புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
சௌந்தரராஜனின் "ராஜராகங்களில்" பாடி சபையோரை மலைக்க வைத்தார் கலைக்கமல்

சௌந்தரராஜனின் "ராஜராகங்களில்" பாடி சபையோரை மலைக்க வைத்தார் கலைக்கமல்

கடந்த ஞாயிறன்று கொழும்பு Nஜ.ஆர். ஜயவர்தன கலாசார மண்டபத்தில், தமிழகத் துப் புகழ் பு+த்த பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜனின் மறைவின் ஓராண்டு நினை வாக அவர் பாடிய என்றும் நம் நினைவை விட்டகலா 'ராஜ ராகங்களை' நம் நாட்டு தலை சிறந்த பாடகர் கலைக்கமல் பாடி சபையோரை பேரானந்தக் களிப்பில் மூழ்க டித்து அதிரவைத்தார்.

நம் நாட்டுப் பாடகர் கலைக்கமல் பாடுகிறாரா? சௌந்தரராஜனே பாடுகிறாரா? எல்லோருக்கும் மலைப்பு!

தமிழகத்தின் முன்னணிப் பாடகர்கள் பலர் பாடிய பாடல்களை பொதுவாக நம் எல்லாப் பாடகர்களுமே பாடுவர். ஆனால் தன் தனித்துவக் குரல் வளத்தால், உச்சஸ்தாயி யில் பாடிய சௌந்தரராஜனின் பாடல்களை ஒரு சில பாடகர்களாலேயே பாடமுடியும். அந்த வரிசையில் சௌந்தரராஜனின் பாடல்களை அவரது அதே தொனியில் அதே அசைவில் மிக இலாவகமாக பாடும் ஆற்றல் பாடகர் கலைக்கமலுக்கு நிறையவே இருக்கிறது, என்பதனை அன்றைய 'சௌந்தரராஜனின் ராஜராகங்கள்' மேடை புடம் போட்டது.

அம்மாடி பொன்னுக்கு தங்கமனசு …..

உன் கண்ணில் நீர் வழிந்தால் …..

ஓராயிரம் பார்வையிலே …..

போன்ற கலைக்கமல் பாடிய சௌந்தரராஜனின் எல்லாப் பாடல்களுமே ராஜராகங்களாக சபையோர் நெஞ்சை நெகி ழவைத்தன. சகோதர மொழிப் பாடகி குமாரி, பிரபல பாடகி நிலுக்சி nஜயவீரசிங்கம் ஆகியோரும் கலைக்கமலோடு சேர்ந்து பாடி மண்டபத்தை கலகலப்பாக்கினர். அறிவிப்பாளர் அமீர்கானின் அழகான - அருமையான நிகழ்ச்சித் தொகுப்பு ராஜராகங்களை இன்னும் மெருகூட்டின.

கலைக்கமல் பாடும், டீ.எம்.எஸ் இன் பாடல்களில் தம்மை மறந்து சபையோர் இருக்கையிலே, அன்றைய நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் திரு. அரசரத்தினம் தலைமையுரை நிகழ்த்த அழைக்கப்படுகிறார்.

ஒலி வாங்கி அவர் கைக்கு மாறியது. சபையில் ஒரு சலசலப்பு! அவர் பேசத் துவங்கினார். சில நிமிடங்கள் கடந்திருக்கும், சபையே அதிர்ந்தது. சபையோரின் சிரிப்பொலி மண்டபத்தையே நிறைத்தது. சபையின் சலசலப்பு - சலிப்பு எங்கோ ஓடி ஒளிந்தது. திரு. அரசரத்தினம் இப்படி தானும் சிரித்து சபையையும் சிரிக்கவைக்கும் உரை தருவார் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அவரது பேச்சு முழு சபையையுமே கவர்ந்தது.

இன்றைய எமது டென்சன் நிறைந்த அல்லோல கல்லோல சூழ்நிலையில் மனதிற்கு இதம் சேர்க்க இது போன்ற இசை நிகழ்ச்சிகள் மருந்தாகுவதாக குறிப்பிட்ட அவர், பாடகர் கலைக்கமலின் தனித் திறமையினை பாராட்டி மகிழ்ந்தார். நகைச்சுவை ததும்ப அவர் தந்த சில தகவல்கள் வாய் விட்டு சிரிக்கவைத்த அதே நேரம் சிந்திக்கவும் தூண்டின.

அழகுத்தமிழில் தாஜ் மகானின் வரவேற்பு உரை இடம் பெற்றது.

சிவாஜp மௌலானாவின் வித்தியாசமான பேச்சும் சபையோர் கவனத்தை ஈர்த்தது. சௌந்தரராஜனின் வாழ்வில் நடைபெற்ற பல சம்பவங்களை சிவாஜp மௌலானா சுவார'pயமாக குறிப்பிட்டதோடு இடைக்கி டையே நடிகர் திலகத்தின் அங்க அசைவோடு அவர் பாடல்களின் சில வரிகளை பாடியது சபையோih குதூகலத்தில் ஆழ்த்தியது.

வலம்புரி கவிதா வட்ட கவிஞர்கள், கலையழகி வரதராணி, பிரேம்ராஜ் ஆகியோரின் கவி வரிகள் டி.எம்.சௌந்தரரா ஜனின் ஆளுமையினை அழகழகாக எடுத்தக் காட்டியவிதம் எல்லோரினதும் கவனத்தை ஈர்த்தன. மொத்தத்தில் நம் நாட்டுப் பாடகர் கலைக்கமலின் ராஜராகங்கள் இசை நிகழ்ச்சி அன்று பல்சுவை நிகழ்ச்சியாக அமைந்து சகலரதும் பலத்த பாராட்டுகளுகு;கும் உரித்தாகியது.

பார் மகளே பார்….. நீ இல்லாத மாளிகை யில்….. என்ற சௌந்தரராஜன் பாடிய பாடலை பாடகர் கலைக்கமல், அறிவிப்பாளர் அமீர்கா னோடு இணைந்து பாடியது இன்னும் செவிகளில் ரீங்காரமிடுகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.