புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
பலதும் பத்தும்

பேய்கள் மட்டுமே வசிக்கும் அதிர்ச்சி கிராமம்!

நவீன அறிவியல் வசதிகள் நிறைந்த இந்த காலத்தில், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் இன்ன பிற வசதிகளுக்காக பலரும் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் 85 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் கிராமங்களை விட்டுச் சென்ற சம்பவம் கொஞ்சம் அதிர்ச்சி கலந்தது. ஏனெனில் அவர்கள் அடிப்படை வசதிகளைத் தேடி இடம்பெயரவில்லை. பேய்களின் இடையூறுகளால் இடம் பெயர்ந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மெர் என்னும் மாவட்டத்தில் குல்தரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு எங்கு திரும்பினாலும் மக்கள் வாழ்ந்ததற்கான தடையங்களை மட்டுமே பார்க்கக்கூடிய, ஒரு சபிக்கப்பட்ட கிராமமாக கருதுகின்றனர். இந்த கிராமத்தின் வரலாறு 1291ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது.

பளிவால் பிராமணர்கள் என்ற சமூகத்தினர் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த கிராமம் இது. இதனுடன் இணைந்து சுமார் 84 கிராமங்கள் இருந்துள்ளன. இந்த நிலையில் சலிம் சிங் என்ற திவான், கிராம தலைவர் மகளின் அழகில் மயங்கி, அவளை அபகரிக்கத் திட்டமிட்டான்.

இதன்படி அப்பெண்ணை தனக்கு திருமணம் செய்து தரவில்லை என்றால், மொத்த கிராமத்தையும் அழித்துவிடுவதாக எச்சரித்துள்ளான். அவருக்கு பயந்து 85 கிராம மக்களும் 1825ஆம் ஆண்டு வாக்கில் கிராமத்தை மொத்தமாக காலி செய்துவிட்டு வேறு எங்கோ சென்றுவிட்டனர் என்று இந்த கிராமத்தின் வரலாறு கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்தக் கிராமம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுந்ததாக இருக்கக் கூடாது என்று கிராம மக்கள் சாபமிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி கடந்த 300 ஆண்டுகளாக இப் பகுதியில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. அதையும் மீறி தங்க முயற்சி செய்தால் இரவு நேரங்களில் அமா னுஷ்ய உருவங்கள் தெரிவதாகவும், விநோத குரல்கள் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதனை பலரும் அனுபவித்துள்ளதாகவும் சாட்சியம் கூறுகின்றனர். எனினும் இந்தப் பகுதியை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

Super Moon நிகழ்வின் போது

வானில் இரத்த நிலா தோன்றும் விஞ்ஞானிகள் அறிவிப்பு

இந்த வருடம் Super Moon நிகழ்வின்போது பூமிக்கு 30,000 மைல்கள் அருகில் நிலா வரப்போகிறது. இதனால் வழக்கத்தை விட 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவிகிதம் மேலும் பிரகாசமாகவும் நிலா தென்படுமாம். வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து தடவைகள் Super Moon தோன்றும் என்றாலும், இந்த முறை கொஞ்சம் விசேடமாகத் தென்படவுள்ளது. காரணம், அன்றுதான் முழு சந்திர கிரணகமும் நிகழப் போகின்றது. அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி ஒரே நேர்கோட்டில் வரும்.

பூமி இடையில் வந்துவிடுவதால் சூரிய ஒளியை மறைத்துவிடும். எனவே, பூமியின் நிழல்தான் நிலவின் மேல் விழும். ஆனாலும், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச்சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால், ஆரஞ்சு நிறத்திலிருந்து இரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும்.

எதிர்வரும் 27 ஆம் திகதி தென்படவுள்ள இந்நிகழ்வை வட, தென் அமெரிக்ககக் கண்டங்களிலும் ஐரோப்பிய, ஆபிரிக்க நாடுகளிலும் மேற்கு ஆசிய நாடுகளிலும் தான் பார்க்க முடியும். இனி அடுத்த ஷிupலீr ணிoon சந்திர கிரகணம், 2033 இல் தான் நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சுவார்த்தாற் போல் மூன்று குழந்தைகள்:
அடையாளம் காண்பது தொடர்பான இரகசியம்!

அச்சுவார்த்தாற் போல் மூன்று குழந்தைகள் பிறந்தால் அடையாளம் காண்பது தொடர்பான இரகசியத்தை இங்கிலாந்து தம்பதி உலகுக்கு பகிர்ந்துள்ளனர். இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த கரேன் - இயன் கில்பர்ட் தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், மூன்று குழந்தைகள் கருவில் இருப்பது கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், மூன்று குழந்தைகள் கருவில் இருப்பது கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். இரட்டைக் குழந்தைகள் பிறக்க சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று, இரண்டு கரு முட்டைகள் கர்ப்பப் பையிலேயே தங்கி, அது தனித்தனியாக இரண்டு விந்துக்களுடன் ஒவ் வொன்றாக இணைவது.

