புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

 
ஆனந்த குமாரசாமியின் வாழ்க்கையும் படைப்புகளும்

ஆனந்த குமாரசாமியின் வாழ்க்கையும் படைப்புகளும்

ஊடகவியலாளர் சம்பத் பண்டார சிங்கள மொழியில் எழுதிய “ஆனந்த குமாரசாமி - பிரபஞ்ச மனிதனின் வாழ்க்கையும் படைப்புகளும்” என்ற தலைப்பிலான நூலின் வெளியீட்டு விழா ஜூலை மாதம் 03 ஆம் திகதி வியாழன் மாலை 3.30இற்கு கொழும்பு 07, சுதந்திர வீதியில் அமைந்துள்ள தேசிய நூலக சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெறுகின்றது.

இந் நிகழ்வின்போது கொழும்பு அழகியல் கலை பல்கலைக்கழத்தின் பேராசிரியர் சரத் சந்ரஜீவ மற்றும் கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன ஆகியோர் விசேட உரைகளை நிகழ்த்துகின்றனர்.

மிகச் சிறந்த ஓர் அறிஞர் மற்றும் கலைஞர் என்றவகையில் கீழத்தேய நாட்டு கலையினை, மேற்கு உலகிற்கு அறியச் செய்யவென பல்வேறு ஆய்வு, ஆராய்ச்சி நூல்களை எழுதிய ஆனந்த குமாரசுவாமியின் வாழ்க்கை மற்றும் அவரது கலை இலக்கிய பணி தொடர்பில் மேற்கொண்ட நீண்ட தகவல்கள் சேகரிப்பின் விளைவாகவே சம்பத்தின் இந் நூல் வெளிவந் துள்ளது.

சிங்கள சமூகத்தினால் பெரிதும் போற்றப்ப டுகின்ற சிங்கள கலை யின் மகிமையை உலகிற்கு எடுத்துரைத்த ணிலீனீiaலீral ஷிiசீhalasலீ திrt (மத்திய கால சிங்களக் கலை) ஆனந்த குமார சுவாமியின் பெயரை இலங்கையர் மத்தியில் நிலைத்து நிற்கச் செய்துள் ளது. இலங்கையில் பிறந்து வளர்ந்து இலங்கையின் கலை இலக்கிய விடயங்களை உலகறிய செய்த புத்திஜீவிகளில் ஆனந்த குமாரசுவாமி இணையற்ற இடம் கிடைத் திருக்கின்றது. 1940 ஆண்டு இவர் எழுதிய இந்நூல் இன்றுவரை இலங்கை வாழ் புத்திஜீவிகளால் பரீசிலிக்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.