புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
திருவாசகம்; சிங்கள மொழி நூலை வெளியிட்டார் வாசுதேவ நாணயக்கரா

திருவாசகம்; சிங்கள மொழி நூலை வெளியிட்டார் வாசுதேவ நாணயக்கரா

700 பக்கமுள்ள திருவாசகம் சிங்கள மொழி நூலை அமைச்சர் வாசுதேவ நாணயக்கரா வெளியிட்டார்!

1,000 ஆண்டுகளுக்கு முன்னர் மாணிக்கவாசகர் அரு ளிய நூல் திருவாசகம்.

திருவாசகத்தின் முழுமையான முதலாவது மொழிபெ யர்ப்பு 115 ஆண்டுகளுக்கு முன் 1900இல் வெளியானது. மொழிபெயர்த்தவர் ஜp. யு+. போப்பையர். ஆங்கில மொழிபெயர்ப்பு.

இந்தியில் பேரா. சுந்தரம் மொழிபெயர்த்து கொல்கத்தா சாந்திநிகேதன் வெளியீடாக 1995இல் நூலாயது.

மலையாளத்தில் திருவாசகம் திரு. சந்திரசேகரன் நாயர் மொழிபெயர்த்து திருவனந்தபுரம் மன்னர் வெளியிட்டு 2012இல் நூலாயது.

தெலுங்கில் திருவாசகம் பேராசிரியர்கள் பரிமளம்+ அரம்பை மொழிபெயர்த்து 2013இல் திருமலை திருப்பதி தேவத்தானத்தால் நூலாயது.

கன்னடத்தில் திருவாசகம் பேரா. nஜயலலிதா மொழிபெயர்த்து 2014இல் நூலாயது.

வடமொழியில் திருவாசகம் தெரு. ச. கோதண்டராமன் மொழிபெயர்த்துச் சுவாமி தயானந்த சரசுவதி அவர்கள் அச்சிடுவிக்க 2014இல் நூலாகிறது.

சிங்களத்தில் திருவாசகம் திரு. வடிவேல் இராமசாமி, திரு. இலிண்டன், திரு. வே. சண்முகநாதன் (மூவரும் கல்முனை) மொழிபெயர்த்துள்ளனர். வெளியீட்டாளரை வேளாளரான சென்னையை சேர்ந்த காந்தளகத்தின் உரிமையாளர் சச்சிதானந்தம் தேடிக்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக் கைலாசபதி அரங்கத்தில் 26.05.2014 அன்று மாண்புமிகு அமைச்சர் வாசுதேவா நாணயக்கார இந்து, புத்த கலாச்சாரப் பேரவையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார், வருக, திருவாசகச் சிங்கள மொழிபெயர்ப்பபை அவரிடம் காட்டுக என சச்சிதானந்தம் அவர்களை அழைத்தவர் கலாநிதி மோகன். அமைச்சரின் தமிழ்ப்பிரிவுச் செயலாளர் உள்ளார்.

அங்கே நாடாளுமன்ற உறுப்பினர் வண. அதுரலிய இரத்தின தேரர் இருந்தார். தமிழ்ச் சாகித்தியங்கள் சிங்கள மக்களிடையே முழுமையாகப் போய்ச் சேரவில்லை என வண. அதுரலிய இரத்தின தேரர் தனது உரையில் குறிப் பிட்டார். திருக்குறள் சிங்கள மொழிபெயர்ப்புச் சிங்கள மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக உள்ளதாகவும் கூறினார்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கராவும் அப்போது மேடையில் இருந்தார். வாசுதேவ நாணயக்காராவும் சச்சிதா னந்தம் அவர்களும் ஒரே அரசியல் கொள்கையை மேடைகளில் பேசியவர்கள். இப்பொழுது வாசுதேவ நாண யக்காராவும் அமைச்சராகியுள்ளார். ஆனாலும் தற்போதும் திரு. சச்சி தானந்தம் அவர்களுக்கு இனிமை மாறாத நண்பராக உள்ளார்.

அமைச்சரிடம் திருவாசகம் சிங்கள மெழிபெயர்ப்பைக் காட்டிய போது, பக்கங்களைப் புரட்டிப் பார்த்த பின்னர் வண. அதுரலிய இரத்தின தேரரிடம் அமைச்சர் நூலைக் கொடுத்தார்.

திருவாசகம் சிங்கள நூலின் பக்கங்களைப் புரட்டிய தேரர், திரு. சச்சிதானந்தம் எழுதிய முன்னுரையைப் படித்தார். உடனே பாராட்டினார். "அருமையான இந்த நூலில் எனக்கு ஒரு படி தருவீர்களா" எனக் கேட் டுள்ளார். மேடையில் வெளியிட்டு வைத்தால், ஒரு படியை தருவதாக திரு. சச்சிதானந்தம் கூறி மேலும் மேலதிகப் படிகள் அச்சிடப் பணமில் லாமல் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

அப்போது, இந்த அருமையான நூல் சிங்கள மக்களுக்குக் கிடைக்க வேண்டும் எனத் தேரர் கூறினார். அச்சிட்டுத் தரவேண்டிய கடமை அமைச்சருக்கு உள்ளது. "அச்சிட்டுத் தாருங்கள்" என அமைச்சரிடம் தேரர் கேட்டார். அமைச்சரும் மேடையிலேயே அச்சிட ஒப்புக் கொண் டார். செலவு விவரங்களைக் கடிதமாகத் தாருங்கள் என அமைச்சர் திரு. சச்சிதானந்தம் அவர்களிடம் கேட்டுள்ளார்.

அமைச்சர் எழுந்தார், தேரரும் எழுந்து, அமைச்சர் நூலை வெளியிட, தேரர் பெற்றுக் கொண்டார்.

விழா நிறைவில் புறப்படமுன் திரு. சச்சிதானந்தம் இருந்த இடம் தேடித் தேரர் வந்து, முகவரி, தொலைப்பேசி விவரம் பெற்றுக் கொண்டார். திருமுறை முழுவதும் சிங்களத்துக்கு மொழிபெயர்ப்பாகும் செய்தியை திரு. சச்சிதானந்தம் அவரிடம் சொன்னார். செலவுகளை ஏற்குமாறு அரசிடம் சொல்வேன், பணியைத் தொடருங்கள் எனத் தேரர் ஊக்குவித்தார். தருமபுரம் ஆதீனத்தின் பன்னிரு திருமுறை மொழி பெயர்ப்புத் திருப்பணியில் திரு. சச்சிதானந்தம் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.