புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

 
அவள் ஒரு மோகனராகம்

அவள் ஒரு மோகனராகம்

மாலதி குடும்பத்தில் மூத்தவள். அவளுக்கு பிறகு மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் உள்ளனர். தாய் ஓர் ஏமாளி. இவளது தகப்பன் இவள் சாதாரண தரம் படிக்கும் போதே இறந்துவிட்டார். தந்தை விட்டுப்போன சொத்துக்கள் கொஞ்சம் கடனோ ஏராளம். இவள் தலையில் குடும்பச் சுமை. இவள் படிப்பை நிறுத்திவிட்டு வெளிநாடு சென்றாள்.

ஒருவாறு குடும்பம் தலை தூக்கியது. அனைவரையும் படிக்க வைத்து பெரியவர்க ளாக மாற்றினாள். ஒருவன் அரசாங்க வைத்தியன். அடுத்தவன் பொலிஸ் படையின் தலைவன். மற்றவன் தனியார் கம்பனியில் கணனி இயக்குனரானான். தங்கைகள் இருவரும் இன்னும் உயர்த்தரத்தில் படிக்கின்றனர். தாய்க்கும் மகள் வெளிநாடு சென்றபின் பொறுப்பு வந்துள்ளது.

இப்படி இருக்க மாலதி வாழ்விலும் வசந்தம் வீசியது. அது தான் அந்தப் பாழாய்ப் போன காதல். இவளையும் விட்டு வைக்கவில்லை. அவள் தொழில் புரியும் இடத்தில் மலைநாட்டைச் சேர்ந்த ஒருவன். பிரசன்னா என்று பெயர். ஆனாலும் மாலதி அழகி. அதற் கேற்றவாறு அடக்கமான அறிவும் கூட. இவள் கை நிறையச் சம்பாதிக்கின்றாள். அதற்கேற்றவாறு வயதும் கூட இவளோ இவனை எப்படியாவது விலக்கி விடுவதிலேயே குறியாக இருந்தாள். இவனோ விடுதாகவில்லை. இறுதியில் அவளது குடும்பச் சுமையைக் கூறினான். தனக்கு திருமணம் பற்றிப் பேச முடியாது எனவும் எடுத்துரைத்தாள்.

இது இப்படியிருக்க தம்பிகள் மூவருக்கும் உழைப்பு வந்ததும், அவர்களும் வாழ்க்கைத் துணைகளைத் தேடிக் கொண்டனர். அக்காவின் தலைமையில் மூவரும் கரை சேர்ந்தனர். தங்கைகளையும் தாயையும் பார்த்துக் கொள்ளும் சுமை திரும்ப வந்து மாலதிக்குச் சேர்ந்தது. இவளோ இனி இல்லறம் ஏது? என்று எண்ணிக் கொண்டுபேசமால் இருந்து விட்டாள்.

இனித்தான் பெரும் சுமை. ஏனெனில் தம்பிகள் ஆண்கள். அவர்கள் சம்பாதித்து குடும்பம் கொண்டு செல்வார்கள். தங்கைகள் பெண்கள். அவர்களில் ஒருத்தி தாதி. இன்னொருத்தி ஆசிரியை ஆனாலும், திருமணம் என்னும் போது சீதனப் பேய் தலைவிரித்து ஆடுமே. என்ன செய்ய மாலதி அதிகமாக சம்பாதிக்கத் தொடங்கினாள்.

தங்கைகள் இருவரும் திருமணத்தை எப்படிப் பார்க்கும் வயதில் உள்ளதால் மாலதி வீடு, நகை, பணம் என கொடுக்க வேண்டி வந்தது. அதற்காக முழு மூச்சாக உழைத்தாள். இதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினால் என்னவோ இவளுக்கு சம்பள உயர்வு கிட்டியது. இவள் திறமைக் காக கிடைத்த பரிசு ஒருவாநு ஓடி ஆடி தாயையும் உசார்ப்படுத்தி தம்பிகளையும் கூட்டுச் சேர்த்து ஒருத்தியை மணமகிழ்வுடன் கட்டிக் கொடுத்தாள்.

