புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

 
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் அபிவிருத்திப் பாதையின் சிறப்புப் பதிவுகள்

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் அபிவிருத்திப் பாதையின் சிறப்புப் பதிவுகள்

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் நுவரெலியா கல்வி வலயத்திலும், தலவாக்கலை கோட்டத்திலும் அமைந்துள்ளது.

1931 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஹட்டன் தோட்டத்தில் இப்பாடசாலை ஒரு தோட்டப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. தோட்ட நிர்வாகத்தின் கீழ் இப்பாடசாலையின் நிர்வாகம் காணப்பட்டது. அக்காலத்தில் திரு. கோவில்பிள்ளை அவர்கள் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு கட்டடமும் 80 மாணவர்களும் கல்வி பயின்றனர். தோட்ட நிருவாகமே ஆசிரியருக்கான ஊதியத்தை வழங்கியது.

1956 ஆம் ஆண்டு திரு. சிற்றம்பலம் அதிபராக இப்பாடசாலையைப் பொறுப்பேற்றார். அவருக்கு உதவியாக திரு. சோமஸ்கந்த சர்மா பணியாற்றினார். 1976ம் ஆண்டு திரு. வி. ஏ. பசுபதி அதிபராகக் கடமை ஏற்றார். இவர் அதிபராக இருந்த காலப் பகுதியிலேயே 1977ம் ஆண்டு இப்பாடசாலை அரசாங்கம் பொறுப்பேற்றது.

மறைந்த அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு கட்டடம் அமைத்து தரப்பட்டது. 1994ம் ஆண்டு 5ம் வகுப்பு வரை காணப்பட்ட வகுப்புக்கள் 10ம் ஆண்டு வரை உயர்த்தப்பட்டன.

திரு. கணபதிபிள்ளை அதிபரானதைத் தொடர்ந்து மிஹிZ வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1984ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாணவன் எஸ். திலகரட்ணம் 5சி, 2எஸ் என்ற சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொடுத்தார்.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை, மாணவர்களின் கல்வி வளர்ச்சியடைந்தமை போன்ற காரணங்களால் ஜெர்மன் நாட்டின் நிதியுதவியுடன் மிஹிZ 3 மாடி கட்டடம் அமைக்கப்பட்டது. 1993 திரு. என். பாலசுந்தரம் அதிபர் காலத்தில் இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இவருடைய காலத்தில் கலைத்துறை, விளையாட்டுத்துறை, கல்வித்துறை போன்ற சகல துறைகளிலும் வளர்ச்சி பெற்றது. மேலும் 1995ம் ஆண்டு உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டது.

கலைத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியால் தமிழ் மொழித்தினப் போட்டிகளிலே மாகாண ரீதியாகவும் அகில இலங்கை ரீதியாகவும் பல தங்கப் பதக்கங்களைப் பெற்று அகில இலங்கை ரீதியாக இப்பாடசாலை பிரபல்யம் பெற்றது.

விளையாட்டுத்துறையை பொறுத்த மட்டில் கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றி பல சாதனைகளை செய்துள்ளது. இதற்குப் பொறுப்பாசி ரியராக தற்போதைய அதிபர் திரு. ஆர். சிவலிங்கம் இருந்தார்.

திரு. டீ. வடிவேல் அதிபரானதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 3 மாடிக் கட்டிடம் ஒன்றும், மனையியற் கூடம் ஒன்றும், வாசிகசாலை, விஞ்ஞான ஆய்வுகூடம் என்பனவும் அமைக்கப்பட்டன. திரு. சி. மகாலிங்கம் அதிபரானதும் 3 மாடிக் கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. இவருடைய காலத்திலேயே கிணறு ஒன்று அமைக்கப்பட்டு பாடசாலைக்கான நீர் வசதி செய்து தரப்பட்டது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் மறைந்த எஸ். ரெங்கநாதன் அவர்களால் முதன்முதல் இப்பாடசாலைக்கு கணனி இயந்திரம், இசை வாத்தியக் குழுவிற்கான (பேண்ட்) உடைகளும் வழங்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் திரு. முத்துசிவலிங்கம் அவர்களால் இசைவாத்தியக் கருவிகள் (பேண்ட்) அன்பளிப்பு செய்யப்பட்டது.

மறைந்த திரு. இராஜகோபால் அவர்களால் உதைபந்தாட்டச் சீருடைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டது. அதிபர் திருமதி ஜே. டி. வேதநாயகம் அவர்கள் அதிபராக கடமையாற்றிய காலத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டால் ‘விபசி’ அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. க.பொ.த. உயர்தர பிரிவு மாணவர்களின் பெறுபேறுகள் வளர்ச்சியடைந்து காணப்பட்டது. அத்துடன் கெளரவ அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு தலைவர் தொண்டமான் மண்டபம் உடைக்கப்பட்டு இரண்டு மாடி கட்டிடம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. கீழ்மாடியில் கலையரங்கமும் மேல் மாடியில் 3 வகுப்பறைகளும் ஒரு ‘மல்டி மீடியா’ அறையும் வழங்கப்பட்டது. அதே காலத்தில் அன்னை கோதை தொண்டமான் மண்டபம் 4 வகுப்பறைகள் கொண்டதாக அமைக்கப்பட்டது. தற்போது இரா. சிவலிங்கம் அவர்கள் அதிபராக கடமையேற்றப் பின்பு பல்வேறு பெளதீக மற்றும் மனித வள அபிவிருத்தியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் கலையரங்கத்துடனான முதலாம் மாடியில் 3 வகுப்பறைகளுடனான ‘மல்டி மீடியா’ பிரிவும் திறந்து வைக்கப்பட்டு, அன்னை கோதை மண்டபத்திற்கான முதலாம் மாடிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அக்கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் அன்னை கோதை மண்டபத்திற்கான 2ம் மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

