காலத்தை, தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட பலம் பொருந்திய அமைப்பாக அது காணப்படுகிறது. தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க அன்று புலிகள் அமைப்பு ஆயுதங்கள் ஏந்திப் போராடியது போன்றே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாகப் போராடி வருகிறது. இதனைத் தமிழ் மக்கள் அங்கீகரித்தும் உள்ளனர்.

இதன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட க்கு கிழக்கில் அம்மக்களது ஆதரவுடன் பல தேர்தல் வெற்றி களைக் கண்டு வருகிறது. அந்த மக்கள் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்குள் ஒரு சிறு பிளவு ஏற்படுவதைக்கூட விரும்ப மாட்டார்கள். இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பும் அம்மக்களின் இந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாகவே நட ந்துவருகிறது. தனது கட்டுக் கோப்பிலிருந்து தமிழ்க் கூட்ட மைப்பு இம்மியளவும் விலகவில்லை.

பதவி மற்றும் சலுகைகள் மீதான ஆசை காரணமாகப் பிரி ந்து சென்றவர்கள்கூட மக்களின் வெறுப்பிற்கு ஆளாகி மீண் டும் தலைமையிடம் மன்னிப்புக் கேட்டு இணைந்து கொண்ட வரலாற்றையே நாம் கண்டிருக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட் டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற எவரும் ஒரு சிறு தேர்தலில் கூட வெற்றி பெற்றதாக பதிவுகள் இல்லை.

நிலைமை இவ்வா றிருக்க தற்போது அக்கூட்டமைப்பிற்குள் பதவி மோகம் கொண்ட சிலரால் மீண்டும் சிறு சிறு சச்சரவுகள் தோற்றுவிக் கப்பட்டு வருவதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

எமது நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை யில் அநேகமாக சகல கட்சிகளுக்குள்ளும் உட்கட்சிப் பூசல் கள் நிறையவே உள்ளது. ஒரு கட்சி இரண்டாகி அது பின்னர் மூன்றாகி என்று பல்வேறு பிளவுகள் கட்சிகளுக்குள் காணப் படுகிறது.

அவற்றுடன் ஒப்பிடுகையில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைமை தனது கொள்கையிலிருந்து மாறாமல் அக் கட்சி இன்னமும் ஒற்றுமையாகவே உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

இந்த ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு திரை மறைவில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. முன்னர் அதாவது கடந்த ஆட்சியில் தமிழ்க் கூட்டமைப்பை பிளவுபடுத்த அரசாங்கத் தரப்பினாலேயே நேரடியான முயற்சிகள் எடுக்கப்பட்டன. கூட் டமைப்பின் உறுப்பினர்கள் சிலருக்கு சலுகைகள், பதவிகள் என்பவற்றைக் காட்டியும், வழங்கியும் ஆசையை வரவழைத்து உட்கட்சிப் பூசலை ஏற்படுத்த அவர்களால் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அவை எத ற்கும் சோரம் போகவில்லை. தம்மை நம்பியுள்ள மக்களுக் காவே அவர்கள் அரசியல் செய்தார்கள். சில ஊடகங்கள் மூலமாக கூட்டமைப்பிற்குள் பிளவுகளை ஏற்படுத்தும் வகை யில் செய்திகளை வெளியிட்டார்கள்.

கூட்டமைப்பிலுள்ள தலை வர்கள் சிலரது பிள்ளைகளுக்கு அவர்கள் கேட்காமல் தாமா கவே முன்வந்து வெளிநாட்டு புலமைப் பரிசில்களையும், வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதிகளையும் பெற்றுக் கொடுத்தார்கள். இவை எவற்றுக்கும் கூட்டமைப்பின் தலைவர் கள் தலை சாய்க்கவில்லை.

அன்று அரசாங்கம் செய்த அதே முயற்சிகளை இன்று வேறு சில சக்திகள் உள்நாட்டிலும், புலத்திலும் மேற்கொண்டு வருகின்றன. இத்தீய சக்திகள் சிலரது தேவைகளை நிறை வேற்ற உள்ளூரில் கைக்கூலிகளாக தமிழ்க் கூட்டமைப்பைப் பிளவுபடுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளன.

அவற்றுக்குச் சில ஊடகங்களும், இணையத் தளங்களும் துணை போய்க் கொண்டிருக்கின்றன. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்தச் சதி முயற்சிகள் வலுப்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடயத்திலிருந்து ஜெனீவா கூட்டத் தொடர் மற்றும் உள்ளக போர்க்குற்ற விசா ரணை வரையில் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து கூட் டமைப்பிற்குள் குழப்பம் எனக் காட்டுவதில் இந்தக் குழு தீவி ரமாக உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஐக்கிய தேசியக் கட்சியுடனும், ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுடனும் இணைந்து செயற்படுவதை இத்தீய சக்திகள் விரும்பவில்லை என்பது தெட்டத் தெளிவாகிறது.

அதிலும் தமிழ் மக்களது தீர்க்கப்படாதிருக்கும் இனப்பிரச் சினைக்குத் தீர்வு காணப்படுவதை இத்தீய சக்திகள் விரும்ப வில்லை என்பதாக அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன.

புலத்திலிருந்து தீவிரமாகச் செயற்படும் இக்குழுக்கள் உள்நாட்டில் தமிழர் விரோதப் போக்குள்ள தமிழ் அரசியல் வாதிகள் சிலரை இம்முயற்சிக்குப் பயன்படுத்தி வருகின்றன. இத்தீய சக்திகளின் சதிவலையில் அவ்வப்போது சில தலை மைகள் வழுக்கி விழுந்தாலும் ஒருபோதும் இன்னமும் நிரந்த ரமாக விழுந்து விடவில்லை.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மட்டுமல்ல முழு நாட்டு தமிழ்ச் சமூகமும் தமது தலைமையாகக் கருதிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்தின் உதவியுடன் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாகத் தமிழ் மக் களுக்கு நல்லதோர் தீர்வினைப் பெற்றுத் தரும் எனும் நம்பி க்கை சகலருக்குமே உள்ளன.

இதனைச் சீர்குலைக்க முயலும் தீய சக்திகளுக்கு எவ்வகையிலும் இடமளிக்காது தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என் பது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற் படுத்திவிட்டால் தமிழருக்கு தீர்வு கிடைக்காது எனும் தென் பகுதி இனவாதிகளின் எதிர்பார்ப்பிற்கு ஒருபோதும் இடமளி க்கக் கூடாது என்பதே எமது கருத்தும் வேண்டுகோளுமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது ஒத்துழைப்புடன் வாக்க ளித்த மக்களது பிரச்சினையைத் தீர்த்து வைப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையும், பொறுப்புமாக இருக்க வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.