புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறுபான்மை சமூகத்துக்கான காப்பீடாகும்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறுபான்மை சமூகத்துக்கான காப்பீடாகும்

,லங்கையில் நிறைவேற்று அதி காரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண் டும் என பல்வேறு தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரு கின்றன. அடுத்த ஜனாதிபதித் தேர்த லின் ஒரு முக்கிய கருவாக எதிர்க் கட்சிகளினால் இந்த வாதம் முன்வைக் கப்படுகின்றது. இலங்கை போன்ற பல் லின சமூகம் வாழும் ஒரு நாட்டுக்கு ஜனாதிபதி முறைமை தேவையானதா? என்ற கேள்விக்கு விடை தேடுவது படித்தவர்களுக்கு பிரச்சினையாக மாறியுள்ளது போன்று பாமரர்களுக்கு வாய்க்கு அவலாக அது மாறியுள்ளது. இலங்கையின் ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைப்பின் படி நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முக்கிய பாத்திரமாக கரு தப்படுகின்றது. இலங்கை அரசியல் யாப்பின் படி நிருவாகத் துறையின் தலைவராக அவர் செயற்படுகின்றார்.

நாட்டின் சகல நிருவாக நடவடிக்கை களுக்கும் அவர்தான் செயற்பாட்டு சக்தியாக காணப்படுகின்றார். சட் டத்துறைக்குப் புறம்பாக இவரது நியமனம் அமைந்துள்ளது. மற்றொரு முக்கிய அம்சமாகும். அதாவது, எமது நாட்டில் ஜனாதிபதி மக்களின் விருப்புக்கு ஏற்ப அவர்களின் வாக் குக்குப் பலத்தினால் தெரிவு செய்யப் படும் அவர் மக்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயற்படும் ஒருவராகவே காணப்படுவார் என்பது ஒரு வெளிப்படையான உண்மையா கும். சட்டத்துறைக்கு புறம்பான ஒரு அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல சிறுபான்மை சமூகங்கள் உள்ளன. ஆனால், அரை வாசிக்கும் மேற்பட்ட ஒரேயொரு பெரு ம்பான்மைச் சமூகமே இந்த நாட்டில் பலம் பெற்றதாக காணப்படுகின்றது. நாட்டிலுள்ள பாராளுமன்றத்திலும் சரி வேறு எவ்வகையிலும் சரி பெரு ம்பான்மையினர் ஒரு கருத்தில் உட ன்படும் போதும் அதற்கான அதிகார த்தை பெற்று நடைமுறைப்படுத்துவது என்பது இலகுவான காரியமாகும். பாராளுமன்ற ஆட்சி முறைமை கொண்ட், பிரதமருக்கு அதிகாரம் வழ ங்கப்பட்டுள்ள அரசியலமைப்பில் இந்த நிலைமை சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் ஆபத்தானதா கவே பார்க்கப்படுகின்றது. இதுபோ ன்ற சட்டவாக்கத்தின் போது சிறு பான்மையினரின் நலன் ஒரு பொருட் டாக பார்க்கப்படாது போகலாம். பெரும்பான்மையினரின் ஆதிக்கத் தின் கீழ் சிறுபான்மை சமூகம் தள் ளப்படும் பயங்கரம் காணப்படுகின்றது.

இந்த அச்சத்தை நீக்கும் ஒரு முக்கிய கருவியாக ஜனாதிபதி முறைமை உள்ளது என்றால் அது மிகையாகாது. எவ்வளவு தான் பெரு ம்பான்மையாக ஒரு சமூகம் காணப் பட்டாலும், அத்தகை சமூகத்தின் பிரதிநிதிகள் சிறுபான்மையினருக்கு எதிராக எந்தவொன்றையும் நிருவாகத் தலைவரான ஜனாதிபதியை மீறி செயற்படுத்த முடியாத ஒரு நிலைமை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியில் பொதிந்துள்ளது. நிருவாகக் குழு ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்படுகின்றது. இதன் தலைவர் ஜனாதிபதியே என்பது ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்த 1978ம் ஆண்டு அரசியலமைப்பு முறையின் தத்துவமாகும்.

இப்போது, இலங்கையில் ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டும் என்ற கோஷத்தைக் கொண்டு வரும் கட்சிகளும் நபர்களும் பார்க்கப்பட வேண்டியவர்கள். இந்த ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண் டும் என குரல் கொடுப்பதில் முன் னணியில் இருப்பவர்கள் பெரும்பா ன்மை சமூகத்தின் முப்போக்குவாதி களேயாகும். இந்த நாட்டில் நிறைவே ற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து அவர்கள் முன்னெடுக்க வரும் எதிர் கால வேலைத்திட்டம் என்ன என் பதை புரிந்து கொள்வது கஷ்டமான ஒரு விடயமல்ல.