இதுபோன்ற, பொதுவான பல கருத்துக்களை முறியடித்துவிட்டு ஒரே முட்டையில் மூன்று விந்தணுக்கள் இணைந்து உருவான மூன்று குழந்தைகள் இத்தம்பதிக்கு பிறந்தன. தற்போது இரண்டு வயதாகும். அந்த மூன்று பெண் குழந்தைகளும் சின்ன மாற்றம் கூட இன்றி ஒன்றுபோல் தோன்றுவது மற்றவர்களுக்கு மட்டுமன்றி, பெற்றோருக்கும் அவ்வப்போது குழப்பம் தருவதாக கரேன் தம்பதி கூறுகின்றனர்.

கரேன் தம்பதி ஃபிஃபியான், மேடிசன் மற்றும் பெய்ஜ் எனும் அந்த மூறு குழந்தைகளுக்கும் காலில், வண்ண நக பூச்சு பூசி அடையாளம் காணுகின்றனர். தற்போது சின்னத்திரையில் தோன்றும் இந்த இளம் நடிகையர், ஒரே மாதிரி இருப்பதால், ஒரு குழந்தை சோர்வடைந்தால் மற்றொன்று என மாறி மாறி நடிக்க வைக்கப்படுகின்றனர். இதுபோன்று வெளியே போகும் வேளையில் அந்த குழந்தைகளுக்கு வெவ்வேறு நிறத்தில் ஷ¤க்களை மாற்றி அடையாளம் காணுக்கின்றனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதாட்டியின் கடைசி விருப்பம்:

ஒத்துழைப்பு வழங்கிய சிறை அதிகாரிகள்

போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய நாட்டை சேர்ந்த மூதாட்டியின் நெகிழ்ச்சியான கடைசி விருப்பதை சிறை அதிகாரிகள் நிறைவேற்றி உள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த லிண்ட்சே ஸ்டாண்டிஃபோர்ட் (59) என்ற மூதாட்டி கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் இருந்து இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு விமானம் மூலம் பயணம் செய்துள்ளார்.

இந்தோனேஷியாவை அடைந்த பின்னர், அவரின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் சுமார் 4.7 கிலோ எடையுள்ள கொக்கேன் வகை போதை பொருள் இருந்ததை கண்டுப்பிடித்து அவரை சிறையில் அடைந்தனர்.

இந்தோனேசிய சட்டப்படி போதை பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

லிண்ட்சே மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கடந்த 2013ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

செப்டம்பர் 21ம் திகதி அவரை துப்பாக்கியில் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என வழக்கறிஞர்கள் மூலமாக அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தனக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னதாக தான் இதுவரை சந்திக்காத தனது 2 வயது பேத்தியை சந்தித்து கொஞ்சி விளையாட வேண்டும் என தனது இறுதி விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

லிண்ட்சேவின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்த சிறை அதி காரிகள், அவருடைய பேத்தியான அய்லாவை பிரித்தானியாவிலிருந்து பெற்றோர்களுடன் இந்தோனேஷி யாவிற்கு வரவழைத்தனர்.

முதன் முதலாக சிறை வளாகத்தில் தனது பேத்தியை சந்தித்த லிண்ட்சே அவளை தூக்கி கொண்டு கண்ணீர் வடித்துள்ளார்.

அதிகாரிகள் ஒதுக்கியிருந்த 3 மணி நேரங்களாக தனது பேத்தியுடன் ஆசைத்தீர விளையாடியுள்ளார்.

ஆனால், இதற்கு முன்னதாகவே அவரது வழக்கறிஞர்களுக்கு ஒரு தகவல் அளிக்கப்பட்டிருந்தது.

அதாவது, தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கைளை தற்காலிமாக அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதி வரை எந்த குற்றவாளிக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இந்த தற்காலிக நிறுத்தம் நீங்கியதும் லிண்ட்சேவிற்கு அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடக்கத்திலேயே மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

தனது மரண தண்டனையை இரத்து செய்யுமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தனது பிரித்தானிய அரசு தலையிட்டு மரண தண்டனையை ரத்து செய்ய உதவ வேண்டும் என அவர் தனது வழக்கறிஞர் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

கணவனின் பிணத்துடன் குழந்தைகளுடன் நின்று புகைபடம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட பெண்!

