புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

 
ஜனாதிபதியை எந்தவொரு பொது வேட்பாளராலும் வெற்றிகொள்ள முடியாது

சகல இன,மத மக்களாலும் விரும்பி ஏற்றுக்கொள்ளப்படும்

ஜனாதிபதியை எந்தவொரு பொது வேட்பாளராலும் வெற்றிகொள்ள முடியாது

அன்று (15)ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் தென் பகுதியில் களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம, தர்காநகர், பேருவளை, துந்துவை மற்றும் வெலிப்பன்னை ஆகிய பிரதேசங்களில் எதிர்பாராத விதமாக வன்செயல்கள் வெடித்த கசப்பான நாள்.

இந்த வன்செயல்கள் தீப்பற்றி எரிவதற்கு பிரதான காரண கர்த்தவாக இருந்தவர்கள் இரண்டு சாரதிகள், இரு தரப்பினரைச் சேர்ந்த இரண்டு சாரதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்தளவு மோசமான சொத்துச் சேதங்களையும் உடமைகளையும் உயிர்ச்சேதங்களையும் நமது மனதில் என்றுமே அழியாத நினைவலைக¨ளாகப் பதியவைத்து விட்டுப் போயுள்ளன.

எவ்வாறாயினும் ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் 1983ம் அண்டு இடம்பெற்ற ஜுலை கலவரத்தை போன்று முழு நாட்டிலும் இந்த வன்செயல் வியாபித்து பரவக் கூடாது என்பதற்கான அவசர நடவடிக்கைகளும் திடமான முன்னேற்பாடுகளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அவசர அவசரமாக கூட்டங்களும் விசேட கலந்துரையாடல்களும் பேருவளையிலும் களுத்துறையிலும் நடாத்தப்பட்டன.

அரசாங்க தரப்பைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான ஒரு தீர்க்கமான சுமுகமான முடிவுகளை எடுக்காதிருந்தால் உண்மையில் முழுநாட்டுக்குமே இத்தாக்குதல் சம்பவங்கள் பரவியிருக்கும்.

அளுத்கம, தர்காநகர், பேருவளை பகுதிகளில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிவியாவில் இடம்பெற்ற ஜீ - 77 மாநாட்டில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். இவ்வாறான சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தனது நாட்டையும், நாட்டு மக்களையும் மறந்துவிடவில்லை. அவருக்கு இது தொடர்பான உண்மையான விடயம் எத்திவைக்கப்பட்டது. அவர் உடனடியாக அங்கிருந்து கொண்டே இயங்கத் தொடங்கினார்.

ஜனாதிபதி அவசர அவசரமாக பிரதமர் தி. மு. ஜயரத்னவுடன் தொடர்பு கொண்டார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடனும் இது தொடர்பில் கருத்துக்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அளுத்தகம சம்பவம் தொடர்பில், சகல விடயங்களையும் தகவல்களையும் தருமாறு வேண்டிக் கொண்டார்.