இந்த நாட்டில் சிறுபான்மையினரு க்கு எதிரான கலவரங்கள் தடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அவசியமாகும். இவ்வாறான அசாதாரண நிலைமைகளில் துணிச் சலுடன் நிர்வாகத்தைக் கொண்டு செல்லவும், தனித்து நின்று தீர்மானங்களை முன்னெடுக்கவும் கூடிய ஒரு தலைவர் இலங்கை போன்ற நாட்டுக்கு தேவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

எமது நாட்டின் தற்போதைய தலை வர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறுபான்மையினர் விடயத்தில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வரும் ஒருவர் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். வடக்கில் 30 வருட பயங் கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் அப்பகுதி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தில் எடுத்த அதீத அக்கறை இன்று அவர்களை யுத்தத்தின் மோசமான வாழ்க்கை நிலை யிலிருந்து மாற்றியுள்ளது. ஏனைய பெரும்பான்மை சமூகங்கள் பெரும் அபிவிருத்திப் பாதையின் முன்னேற் றங்கள் சிறுபான்மையின ராகவுள்ள மக்களுக்கும் கிடைக்கச் செய்வதில் ஜனா திபதி எடுத்துவரும் முயற் சிகள் மறைக்க முடியாத உண்மைகளாகும். இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை யினருள் முஸ் லிம்களும் குறிப் பிடத்தக்கவர்கள். ஜனாதிபதியவர்கள் இப்பதவிக்கு வர முன்னரும் அவரு டைய அரசியல் மற்றும் சமூக வாழ் வில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் விவகாரத்தில் அதிக அக்கறையுடன் செயற் பட்ட ஒருவராக கரு தப்படுகின்றார். பலஸ்தீன் மக்கள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு உள்ளாக் கப்பட்டபோது இலங்கையிலிரு ந்த அப்போதைய முஸ்லிம் தலைமைகள் கூட வெளிப் படையாக அந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு குரல் கொடுக்க முன்வரத்தயங்கிய கால கட்டத் தில் ஜனாதிபதி முன்னின்று இலங்கையில் அந்நாட்டு மக்க ளுக்காக பாதையில் இறங்கி குரல் கொடுத்துள்ளார். இதனால் தான் பலஸ்தீனிலுள்ள ஒரு தெருவுக்கு இலங்கை ஜனாதிபதியின் பெயரை சூட்டினார்கள். இவ்வருடம் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீன் அரசாங்கத்தின் உயர் விருதான பலஸ்தீன் நட்சஷ்திரம் என்ற விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டுடன் கொண்டிருந்த சிறந்த உறவுதான் இந்த விருதுக்கு அவர் செலுத்திய விலை என்பது யாரும் அறியாத ஒன்றல்ல. ஜனாதிபதியும் இரு நாட்டு உறவை மேலும் பலப் படுத்துவதற்கு அப்போதைய பலஸ்தீன் ஜனாதிபதி யாkர் அரபாத் மற்றும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருக்கு இலங்கையின் உயர் விருதான மித்ரா விபூஷன விருதை வழங்கி கெளரவித்தார்.

அத்துடன், அடுத்த நாள் பலஸ்தீனில் மஹிந்த ராஜபக்ஷ தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றையும் ஜனாதிபதியின் சேவையைப் பாராட்டி அந்நாட்டு அர சாங்கம் திறந்து வைத்தமை குறிப் பிடத்தக்க அம்சமாகும். மட்டுமல்லாது, அரபு நாடுகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வளர்த்து வரும் உறவுப் பாலம் பலமானது. சவுதி, பஹ்ரைன், ஜோர்தான், கட்டார் போன்ற நாடுகளுடன் ஜனாதிபதி பேணி வரும் தொடர்புகள் இலங்கை முஸ் லிம்களின் மீது ஜனாதிபதி கொண்டுள்ள நன்மதிப்பை எடுத்துக்காட்டுகின்றது.

மட்டுமல்லாது, பஹ்ரெயின் மன்னர் ஹமாத் பின் இசா அல் கலிபாவி னால் அந்நாட்டின் உயர் விருதான கலீபா விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது பஹ்ரெயின் அரசாங்கத்தின் உயர் விருதாக கருதப்படுகின்றது. இரண்டாவது எலிசபத் மகாராணி, சவூதி அரேபிய மன்னர் உள்ளிட்ட சிலருக்கு மாத்திரமே இதுவரை இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. நட்பு நாடுகளுடன் இலங்கை பேணிவரும் இருதரப்பு உறவுகள், அபிவிருத்திகள் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து நாம் பெருமிதம் அடைவதுடன், நாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்த தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் உங்கள் முயற்சிகளை வரவேற்று இந்த விருதை வழங்குகிறோம் என்று பஹ்ரேன் மன்னர் தெரிவித்திருந்த கூற்று ஜனாதிபதி மீது அரபு நாடுகள் கொண்டுள்ள நன்மதிப்பை எடுத்துக் காட்டுகின்றது. இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு ஜனாதிபதி வழங்கிய பங்களிப்பினை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. பஹ்ரேன் நாட்டின் இவ்விருது 1940ம் ஆண்டு, முதல் தடவையாக வழங்கப்பட்டது. 1970ம் ஆண்டு முதல் சீரான முறையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு கிடைத்த இவ்வுயர் விருதின் மூலம் பெரும்பான்மை சமூகத்தினரிடையே முஸ்லிம்களுக்கு ஒரு வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெரும்பான்மை சமூகத் திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒருவராக இருந்தாலும் கூட, இந் நாட்டிலுள்ள சிறுபான்மையினர் மீது அவர் பேணிவரும் நல்லுறவு, வரலாற்றில் பதியப்பட்ட நிகழ்வுகளா கும். இவர் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள நிருவாகத் தலைவராக இருப்பது சிறுபான்மையினரின் வர வேற்பைப் பெற்ற ஒன்று என்பது மறுக்கமுடியாதது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.