புத் 66 இல. 26

விஜய வருடம் ஆனி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 30

SUNDAY JUNE 29 2014

 

 
கடை நிலையில் இருப்பவர்களையும் கொஞ்சம்சரி கவனிக்க மறுப்பதேன்?
குடை நிழலில் உலாவரும் முதலமைச்சர் ஐயாவே!

கடை நிலையில் இருப்பவர்களையும் கொஞ்சம்சரி கவனிக்க மறுப்பதேன்?

வடக்கு மாகாணத்தில் உள்ள இடங்களுக்கு சுற்றுலாவுக்காகத் திரிவது போல் வடக்கு மாகாண முதலமைச்சர் படை பட்டாளங்கள் சகிதம் சுற்றுலா செய்து வருகிறார். மக்களின் குறைகளைக் கேட்பதாகத் தெரிவித்துக் கொண்டு இயந்திரத்தில் கல்லுக் கிளறப்படும் காட்சிகளையும் பொது இடங்களில் நின்று கொண்டு மக்களின் குறைகளைக் கேட்பது போல் கேட்டு அதற்குள்ளும் அரசியலைப் புகுத்தி எந்தவித உதவியும் செய்யாது கையை விரித்து விட்டு வரும் முதலமைச்சரின் கவனத்திற்கு சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றோம்.

ஐயா, நீங்கள் முல்லைத்தீவு மற்றும் ஏனைய இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தமையால் அப்பகுதி மக்களுக்கு என்ன நன்மைகள் வந்துள்ளன என்றால் எதுவுமில்லை என்பதே உண்மை. பாரிய இயந்திரம் மூலம் கல்லுடைப்பவர்கள் தொடர்ந்து அதைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள். உங்களிடம் பொது இடத்தில் குறை சொன்ன மக்களின் நிலையும் மாறியதாகத் தெரியவில்லை.

பிரித்தானியாவில் இருந்து வந்த அந் நாட்டுப் பிரதமர் இவ்வாறான இடங்களைப் பார்க்கவில்லை. அவர் முதலில் புகுந்தது மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்களின் முகாம்களுக்கே, நீங்கள் பதவிக்கு வந்து எப்போதாவது ஒரு ஏழையின் வீட்டைப் புகுந்து பார்த்திருக்கின்aர்களா?

யுத்தத்தால் கடும் காயமடைந்த அங்கவீனர்களாக உள்ள போராளிகள் எவரையாவது சந்தித்திருக் கின்aர்களா? கிளிநொச்சிப் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் இடுப்புக்குக் கீழ் செயற்படாத நிலையில் பல போராளிகள் பாராமரிக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்க ளையாவது நீங்கள் சந்தித்திருக்கின்aர்களா?

16 வயது மாணவன் வறுமையின் காரணமாக தற்கொலை செய்துள்ளான். அவனது தந்தை புலிகளுக்கு உதவிய தாகத் தெரிவித்து தற்போது பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தொழில் இழந்த குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு தாயிடம் சேர்ந்தது. தாய் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

தனது மூன்று பிள்ளைகளையும் பராமரிக்கப் போதுமான பொருளாதார நிலை இல்லாமல் குடும்பம் வறுமையில் இருந்துள்ளது. இந்நிலையில் தாய் துன்பப்படுவதைப் பார்க்க முடியாத மகன் தானும் தொழிலுக்குப் போக இருக்கையில் தாய் அவனைத் தடுத்து கல்வியைத் தொடரச் சொல்லியுள்ளார்.

க. பொ. த (சா/த) எடுத்த இம் மாணவன் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தபோதும் வறுமை காரணமாக தொழிலுக்கு செல்ல முற்பட்டுள்ளார். தமக்கு ஏற்பட்ட வறுமையின் விரக்தியிலேயே மாணவன் தூக்கில் தொங்கியுள்ளார்.

கொடூர யுத்தத்தில் பங்கு பற்றி அதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகி நொந்து நூலாகி வந்தவர்களின் வாக்குகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே! இவ்வாறானவர்களின் வறுமையைப் போக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்Zர்கள்.

வடக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங் குங்கள் என வாழ் நாள் பூராவும் மந்திரங்கள் ஓதிக் கொண்டிருப்பவர்களே!

முதலில் உங்களுக்கு வாக்குப் போட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளையாவது பூர்த்தி செய்யுங்கள். யாரும் கொடுக்கும் நன்கொடைகள், நிதி உதவிகளுக்கு ஓடிப்போய் புகைப்படம் எடுத்து அதனைப் பேப்பர்களிலும் இணைங்களிலும் வருவதற்கு வழி சமைத்துக் கொடுக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கஜதீபனைப் போன்றவர்கள் இவ்வாறான இழவு வீடுகளுக்குச் செல்லாமல் இருப்பது ஏன்? உங்கள் பொக்கற்றுக்களில் பணம் இல்லையா? இவர்களுக்கு வாக்குப் போட்டுவிட்டு நிர்க்கதியில் நிற்கும் வாக்காளப் பெருமக்களுக்கும் இது சமர்ப்பணம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.