போதைப் பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலுடன், தானும், தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்கா வைச் சேர்ந்த ஒரு பெண். போதைப் பழக்கம் உயிரைப் பறிக்கும். அதை இனி யாவது விட்டு விடுங்கள். அதற்காகத்தான் இந்தப் புகைப்படம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைப் பார்த்து நாலு பேர் திருந்தினால் அது தனக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஈவா ஹாலந்த். இவரது கணவரின் பெயர் மைக் செட்டில்ஸ். கணவர் ஹெராயின் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இந்தத் தம் பதிக்கு லூகாஸ் மற்றும் அவா என்ர மக ளும் மகனும் உள்ளனர். மைக்கும், ஈவாவும் 11 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்தனர்.

அமைதியான இவர்களது வாழ்க்கையில் ஹெராயின் போதையால் சு+றாவளி வீசியது விட்டது. போதைக்கு அடிமையா கிப் போன மைக் செப்டம்பர் 2-ம் தேதி மரணமடைந்தார்.

பார்த்ததும் தலைசுற்ற வைக்கும் முகேஷ் அம்பானியின் காஸ்ட்லியான வீடு....

ஒரு வீடு வாங்குவது என்பது இந்தியாவில் பல ருக்கும் கனவு; வாழ்க்கையின் இலட்சியமும், சாதனை யும்கூட. இன்னும் பலர் வீடே இல்லாத நிலையில் கூடாரங் களுக்குள்ளேயே தங்கள் வாழ்க்கையை வாழ வேண்டிய சு+ழல் இருக்கிறது. இதே நாட்டில்தான் மிக மிக விலை மதிப்பிலான வீடுகளும் கட்டப்படுகின்றன வாங்கப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் காஸ்ட்லியான வீட்டைக் கட்டினார். உலகின் விலை மதிப்பான வீடுகளின் பட்டியலிலும் இந்த வீடு இடம் பிடித்துள்ளது. திரை யரங்கம், பு+ங்கா, ஹெலிகாப்டர் தளம் என பலவகையான வசதிகளுடன் உருவாக்கப்பட்ட வீடு அது. எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமை யைப் பொங்கச் செய்திருப்பார்கள். இப்போது இந்த காஸ்லி வீடுகளின் பட்டியலில் மற்றொரு வீடு இடம் பிடித்துள்ளது. மும்பையில் உள்ள ஜhட்டியா மாளிகை அது.

மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள இந்த வீட்டை இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்களுள் ஒருவரான குமார மங்களம் பிர்லா 425 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய அளவில் சமீபத்தில் நடந்த விலை மதிப்பான வீடு விற்பனை இதுதான். இதற்கு முன்பு 2011-ல் இதே பகுதியில் மகேஸ்வரி இல்லம் 400 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக மெராங்கர் இல்லம் 2014-ல் 372 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மகனை வாஷிங்மிஷினில் இட்டு துவைத்த தந்தை கைது

பிரான் சில், தந்தை ஒருவர் சொல் பேச்சு கேட்காத 3 வயது மகனை வாஷிங் மிஷினிற்குள் போட்டு, மிஷினை ஆன் செய்துள்ளார். இதில் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை வீடியோ எடுத்து இன்டர்நெட்டிலும் அந்த கொடூர தந்தை போட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.

கழிவறைத் தொட்டிக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பு

அவுஸ்திரேலியாவின் ஞரநநளெடயனெ பகுதியில் குடியி ருக்கும் வணிகர் ஒருவரது கழிவறையில் இருந்து 3 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை பாம்பு பிடிப்பவர் அப்புறப்படுத்தியுள்ளார்.

ஞரநநளெடயனெ பகுதியில் வசித்து வரும் வணிகர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள பாம்பு பிடிப்பவரான நுடடழைவ டீரனன என்பவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, தங்களது வீட்டுக் கழிவறையில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த நுடடழைவ டீரனன, தொலைபேசி அழைப்பு விடுத்த வணிகர்கள் தங்கியிருந்த வீட்டின் கழிவறையில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை தெரிந்து கொண்டார்.

இதனையடுத்து அந்த மலைப்பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் அதை சீண்டி உசுப்பிய நுடடழைவ டீரனன இறுதியாக அந்த மலைப்பாம்பை கைய் யோடு பிடித்துள்ளன.

தட்பவெப்பத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக குடிநீர் தேடி மலைப்பாம்புகள் வெளியே வந்திருக்கலாம் என தெரிவித்த நுடடழைவ டீரனன, இரு தினங்களுக்கு முன்னர் இதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையில் இருந்து மலைப்பாம்பு ஒன்றை பிடிக்கப் பிடித்ததாகவும் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.