புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
கூட்டமைப்பை பொருட்படுத்தாத ஜயலலிதா

கூட்டமைப்பை பொருட்படுத்தாத ஜயலலிதா

$ட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உருகி, உருகி எழுதிய மடலுக்கு, தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா, தனது மனுவின் ஊடாக பதில் வழங்கியிருக்கின்றார். ஜெயலலிதாவின் பதிலால் ஆடிப் போனாராம் சம்பந்தன். இந்திய மத்திய அரசின் தீர்வு முயற்சிகளுக்கு உதவுமாறு சம்பந்தன் ஜெயலலிதாவை கேட்டிருந்தார். அதற்கு பதிலாக ஜெயலலிதாவோ, சம்பந்தனுக்கு அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் ஜெயலலிதாவை கண்டுகொள்ளாத சம்பந்தன் குழுவினர், பி.ஜே.பி வெற்றி பெற்ற பின்னர் தங்களின் நிலைப்பாட்டை தடாலடியாக மாற்றிக் கொண்டனர். தமிழ் நாட்டில் தன்னை மிஞ்சி இனி எவருமே இலங்கை தமிழர் குறித்து அக்கறைப்பட முடியாதென்று அனைவரும் மூக்கில் விரல் வைக்குமளவிற்கு ஜெயலலிதா ஒரு தடாலடி அறிவிப்பை செய்திருக்கின்றார்.

இலங்கை தமிழர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும். அதில் தமிழ் மக்கள் பிரிந்து சென்று தனி நாடு அமைப்பது தொடர்பான வாக்கெடுப்பு நடத்துவதற்கான அழைப்பும் இருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து அது வரை எங்கோ நித்திரை கொண்டு கொண்டிருந்த புலம்பெயர் தமிழ் துடுப்பாட்டக்காரர்கள் அனைவரும், ஜெயலலிதாவிற்கு ஒரு அடிரா சக்கை என்றவாறு களமிறங்கிவிட்டனர். இந்தியாவின் புதிய பிரதமராக வந்திருக்கும் நரேந்திர மோடியை உத்தியோக பூர்வமாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதே ஜெயலலிதா இப்படியொரு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத சம்பந்தன் திணறிப் போனாராம் என்று அவருக்கு நெருக்க மானவர்கள் சொல்லுகின்றனர். இதி லிருந்து ஜெயலலிதா கூட்டமை ப்பை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதும் தெளிவாகிவிட்டது.

சம்பந்தன் ஐக்கிய இலங்கைக்குள் அதி காரப் பகிர்வு பற்றி பேசுபவர். அதுவே அவரது நிலைப் பாடாகவும் இரு க்கிறது. புலிகளின் கொலைப்பட் டியலில் தான் இரு ப்பதை அறிந்து கொண்ட சம்பந்தன் அதிலிருந்து தப்புவத ற்கு வேறு வழியின்றியே புலியாதரவு நிலை ப்பாட்டிற்கு தாவினார். இது சம்பந்தனை அறிந்த அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம். சமீபத்தில் எழுத்தாளர் செல்வநாய கம் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்த போது, சம்பந்தன் அதில் ஆர்வமற்றி ருந்ததாகவும், இது ஓர் அவசரப்ப ட்ட முடிவு என்று கூறியதாகவும் எழுதியிருக்கின்றார். ஆனாலும் சம்பந்தன் தனது மனதில் இருப்பதை ஒருபோதும் மக் கள் முன்வைப்பதில்லை. எங்கு தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்பதற்காகவே அவர் இவ்வாறு வேசமிடுகின்றார். சம்பந்தன் மட்டுமல்ல கூட்டமைப் பில் இருக்கும் பலரும் இப்படி யான அரசியலையே செய்து வரு கின்றனர். இப்பொழுது ஜெயலலிதா விடுத்திருக்கும் அதிரடி அறிவிப் பால் ஆடிப்போன இவர்கள் அதனை எதிர்க்கவும் முடியா மல் ஆதரித்து அறிக்கை விட வும் முடியாமல் தத்தளித்துக் கொண் டிருப்பதாக கூட்டமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. கூட்டமைப்பினர் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதில் இதய சுத்தியுடன் இரு ப்பது உண்மையென்றால், ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை ஜெய லலிதாவின் அறிவிப்பு தொடர்பில் கூட்ட மைப்பு எந்தவொரு கருத்தையும் தெரி விக்கவில்லை. இதிலிருந்து கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகிறது.