பிரசன்னாவோ இவளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கவில்லை. தாய் கொடுத்த சீதனத்துடன் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு போய் விட்டான். மாலதி தளரவில்லை. அவள் யோசித்தாள். எப்படி அடுத்தவளைக் கரை சேர்ப்பது என்று இப்பொழுது இவளது தாயும் வயது முதிர்த்து விட்டாள். அவளும் நோய் வா...... என்ன செய்ய?

மாலதி தம்பிகளை .... உதவி தேடித் தாயைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டாள். அவர்களோ மனைவியரது மயத்தில் மறுத்துவிட்டனர். கடைக்குட்டியைக் கேட்டுக் கொண்ட படி அவள் வேலையை நிறுத்தி விட்டாள்.

மாலதி கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டாள். இப்பொழுது தாயை கடைக்குட்டி பார்த்தாள். இவளைக் கட்டிக் கொடுப்பதில் மாலதி மீண்டும் கண் அயராது உழைத்தாள். வீடு, நகை, பணம் என சேகரித்ததாள். இதற்கிடையில் ஏதோ இளையவள் யாரையோ காதலித்தாளாம். அவரையே செய்து வைக்கும்படி கேட்டாள்.

செல்லமாக வளர்ந்தவள் சின்னவள். அவளது ஆசையை நிறைவேற்றுவதே சரியென எண்ணினாள் மாலதி. பின்பு அவள் முதலாளியுடள் பேசி இலங்கை வந்து எல்லா உடன் பிறப்புக்களையும் ஒன்று சேர்த்து நபர் எனப் பட்டதும் தாயையும் அழைத்துக் கொண்டு சென்று ... கேட்டனர். இரு தரப்பும் ஒன்றாக பேசிய பின் சம்மதம் கிடைத்தது. குடும்பத்தில் இறுதித் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. மாலதி மிக்க மகிழ்ச்சியடைந்தாள். அவளுக்கு எல்லார் வீட்டிலும் விருந்தும் விருந்து. மூன்றே மூன்று வேளை அவள் பறந்து சென்று விட்டாள்.

மாலதி தாயை மட்டுமே இனி சுமக்க வேண் டும். மூத்தவளாகப் பிறப்பதில் எத்தனை துன்பம், ஆனால், மாலதிக்கோ அது ஒரு சுகமான சுமை. இறுதியில் ஆரம்பித்த இடத்துக்கே வந்து விட்டாள். பெற்றவளும் அவளும் தனது எஜமான னிடம் கூறினார். நிலமையை எடுத்துச் சொன்னாள். தாயைப் பார்ப்பதற்காக “நான் ராஜினாமச் செய்கின்றேன்.” உடனே எஜமானன் இவளை விட மனதில்லாமல் அவளது தாய் நாட்டிற்கு அனுப்பி வைத்தாள்.

மாலதி தாயும் மாலதி திரும்ப வந்ததில் ரொம்ப சந்தோஷப்பட்டாள். மாலதி கொண்டு வந்த பொதிகளை உறவினர்களுக்கு உடன் பிறப்புக்களுக்கு கொடுத்து அனுப்பினார்.

பின்பு அவளும் தாயுமாக இருந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்து வருமானம் பெற்றாள். இவள் இப்பொழுது நாற்பதைத் தாண்டி விட்டாள். தாயும் மகளுமாகக் காலத்தை கழிக்கின்றனர். இவள் சிறு வியாபாரமாகச் செய்து கடைகளுக்கு கொண்டு சென்று துணிகளைப் போட்டுக் கொண்டிருந்தாள். தாய்க்கோ இவளைப் பற்றிய கவலை. இவளோ முழுப் பொறுப்பும் நிறைவுற்ற நிம்மதியுடன் மறந்த தந்தையை எண்ணிய படி இறைவனைப் போற்றியபடி வாழத் தொடங்கினாள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.