புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் கம்பன்விழா 2014

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் கம்பன்விழா 2014

உலகக் கவிஞன் கம்பனின் பெயரால் கடந்த 34 ஆண்டுகளாக இயங்கிவரும் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் 'கம்பன் விழா" எதிர்வரும் 13 தொடக்கம் 15 வரையான திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. முன்னர் யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய அளவில் நல்லூர் வீதியில் கம்பன் விழாக்கள் நடைபெற்றதை ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். 1995 இடப்பெயர்வின் பின்னர் இவ் விழாக்கள் நடைபெறாமல் போயின. பின்னர் கடந்த இரு ஆண்டுக ளாகக் கம்பன் விழா யாழில் நடைபெற்றுவருகிறது. இவ்வாண்டு பழைய சிறப்பினைத் தொடுமுகமாக அகில இலங்கைக் கம்பன் கழகம் மேற்குறித்த மூன்று நாட்களிலும் கம்பன் விழாவினை நடாத்த முடிவு செய்துள்ளது. இவ்விழாவின் காலை நிகழ்ச்சி கள், நல்லூர் கோயில்; வீதியில் அமைந்துள்ள கம்பன் கோட்ட த்திலும், மாலை நிகழ்ச்சிகள் நல்லூர் ஸ்ரீ துர்க்கை அம்மன் மணிமண்டபத்திலும் நடைபெறவுள்ளன. இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவென தமி ழகத்திலிருந்து புகழ்பெற்ற பேச் சாளர்கள் புலவர் மா. இராமலி ங்கம், பேராசிரியர் வி. அசோக் குமாரன், டாக்டர் ரி. ரெங்கராஜh ஆகியோர் வருகை தருகின்றனர்.

இவ்வாண்டுக் கம்பன்விழாவின் திருநாள் மங்கலம், 13ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கே. ஆர். சுந்தரமூர்த்தி குழுவினரின் மங்கல இசையுடன் 'தினக்குரல்" நிறுவுனர் எஸ். பி. சாமி மங்கல விளக்கேற்றி வைக்க ஆரம்பமாகிறது. இவ்விழாவில் நல்லை ஆதீன சுவாமிகள், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் எஸ். nஜபநேசன், பள் ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் மௌலவி அப்துல் கமத் உள்ளி ட்ட சமயத் தலைவர்கள் ஆசியுரை வழங்க, வட மாகாண சபையின் அவைத் தலைவர் கௌரவ சீ.வி.கே. சிவஞானம் தலைமையுரை ஆற்றி விழாவைத் தொடக்கி வைக்கிறார். அன்றைய விழாவின் தொடக்கவு ரையை யாழ் மேல்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும், கொழு ம்புக் கம்பன் கழகத்தின் பெருந்தலைவருமான மாண்புமிகு nஜ. விஸ்வ நாதன் அவர்கள் ஆற்றவுள்ளார்.

தொடர்ந்து, 'இராம நாடகக் கீர்த்தனை" நூலும்;, 2013,ல் நடைபெற்ற யாழ்க் கம்பன் விழா இறுவட்டுக்களும் வெளியிடப்படவுள்ளன. இவற்றின் முதற் பிரதிகளை கரிகணன் அச்சக உரிமையாளர் சி. ராஜ் குமார் அவர் களும், யாழ். வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் வெ. சுதர்சன் அவர்களும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

விழாவை முன்னிட்டுக் கம்பன் கழகத்தினரால் நடாத்தப்பட்ட வித்து வான் ஆறுமுகம் நினைவுக் கவிதை, யாழ் தேவன் நினைவுப் பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பினைத் தொடர்ந்து, அன்றைய நிகழ்ச்சியாக, இரண்டாம் நாள் காலை, பு+பாலசிங்கம் புத்தகசாலை அதிபர் ஸ்ரீதரசிங் மங்கல விளக்கேற்ற, கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் கா. கணபதிப்பிள்ளை தலைமையுரை ஆற்றி விழாவைத் தொடக்கி வைக்கி றார். அன்றைய விழாவின் தொடக்கவுரையை கலா நிதி ஆறு. திருமுருகன் ஆற்றவுள்ளார். பின் அணிசெய் காவியம் எனும் தலைப்பில் கவிதெரி அரங்கம் இடம்பெறவுள்ளது.

இரண்டாம் நாள் மாலை, லண்டன் சைவ முன்னே ற்றச் சங்கம் சார்ந்த எஸ். பாலசிங்கம் மங்கல விள க்கேற்ற, யாழ் மாநகர சபை முதல்வர் கௌரவ ப. யோகேஸ்வரி தலைமையுரை ஆற்றி விழாவைத் தொடக்கி வைக்கிறார். மூன்றாம் நாள் காலை பெஸன் ஹவுஸ் அதி பர் த.கந்தசாமி மங்கல விளக்கேற்ற, யாழ். பல்கலையின் பேராசிரியர் மா. சின்னத்தம்பி தலைமையுரை ஆற்றி விழாவைத் தொடக்கி வைக்கிறார். தொடக்கவுரையை சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் அ. கைலாயபி ள்ளை ஆற்றவுள்ளார். பின் கம்பன் காட்டும் எண்ணினால் கவிதை பாட எண்ணினால் எனும் தலை ப்பில் கவியரங்கமும், வள்ளுவ நெறியில் கம்ப நாடன் எனும் தலைப்பில் உரையரங்கமும் இடம்பெறவுள் ளன. மூன்றாம் நாள் மாலை லயன் த. பாலசுந்தரம், யாழ் அரச அதிபர் சு. அருமைநாயகம் தலைமையுரை ஆற்றி விழாவைத் தொடக்கி வைக்கிறார். தொடக்க வுரையை பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் அபி விருத்தி அமைச்சர் மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா வும் நிறைவுரையை ஊடகவியலாளர் ந. வித்தியாதர னும் ஆற்றவுள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.