ஆனால் மறுதலையாக ஜெயலலிதாவோ கூட்டமைப்பு என்றொரு அரசியற் கட்சி இருக்கிறது. அது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு பற்றி கதைத்து வருகிறது என்பது பற்றியெல்லாம் எந்தவொரு கரிசனையும் இன்றி அம்பிட்ட மாட்டுக்கு குறி சுடுகிற கணக்கில் ஏதோ பேசியிருக்கின்றார். சம்பந்தன் தீர்வுக்கு ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்க, ஜெயலலிதாவோ போக முடியாத ஊருக்கு வழி சொல்லியிருக்கின்றார்.

மீண்டும் மோடி வருவார் கூடவே லேடி யும் வருவார் என்றவாறு புதுக் கதைகள் சொல்ல சில தமிழ் சாத்திரக்காரர்கள் வந் திருக்கின்றனர். சும்மா சொல்லக் கூடாது அவர்கள் நல்லாகவே சாத்திரம் ஓதுகின் றனர். இந்தச் சாத்திரக்காரர்களுக்கு அனைவரும், அருமையாக குறி சொல் லுவதற்கு ஏற்றாற்போல், ஜெயலலிதா பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத் திருக்கின்றார்.

இதில் இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். இந்தப் போக முடியாத ஊருக்கு வழி சொல்லும் அரசியலுக்கு மாற்றாக புதியதொரு அரசியல் கலாசாரத் திற்கான பாதையை திறந்து வைக்கும் ஒரு வல்லவர் வந்துவிட்டார் என்று எல்லோருமே விக்கினேஸ்வரனை வானளவாக புகழ்ந்து தள்ளினர்.

இந்தச் சாத்திரக்காரர்களின் வாய் ஜம் பத்தில் மயங்கிய யாழ்ப்பாணத்து மக்களும் அவரை முதலமைச்சராக்கினர். இப்ப என்னவென்றால் அவரை எவரெல்லாம் புகழ்ந்து தள்ளினரோ அவர்களே இப் போது இந்த மனுசனுக்கு போய் எங்கட நேரத்தை வீணாக்கிவிட்டோமே என்றவாறு அழுது திரிகின்றனர். விக்கினேஸ்வரனை முதலமைச்சராக்குவதில் முன்னின்று செயலாற்றிய கம்பவாரிதி ஜெயராஜே இப்போது வெறுப்பின் உச்சிக்கு சென்று விட்டார். அவர் அழகு தமிழில் அரு மையான ஒரு மடலை எழுதியிருக்கின்றார்.

விக்கினேஸ்வரன் அவரது கடந்த எட்டுமாத கால முதலமைச்சர் வாழ்வில் என்னென்ன சாதனைகளை நிகழ்த்தியி ருக்கின்றார் என்பதை அருமையாக பட் டியலிட்டிருக்கின்றார். விக்கினேஸ்வரனின் அரசியல் செயற்பாடுகளில் காணப்பட்ட பலவீனங்களை மட்டும் ஜெயராஜா தொட்டுக்காட்டவில்லை மாறாக விக்கியின் சில நேர்மையற்ற அரசியல்வாதித் தனங்களையும் அவர் சுட்டிக்காட்டியி ருக்கின்றார்.

மேலும் முன்னர் கம்பன் கழகத்தினால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றின் போது இறந்த மக்களை நினைவு கூருமாறு விக்கி கேட்டு, அன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதனை செய்ய முடி யாது என்று தாங்கள் தெரி வித்ததற்காக, விக்கினேஸ்வரன் கழகத்தின் தலைவர் பதவியையே உதறிவிட்டுச் சென்றாக குறிப் பிட்டிருக்கும் ஜெயராஜ், ஆனால் அதே விக்கினேஸ்வரன், இன்று வடக்கு மாகாணசபை உறுப் பினர்களால் ஒழுங்கு செய்ய ப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்விற்கு செல்லாமல் ஒளிந்து கொண்டதையும் கம்ப வாரிதி அழகாகச் சொல்லி யிருக்கின்றார்.

ஏற்கனவே சில பத்தி எழுத்தாளர்க ளும் விக்கினேஸ்வரனை பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். விக்கினேஸ்வரன் ஜெயராஜின் எழுத்தால் ஏற்பட்ட சர்ச்சையை மூடிமறைக்கும் நோக்கில் ஒரு தடாலடி உரையை ஆற்றியிருக் கின்றார். அதில் வடக்கு கிழக்கு பகுதிகள், தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதை திட்டமிட்டு அரசாங்கம் இல்லாமலாக்க முற்படுவதாக ஒரு கதையை சொல்லியிருக்கின்றார். இப்படிச் சொன்னால்தான் தமிழ் மக்களை ஏமாற்றலாம என்பது விக்கிக்கு நல்லா தெரியும். ஜெயலலிதா தனிநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று கூறியிருக்கின்ற பின்னணியிலேயே விக்கினேஸ்வரன் இப்படிக் கூறியிருக்கின்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.