புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

வெள்ளிக் கருத்துக் களத்தின் ஒரு பக்கச் சார்பான அறிக்கை

வெள்ளிக் கருத்துக் களத்தின் ஒரு பக்கச் சார்பான அறிக்கை

புலமையாளர்களும், ஆய்வறிவாளர்களும் அங்கத்துவம் வகிக்கின்ற வெள்ளிக் கருத்துக் களம் (பிriனீay ஜீoruசீ) எனும் அமைப்பு கடந்த சனிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் வடமாகாண சபை இயங்கு வதற்கும், மக்களுக்குப் பணியாற்றுவதற்கும் அரசாங்கம் தடையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது பக்கச் சார்பானதும், திட்ட மிட்டு அரசாங்கத்தைச் சாடுவதற்காக சோடிக்கப்பட்ட துமான ஓர் அறிக் கையாகவே கொள்ள வேண்டியுள்ளது. இந்த அமைப் பின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் எதிர்மறையான கருத்துடைய ஒரு சிலரிடையே மட்டுமே தமது ஆய்வுகளை மேற்கொண் டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.

யாழ்ப்பாணத்திற்கும், கிளிநொச்சிக்கும் பயமில்லாது துணிந்து சென்று இந்த வெள்ளிக் கருத்துக் களம் இதுபோன்ற ஆய்வுகளை நடத்த இன்று அப்பகுதிகளில் அமைதி நிலையையும், பாதுகாப்பையும் தோற்றுவித்தது இந்த அரசாங்கமே என்பதை முதலில் அந்த அமைப்பின் அறிவாளிகள் அறிந்து கொள்ள வேண்டும். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலிகளின் பிடியில் இப்பகுதிகள் இருந்தபோது இந்த அமைப்பினரால் அங்கு சென்றிருக்க முடியுமா? சென்றிருந்தாலும் புலிகளைப் பற்றிய உண் மைகளை எழுதித்தான் இருக்க முடியுமா?

புலிகளால் அடக்கியாளப்பட்ட அப்பகுதி மக்களை மீட்டெடுத்து இன்று அவர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்துள்ள அரசாங்கத்தின் மீது இத்தகைய சில அமைப்புக்கள் தமது பிரசாரத்திற்காகப் பொய்யான தகவல் களை வழங்கி வருகின்றன. யுத்தம் நடந்த காலப் பகுதியிலும் இவர்கள் புலிகள் செய்த அநியாயங்களை இதுபோன்ற அறிக்கைகளாக விட்டிருந் தால் இவர்கள் மீது ஓரளவாவது நம்பிக்கை வரும். தேவையான காலத்தில் ஓடி ஒளிந்துவிட்டு நாட்டில் அமைதியான சூழல் நிலவுகையில் இவர்கள் தமது அமைப்புக்களை வளர்ப்பதற்காகப் பொய்ப்பிரசாரங்களை மேற் கொள்வது வேதனை தருகிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் யுத்தம் முடிவடைந்து சுமார் நான்கு வருடங்களாக வடக்கில் பாரிய அபி விருத்திகளை அது மேற்கொண்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மூலமாக அங்குள்ள ஒவ்வொரு குக்கிராமங்களும் அபிவிருத்தி கண்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று விடாப்பிடியாக நின்ற காரணத்தினால் அங்கு மாகாண தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கடந்த பத்து மாதங் களாக அம்மாகாண சபையை நடத்த முடியாது தடுமாறி வருகிறது. ஏற்க னவே வெற்றி கொள்ளப்பட்ட உள்ளூராட்சி சபை மன்றங்களில் கூட்ட மைப்பின் உட்கட்சிப்பூசல் நிலை காரணமாக எவ்விதமான அபிவிருத்தி இலக்கையும் அடைய முடியாதுள்ளது. அதே நிலையையே மாகாண சபையிலும் காணப்படுகிறது. இதனை மூடி மறைக்க அரசாங்கத்தின் மீது பழியைப் போடுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாடிக்கையாகி விட்டது. இதற்கு வெள்ளிக் கருத்துக்களம் போன்ற அமைப்புக்களும் துணை போவதையே அவதானிக்க முடிகின்றது. இந்த வெள்ளிக் கருத்துக் களம் நடத்திய ஆய்வில் கூட்டமைப்பு தனது உட்கட்சிப்பூசல் மற்றும் பதவிப் போட்டிகள் காரணமாகவே மாகாண சபையைக் கொண்டு நடத்த முடியாது திக்குமுக்காடுகின்றனர் என அறிக்கை சமர்ப்பித்திருந்தால் அதுவே உண்மை, அதுவே யதார்த்தம். இதனைவிடுத்து அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டிருப்பதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

