புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர்மாக்காரின் நூல்வெளியீட்டு விழா

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர்மாக்காரின் நூல்வெளியீட்டு விழா

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் சிங்கள மொழியில் எழுதிய கலாநிதி ரீ.பி ஜhயா பற்றிய நூல் வெளியீட்டு வைபவம் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் விமரிசையாக நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு சகல மதத் தலைவர்கள் கொழும்பு சாஹிரா மற்றும் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி அதிபர்கள், சகல அரசியல் கட்சிகளின் செயலாளர் தலைவர்கள் மற்றும் பௌத்த முஸ்லீம் புத்திஜPவிகள் ஒரே கூரையின் கீழ் ஒன்று கூடியிருந்தனர்.

ஸ்ரீ.ல.சு.கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஜ.தே.கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, Nஜ.வி.பியின் செலாளர் ரில்வின் சில்வா, முஸ்லீம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ச விதாரண, ஜனாநாயக முனன்ணியின் தலைவர் மனோ கணேசன், மற்றும் பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். இந்த அதிதிகளுக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நூல்களை வழங்கி வைத்தார்.

கொழும்பு சாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரேஸ்ட சட்டத்தரணி ஜhவித் ய+சுப், முன்னாள் கல்வியமைச்சர் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு nஜனிவா ஜக்கிய நாடுகள் அமையத்தின் பணிப்பாளராக கடமையாற்றும் அமரத்தின அபேசேகர, பிரதி கல்வியமைச்சர் மோஹன்லால் கிரேரு முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரும் ரீ.பி ஜhயா பற்றிய முன்மாதிரிகளையும் இந்த நட்டுக்கு அவர் ஆற்றிய சேவை பற்றியும் உரையாற்றினார்கள்.

இங்கு உரையாற்றிய இம்தியாஸ் பாக்கீர் மார்கார் - ரி.பி ஜயாவின் கல்வி, அரசியல், இன ஒன்றுமை, நாட்டுப்பற்றுடன் அவர் இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவை இந்த உலகுக்கு ஓர் முன்மாதியாகும். அவரின் கருத்துக்கள் எண்னங்கள போன்ற முன்மாதிகளை அரசியல்வாதிகள் பின்பற்றினால் நமக்கு சிறந்த விமோசனம் கிடைக்கும்.

சுதந்திரம் கிடைக்க முன்னர் சிலர் 50க்கு 50 என பல அரசியல் திட்டங்களை வகுத்து வாதிட்ட நிலையில் ரீ.பி ஜயா ஒரு இணைப்புப் பாலமாக இருந்து நாடுபூராவாகவும் சகல சமுகங்களிடமும் சென்று ஒற்றுமைபடுத்தி முதலில் நாம்; வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுக்கொள்வோம். என சொல்லி சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த ஒரு உதாரண புருசர்.

இந்தியாவில் சுதந்திரம் பெறும் காலத்தில் அப்போது இரண்டு கேலிச்சித்திரங்கள்; வரையப்பட்டிருந்தன. அதில் இந்தியாவில் ஜவர்லால் நேருவிடம் ஜpன்னா முஸ்லீ;ம்களுக்காக நாட்டை பிரிப்பதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பதையும். அடுத்த கேலிச் சித்திரத்தில்; இலங்கை சம்பந்தமாக முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்காவைப் பார்த்து டி.பி ஜhயா புன்னகைத்து கொண்டும் இருந்தார். நாம் இன ஜக்கியத்துடன் சகலரும் வாழ்வதற்குரியதொரு இலங்கையை கட்டியெழுப்புவோம். இந்த உதரணங்களை தற்போதைய பரம்பரையினர் தெரிந்து கொள்வதற்காக இந்த நூலை வெளியீட்டுள்ளேன் என இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.