புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
இலண்டன் மாநகரில் அரங்கேற்றம் கண்ட நாட்டியச் சுடரொளி இந்துஜh சிவதாஸ்

இலண்டன் மாநகரில் அரங்கேற்றம் கண்ட நாட்டியச் சுடரொளி இந்துஜh சிவதாஸ்

'இரசிகப்பிரியா' வழங்கிய செல்வி இந்துஜh சிவதாஸ் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிகக் கோலாகலமாக அண்மையில் இலண்டன் மாநகரே அதிசயிக்கத்தக்க வகையில் அஸ்குறோப்ற் (யுளுர்ஊசுழுகுவு) தியேட்டர் மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீமதி சித்ரா சோமசுந்தரம் அவர்களைக் குருவாகக் கொண்டு அவரிடம் முறையாகப் பரத நாட்டியத்தைக் கற்று அரங்கேற்றம் கண்ட செல்வி இந்துஜh அவர்கள் ஏழு வயதிலேயே பரதம் என்னும் நடனக்கலையினால் ஈர்க்கப்பட்டுத் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் ஆர்வத்துடன் கற்றுத் தேறியவர் என்ற வகையில் சிறப்புப் பெறுகின்றார்.

பலருடைய பாராட்டைப் பெற்ற இந்த அரங்கேற்ற நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக ஸ்ரீமதி செல்வலக்சுமி இராமகிருஸ்ணனும், கௌரவ விருந்தினராக ஸ்ரீமதி கீதா மகேஸ்வரம் அவர்களும், சிறப்பு விருந்தினராக சிவஸ்ரீ கைலை ஆர்.நாகநாதசிவம் குருக்களும் பங்குகொண்டு சிறப்பித்தனர்.

ஸ்ரீமதி சித்ரா சோமசுந்தரம் நட்டுவாங்கம் செய்ய, கலைஞர்களாக மிருதங்கம் ஸ்ரீ சோமசுந்தர தேசிகர், பாட்டு ஸ்ரீமதி சியாமளா விக்கேஸ்வரன், வயலின் ஸ்ரீ ஏ.ஜp.ஏ.ஞானசு;தரம், வீணை ஸ்ரீமதி மாலினி தனபாலசிங்கம், புல்லாங்குழல் ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதன், மோர்சிங் ஸ்ரீ கந்தையா சிதம்பரநாதன் ஆகியோர் தமது உச்ச இசைஞானத்தை வழங்கி அரங்கேற்றத்திற்கு சுவையு+ட்டினர். அனுபவம் மிக்க இக் கலைஞர்களின் அற்புமான இசைவிருந்து நாட்டியச் சுடர்ஒளி இந்துஜh சிவதாஸின் நடன அபிநயங்களுக்கு மெருகூட்டி நின்றன. மண்டபம் நிறைந்த இரசிகப் பெருமக்களின் கரகோ'ங்களுக்கு மத்தியில் அன்ன நடையாள் அழகு மயிலென மேடைக்கு வந்த காட்சி அற்புதமாக இருந்தது. அற்புதம் நிறைந்த கலைவேலைப்பாடுடன், நிறங்களைத்தூவி நிற்கும் மின்விளக்குகள் மிளிர நாட்டிய மண்டபம் புதுமையுடன் காட்சி கொண்டு நிற்க செல்வி இந்துஜh சிவதாஸின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆரம்பமாகியது.

முதல் நிகழ்ச்சியாக புஸ்பாஞ்சலி இடம்பெற்றது. இரண்டு கைகள் நிறைய மலர்களுடன் பாதம் பதிய சதங்கைகள் ஒலிக்க மலர்தூவி முதலில் கடவுளை வணங்கி குரு, கலைஞர்கள், மேடையிலுள்ளவர்கள், சபையோர்கள் ஆகியோரைப் பணிந்து, கணேச சுலோகம் ஒலிக்க அலாரிப்பு நடனம் முன்னிலைப்படுத்தப் பெற்றது.

அதைத் தொடர்ந்து ஜதீஸ்வரம் மிகவும் துல்லியமாக குறிப்பிட்ட எல்லைக்குள் நின்று வெளிக்காட்டப்பட்டது. 'தேவி நீயே துணை' என்ற பாபநாசம் சிவம் இயற்றிய கீர்த்தனம் ஒலிக்க நடனசுந்தரி அபிநயத்துடன் ஆடி சபையோரை மெய்சிலிர்க்க வைத்தார். அதைத் தொடர்ந்து தண்டாயுதபாணிபிள்ளை அவர்களின் தமிழ் பாடவர்ணம் அமைவாக நிற்யோபாகரம் இடம்பெற்றது.

இடைவேளையைத் தொடர்ந்து மாகாராஜ சுவாரி திருநல் என்பவரின் இந்தி கீர்த்தனைக்கு அமைவாக சிவநடனம் மிக அற்புதமாக அமைந்திருந்தது. மிகவும் விறுவிறுப்பாக இந்துஜh தனது நடனத் திறமையை வெளிக்காட்டி சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.

ஆண்டாள் பாசுரம் அமைந்த நடனத்தைத் தொடர்ந்து முதன்மை விருந்தினராக வருகைதந்த ஸ்ரீமதி செல்வலக்சுமி இராமகிருஷ்னன், பரதநாட்டியத்தின் சிறப்பு அம்சங்களை மிக அற்புதமாக எடுத்துரைத்ததுடன் அதன் நுணுக்கங்களையும் கூறி "அது ஒரு தெய்வீகக் கலையாக அமைந்திருப்பதால், அக்கலையைத் கற்பவர்கள் குருபக்தி மிக்கவர்களாகவும் இருப்பதுடன் பயபக்தியுடன் அக்கலையின்பால் ஒன்றிவிட்ட நிலையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். இன்று அரங்கேற்றம் கண்ட செல்வி இந்துஜh சிவதாஸ் தனது முழுமையான வல்லமையைக் காட்டி மிகச்சிறப்பான முறையில் அரங்கேற்றத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 'எல்லாவற்றுக்கும் மேலாக ஏழுவயதுச் சிறுமியாக இருந்த இந்துஜhவை பரநாட்டியம் பயிலஅனுப்பி எட்டு ஆண்டுகளுக்குப்பின் அவரின் அரங்கேற்றத்தை மிகச்சிறப்பான முறையில் ஒழுங்கமைத்த அவரின்; பெற்றோருக்கும் எனது மனப்பு+ர்வமான நல்வாழ்த்துக்களை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று தமது உரையில் எடுத்துரைத்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.