க.பொ.த. உயர்தர மாணவர்களின் (வர்த்தகம், விஞ்ஞானம் 2012) குழு செயற்திட்டத்தின் மூலம் சிறிய விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டது. அத்துடன் மாகாண சபை உறுப்பினர் கனகராஜ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் செளமியமூர்த்தி தொண்டமானின் கலையரங்கத்துக்கு நிரந்தர மின்சார இணைப்பு பெற்றுக் கொடுக்கப் பட்டது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் கொட்டகலை தமிழ் மகா வித்தியா லய நடன குழுவினருக்கு 3,50,000 ரூபா பெறுமதியான நடன உடைகளும் வழங்கப்பட்டன. அத்துடன் கனிஷ்ட மாணவர்களுக்கான இசை வாத்திய கருவிகள் (பாண்ட்), 10 மிrலீலீn கிoarனீ வழங்கப்பட்டன. மேலும் விளையாட்டு துறையை ஊக்குவிப்பதற்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது. இந்திய உதவி தூதுவர் ஆ. நடராஜ் அவர்கள் மூலம் 2,00,000 ரூபா பெறும தியான கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

* 2012ம் ஆண்டு க.பொ.த. உயர்தரத்தில் சிறப்பான சித்தியைப் பெற்ற குழுவை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதியும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களையும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ அவர்களையும் சந்தித்ததனால் தரம் 3, 4, 6, 9, 12, 13 மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை புத்தகம் வழங்கப்பட்டது.

* மாணவிகளுக்கான சீருடை மாற்றிய மைக்கப்பட்டது. அதிபர் திரு. இரா. சிவலிங்கம் காலத்தில் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருவதைக் காணலாம்.

* குறிப்பாக சிறுவர் நேய வகுப்பறை அமைக்கப்பட்டது.

பாடசாலையின் தற்போதைய நிலை

* இன்று 2000 மாணவர்களும் 84 ஆசிரியர்களும் 7 கட்டுறு பயிலுநர் ஆசிரியர்களும், 2 சிற்றூழியர்களும் பகல் இரவு காவலாளிகளும் உள்ளனர்.

* 10 கட்டிடங்களில் இரண்டு 3 மாடிக் கட்டிடங்களும், 3 கட்டிடங்களும் தற்போது காணப்படுகின்றன.

* தரம் 1-13 வரையுமான வகுப்புகள் உள்ளன. க.பொ.த. உயர்தரப் பிரிவிற்கு மனையியற் பாடம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாரணர், கெகட், சூழல் கழகம் மற்றும் பல்வேறு மன்றங் களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

* மாணவர்களின் தொகை, ஆசிரியர்களின் தொகை, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், விளையாட்டு, கலை, கலாசார நிகழ்வுகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன. பெற்றோர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது. அத்துடன் பழைய மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

* 2014.06.06ம் திகதி அன்னை கோதை மண்டபத்தின் 2ம் மாடி கட்டிடத்தை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலில் கெளரவ அமைச்சர் முத்துசிவலிங்கம் அவர்கள் திறந்து வைத்தார்.

சாதனையாளர்களும் வெற்றிகளும்

* 2012 அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் தமிழறிவு வினாவிடையில் கொட்டகலை த.ம.வி 2ம் இடம்பெற்றது.

* 2013ம் ஆண்டு 5ம் பிரிவு பாவோதல் போட்டியில் 3ம் இடத்தை செல்வி கிருபாஷினி பெற்றார்.

* 2014ம் ஆண்டு நடைபெற்ற வெசாக்கூடு போட்டியில் நுவரெலியா வலயப் பாடசாலை களில் 2ம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

* 2014ம் ஆண்டு வலய மட்டப் போட்டியில் முதலாம் இடம்பெற்றது.

* கெடட், செஸ், கிரிக்கெட், உதைபந்தாட்டம், வொலிபோல், நெட்போல், கரம், பெட்மின்டன், சாரணர், விஞ்ஞானக் கழகம், வர்த்தக கழகம், சமய மன்றங்கள், இலக்கிய மன்றங்கள், ஆங்கில மன்றம், எழுத்தாளர் கழகம், அறிவிப்பாளர் கழகம், கராட்டே கழகம், சூழல் கழகம் போன் றன உருவாக்கப்பட்டுள்ளன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.