புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 

850 மில். ரூபா செலவில் நவீன மயப்படுத்தப்படவுள்ள கொட்டகலை நகரம்

850 மில். ரூபா செலவில் நவீன மயப்படுத்தப்படவுள்ள கொட்டகலை நகரம்

கொட்டகலை நகரத்தை நவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தினை (ணிorனீலீrn town) ஆரம்பிக்கும் பொருட்டு இ.தொ.கா பொதுச்செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை பிரதேச சபை யின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

தோட்டத் தொழிலாளர்கள் தமது தேவைகளையும், விருப்பங்களையும் நிவர்த்தி செய்யும் முகமாக நவீன வசதி களை கொண்ட சந்தைத் தொகுதி 3ளி திரைப்பட அரங்கு, நவீன ஆடை விற்பனை நிலையம், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா, மிகவும் பெரியள விலான நீச்சல் தடாகம் மற் றும் வங்கிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப வசதிகளை கொண்ட நட்சத்திர ஹோட் டல்கள் போன்றவை அமைப் பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

மக்கள் வெளியிடங்களுக்குச் சென்று பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தி கொட்டகலை நகரத்திலேயே தமது தேவைகளையும், விருப்பங்க ளையும் நிவர்த்தி செய்யக்கூடியதாக நவீன வசதிகளுடன் கட்டிடங்கள் அமைக்கப் படவுள்ளன.

இந்நவீன நகரத்தின் மாதிரி வரைபடத் தையும் அவற்றிற்கான இடத்தினை அமைச்சர் பார்வையிட்டதுடன், இந்நகரம் 850 மில்லியன் ரூபா செலவில் நவீன மயப்படுத்தவுள்ளதாகவும், இவ்வேலைத் திட்டம் தொடர்பாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடப் பட்டதன் பின்னர் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் உட்பட இ.தொ.கா தலைவரும், பொருளா தார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கால்நடை அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவி ருத்திசபை பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, பாதுகாப்பு அமைச்சு, வன பாதுகாப்பு அமைச்சு, மற்றும் சூழல் பாதுகாப்பு அதிகார சபையி ஆகியவற்றின் உயரதிகாரிகள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.