புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

 

மலையக தமிழ்ப்பாடசாலைகளுக்கென 3000 ஆசிரியர் நியமனம்

மலையக தமிழ்ப்பாடசாலைகளுக்கென 3000 ஆசிரியர் நியமனம்

மலையக தமிழ்ப்பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக 3000 ஆசிரியர் நியமனங்களை வழங்க கல்வியமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆசிரியர் நியமனம் தொடர்பான அரச வர்த்தமானி அறிவித்தல் இரு வாரங்களுக்குள் வெளியிடுவதற் கான நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின்பேரில் ஊவா மாகாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பந்துல குணவர்தன, செந்தில் தொண்டமானின் அமைச்சு அலுவலகத்தில் நடை பெற்ற கலந்துரையாலில் கலந்து கொண்டார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலை மையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலையகத்திலுள்ள அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளின் அபிவிருத்தி, பாட சாலைகளில் நிலவும் வளப்பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

(படம்: பதுளை தினகரன் நிருபர்)

இதன் அடிப்படையிலேயே மலையக பாடசாலை களுக்கு 3000 தமிழ் ஆசிரியர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் ஊவா மாகாணத்திலுள்ள தமிழ் தேசிய பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் மெற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது தமிழ் தேசிய பாடசாலைகள் மீது கூடிய கவனம் செலுத்தவும், கல்வியமைச்சர் பந்துலகுணவர்தனவினால் உறுதியளிக்கப்பட்டது.

மலையகத்திலிருந்து இந்திய பல்கலைக்கழகங் களில் பட்டதாரிகளாகிய மலையக இளைஞர் யுவதிகளையும் பட்டதாரி ஆசிரிய நியமனங்களுக்கு உள்வாங்குவதற்கான அனுமதியையும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெற்றுள்ளார். இதனடிப் படையில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இ.தொ.கா விடுத்த வேண்டுகோளுக்கமைய ஊவா மாகாணத்தின் பதிமூன்று தோட்டப்புற பாடசா லைகள், ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்த 13 பாடசாலைகளில் கட்டிடங்கள் நிர்மானிக்கப் பட்டபோதிலும் விஞ்ஞான ஆய்வுகூடம் உள்ளிட்ட கற்கை உபகரணங்கள் இதுவரை வழங்கப்படாதுள்ளன.

இன்னும் இரண்டு மாத்திற்குள் நிலவும் அனைத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு அமைச்சர் பந்துலகுணவர்தன செயலாளர் அனுர திசாநாயக் கவிற்கு உத்தரவிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.