முடியுமான அளவு உதவிகளையும் அப்பிரதேசங்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இயன்றளவு மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினால் பிரதமருக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அரச தலைவரொருவருக்கு முதற் தடவையாக வழங்கப்பட்ட அதிஉயர் விருது ஒன்றினை ஜனாதிபதி பெற்றுக் கொண்டிருந்தார். இவ்வாறான சூழ்லையில்சிறந்ததோர் வாழ்க்கைக்கு புதியதோர் உலகம் என்ற தொனிப் பொருளில் நடைபெற்றுக் கொண்டிருந்த இம்மாநாட்டின் போது, ஜனாதிபதி இவ்விருதைப் பெறும்போது மட்டில்லா மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை, ஏன்... இலங்கை நாட்டு சகல இன மக்களுக்கும் கூட இது விடயம் குறித்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த வேளை, அளுத்கமவில் இவ்வாறானதொரு கசப்பான சம்பவம் இடம்பெற்றது. எனினும் ஜனாதிபதி பெற்ற இவ்விருதுக்கான மகிழ்ச்சியை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு தனது நாட்டில் தென்பகுதியில் அளுத்கம பிரதேசத்தில் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலைகளின் பக்கம் தனது கவனத்தைச் செலுத்தினார். உண்மையில் நாட்டுத் தலைவர் ஒருவர் முன்னேற்றகரமான நாடுகள் பல கலந்து கொண்ட ஒரு முக்கியமான மாநாடொன்றில் இருக்கும் போது, இவ்வாறான அவசர அவசிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது, ஒரு நாட்டின் உண்மையான தலைவரொருவருக்கு தனது நாட்டின மீதும், மக்கள் மீதும் கொண்டிருந்த பற்றை எடுத்துக் காட்டுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமாதானத்தை விரும்பும், இன ஐக்கியத்தைப் பேணும் அது எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை ஆதரித்தும் அனுசரித்துமே தனது செயற்பாடுகளை முன்னெடுப்பார். ஜனாதிபதிக்கு இவர் முஸ்லிம், இவர் சிங்களவர், இவர் தமிழர் இவர் பறங்கியர் என்ற பாகுபாடு கிடையாது. இது பெரும்பான்மையைக் கொண்ட பெளத்த மதத்தைச் சார்ந்தவர்கள் வாழும் ஒரு நாடாக இருந்தாலும் ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் என்ற ரீதியில் சகல சமயத்தவர்களும் ஒன்றே அனைவரையும் சமத்துவமாகப் பார்க்கும் அல்லது சமமாக வழிநடாத்தும் குணநல பண்புகள் நிறையவே உண்டு. பெளத்த பிக்குவாக இருக்கட்டும் இஸ்லாமிய உலமாவாக இருக்கட்டும் அல்லது இந்து மத குருவாகவோ கிறிஸ்தவ மதகுருவாகவோ இருக்கட்டும். சமயங்களின் வழிபாட்டுத் தலங்களாக இருக்கட்டும். எல்லாமே ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் குறிப்பாகச் சொல்லப் போனால் அவரது வழிநடாத்தலின் கீழ், நெறிப்படுத்தலின் கீழ், சிறந்த கண்ணோட்டத்தின் கீழ், ஆளுமையின் கீழ் நடைபெறுகிறது என்பதை எவ்வித சலனமுமின்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அம்பாந்தோட்டை மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவருடைய தந்தை டி. ஏ. ராஜபக்ஷவும் இம்மாவட்டத்திலேயே பிறந்தார். இவர்களது குடும்பமும் அன்றைய காலம் தொட்டு, இன்றைய காலம் வரை இஸ்லாமியர்களுடன் அந்நியோன்றியமாகவும் சகஜமாகவும் பழகியேவருகின்றனர். ஜனாதிபதியின் தந்தை டி. ஏ ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் குழப்ப சூழ்நிலையேற்பட்டபோது முஸ்லிம்மக்களைப் பாதுகாத்திருக்கிறார். இம் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கென்றே முஸ்லிம் பாடசாலையொன்றை (தற்போது யக்கஸ்முல்ல மகா வித்தியாலயம்) உருவாக்கிக்கொடுத்தார். இங்கு கற்பிப்பதற்காக மெளலவி ஆசிரியர் ஒருவரையும் ஏற்பாடு செய்திருக்கிறார். முஸ்லிம் குடும்பங்களுக்கு பக்கபலமாக இருந்து பல்வேறு பட்டசேவைகளைப் புரிந்திருக்கிறார். இது மாத்திரமல்ல, “கிராம ராலஹாமி” என்பவர்கள் கூட இப்பிரதேசங்களில் முஸ்லிம்களாக அன்றைய காலத்தில் இருந்துள்ளனர். முஸ்லிம்களிடம் சென்று சுகம் விசாரிப்பதும், அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதும், இதுபோன்று முஸ்லிம்களும் இவர்களின் நலனில் அக்கறை செலுத்துபவர்களுமாக பரஸ்பரம் இருந்துள்ளனர்.

டி.ஏ. ராஜபக்ஷ, முதன் முதலில் “மாதகம” என்ற இடத்தில் 75 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட காணியில் 50 முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்தினார். அப்போது டி.ஏ ராஜபக்ஷ, அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்றாலும், ஐ.தே.க. ஆட்சி வந்ததும், டி.ஏ ராஜபக்ஷவுக்கு உறுப்பினர் பதவி இல்லாமல் போனவுடன், அங்கிருந்த முஸ்லிம் குடும்பங்களை விரட்டியடித்தனர். இக்குடும்பங்கள் அங்கிருந்த காணிகளை விற்றுவிட்டு, மீண்டும் சூழ்நிலை சரியானவுடன், அதே இடத்தில் மீண்டும் குடியேறியதாக, பழங்காலத்து முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு, முஸ்லிம்களைக் காப்பாற்றிய அல்லது அவர்களின் நலனில் அக்கறை, கரிசனை காட்டிய பெருமை ராஜபக்ஷ குடும்பத்தைச்சாரும் இதே பின்னணியையே இன்றும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ கடைப்பிடித்து வருகிறார்.

அன்று தமிழ் மக்களுக்கென தலைமைகளாக பொன். அரு ணாசலம், பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர் இருந்து வந்துள்ளதுடன், முஸ்லிம் தலைமைகளாக ரீ.பி. ஜாயா போன்றவர்களும் இருந்துவந்துள்ளனர். அதேநேரம் சுந்தரலிங்கத்துடன் இணைந்து மரிக்கார்களும், உதுமாலெவ்வை போன்றோர்களும், தமிழ், முஸ்லிம், சிங்கள பேதங்கள் எதுவுமின்றி இந்நாட்டைக் காப்பாற்றுவதற்காக, இந்நாட்டின் சுதந்திரத்திற்காக அரும் பாடுபட்டுள்ளதை எவரும் எளிதில் மறக்கமுடியாது. இதுபோன்ற அதே நிலைப்பாட்டுடனேயே நமது நாட்டு இன்றைய தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் செயற்பட்டு வருகின்றனர் என்றால் அது மிகையாகாது.

அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவத்தை, சிலகுழுக்கள் உள் நாட்டிலும் ஏன் வெளிநாட்டிலும் சர்வதேச மயப்படுத்தி, அதனை பூதாகரமாகப் பெரிதுபடுத்தி, அதனை ஐ.தே.க ஆட்சியின்போது 1983இல் இடம்பெற்ற “கறுப்பு ஜூலை” கலவரத்தைப் போன்று, மற்றுமொரு “2014 கறுப்பு ஜூன்” கலவரமாக மாற்ற, சோதனை செய்ய முனைந்தனர். ஆனால், நமது நாட்டுத்தலைவர் மஹிந்தராஜபக்ஷ, இவை ஒன்றுக்கும் அஞ்சாது, அஞ்சாத சிங்கமாக துணிந்து நின்று” ஒரே ஜாதி ஒரே தேசம் ஒரே மக்கள் - ஒரே இரத்தம்” என்ற நோக்கில், அனைத்தையும் தவிடுபொடியாக்குவதற்கான முற்னேற்பாடுகளை, மேற்கொண்டார். இத்தகைய சமயத்தில் ஜனாதிபதி மஹிந்த இறங்காமல் இருந்திருந்தால், இந்நாடே இன்று பற்றி எரிந்திருப்பதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச சக்திகளுக்கும் மேலும் வலுவூட்டுவதாக, குறிப்பாகச் சொல்லப்போனால், எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதைப் போன்ற கதையாக நிச்சயமாக மாறியிருக்கும் எனவே, நல்லதொரு தருணத்தில், ஜனாதிபதி இச்சம்பவத்தைப் பரவச் செய்யாது, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பது, அவரின் நாட்டுப்பற்றையும், ஜனநாயக விழுமியங்களையும் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிவியாவில் இடம்பெற்ற “ஜீ -77” மாநாடு முடிவுற்றதும், இலங்கைவந்த பின் நேரடியாக அளுத்கம, பேருவளை ஆகிய பிரதேசங்களுக்கும் சென்று, நிலைமைகளைக் கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். ஜனாதிபதி இது தொடர்பிலான விசேட கூட்டமொன்றை, பேருவளையில் (18ம் திகதி) ஏற்பாடு செய்திருந்தார். இவர் பல்வேறுப்பட்ட விடயங்கள் குறித்தும் அங்கு சமூகமளித்திருந்த பெளத்த பிக்குகள், முஸ்லிம்கள் சமய மத குருமார்கள் மற்றும் நலன் விரும்பிகள், இனமத நல்லுறவைப்பேணும் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் சகிதம் ஆராய்ந்தார். மிக அவசரமாகவே பாதிக்கப்பட்டமக்களுக்கான நஷ்டஈட்டுத் தொகைகளையும், அவர்களின் சொத்துக்கள், உடைமைகள் போன்றவற்றின் நஷ்டஈட்டுக்கொடுப்பனவுகளையும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அத்துடன் அவைகளைத்துரிதப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்தார். இது ஜனாதிபதியின் சிறந்த தொரு முன்னுதாரண நிகழ்வாகும்.

இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால், பொது அபேட்சகராக யாரை நிறுத்துவது என, எதிர்க் கட்சிகள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில், எல்லா சமயத்தவர்களும் விருப்ப முள்ள நமது நாட்டின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட, இத்தருணத்தில், பொது அபேட்சகர் ஒருவர் எதற்கு? நமது நாட்டு ஜனாதிபதியே பொது அபேட்சகராக இருக்கமுடியும். அவரேதான் அந்த இடத்திற்கு தகுதியான வரும், பொருத்தமானவரும் கூட இதனையாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. எல்லா சமயங் களையும் அரவணைத்துக் செல்லும், எல்லா மதத்தவருடனும் அந்நியோ ன்யமாகப் பழகும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இன்று எல்லா சமயத்தவர்களும், மதத் தலைவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். காரணம், முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியிருக்கிறார். முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் ஊடாக முஸ்லிம்களின் கல்விக்காக வருட மொன்றுக்கு 65 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியி ருக்கிறார். நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தினத்திற்காக, முஸ்லிம்களின் அபிவிருத்தி நடவடிக்கைளுக்காக வருடமொன்றுக்கு 130 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியிருக்கிறார். நோன்பு காலங்களுக்காகவும், ஹஜ் காலங்களுக்காகவும் பல்வேறுப்பட்ட சலுகை களையும் வசதிகளையும் நிதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். புலிகளி னால் அழிக்கப்பட்ட காத்தான்குடி பள்ளிவாசலை மீண்டும் புனரமைப்பு செய்வதற்காக 870 இலட்சம் ரூபா நிதியும் ஒதுக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு முஸ்லிம் களுக்கு பல்வேறுப்பட்ட சலுகைகள் மற்றும் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதைப் போன்று, பெளத்தர், கிறிஸ்தவர்கள், கத்தோலிக் கர்கள், இந்துக்கள் ஆகி யோரின் தேவைகள் மற்றும் அவர்களின் சக நடவடிக்கைப் பணிகளுக்கும், எந்தவித வேறுபாடுகளுமின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அன்று முதல் இன்று வரையிலான பங்களிப்புக்கள், சலுகைகள் என்பன கிடைக்கப்பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.