வெள்ளிக் கருத்துக்கள அமைப்பினர் தமது ஆய்வில் தமிழ்க் கூட்டமைப்பின் கொள்கைக்குச் சார்பானவர்களையும், அதன் அரசியல் தலைவர்களையும் மட்டுமே கருத்தாளர்களாக எடுத்துள்ளது. அரசாங் கத்தின் சார்பிலோ அல்லது பொறுப்பு வாய்ந்த அரசாங்க அதிகாரி களிடமோ அல்லது பொது மக்களிடமோ இந்த அமைப்பு நியாயமான கருத்துக்களைக் கேட்டறிந்ததாகத் தெரியவில்லை. ஏதோவொரு தரப்பி னரைத் திருப்திப்படுத்துவதாகவே இவர்களது ஆய்வும், அறிக்கையும் அமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. வடமாகாண சபை அமையப் பெற முன்னர் இந்த மக்களுக்குத் தேவையானவற்றை வழங்கியது யார் என்பதையும், அவ்வேளையில் நிர்வாகக் கட்டமைப்பு சரியாக எவ்வித மான குறைபாடின்றி, இயங்கியதையும் இவ்வமைப்பு அறிந்து கொள்ள முற் படாமை இவர்களது நம்பகத் தன்மையில் நம்பிக்கை இழக்க வைத்துள்ளது.

இந்த அமைப்பு பக்கச்சார்பின்றித் தமது ஆய்வை மேற்கொண்டிருப்பின் வடக்கில் அரசாங்க இயந்திரத்திற்கு முதுகெலும்பாக இருந்து வருகின்ற வடமாகாண ஆளுநர், அப்பகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப் பாண நகர மேயர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரிடமும் கருத்தறிந்து இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அவ்வாறு செய்ய வில்லை. அதனால்தான் இந்த அமைப்பின் அறிக்கை வெளிவந்த மறுநாளே ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தனது பக்க நியாயங்களை வெளிப்ப டுத்தி அறிக்கை ஒன்றை விடுத்தார். அதில் அவர் இந்த வெள்ளிக் கருத்துக் களத்தினரிடம் பல கேள்விகளைத் தொடுத்துள்ளார். வெள்ளிக் கருத்துக் களத்தினர் பக்கச்சார்பற்றதொரு அமைப்பாயின் அவரது வினாக் களுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்.

இலங்கை அரசியலமைப்பில் மாகாண சபைகளின் செயற்பாடுகளுக்கு எனத் தனியானதொரு பிரிவு உள்ளது. அதில் எவ்வாறான செயற்பா டுகளை மாகாண சபைகள் மேற்கொள்ள முடியுமெனத் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது. அதன் பிரகாரமே நாட்டிலுள்ள ஏனைய மாகாண சபைகள் இயங்குகின்றன. நிலைமை அவ்வாறிருக்க வடமாகாண சபை அல்ல எந்தவொரு மாகாண சபையையும் அரசியலமைப்பை மீறிச் செயற்பட அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இதில் வடமாகாண சபை விதிவிலக்காக இருக்க வேண்டுமெனச் சிலர் நினைத்தால் அது அவர்களது அறியாமையையும், முதிர்வில்லாத அரசியலையுமே எடுத்துக் காட்டும்.

எனவே வெள்ளிக் கருத்துக்களம் வடமாகாணம் தொடர்பான தனது அறிக்கையை மீள பரிசீலனை செய்ய வேண்டும். வடக்கிற்கு மீண்டுமொரு தடவை சென்று அங்குள்ள நிலைமைகளை குறிப்பிட்ட ஒரு தரப்பினரிடம் மட்டுமல்லாது சகல தரப்பினரிடமும் கேட்டறிந்து கொண்டு தனது புதிய அறிக்கையை வெளியிட வேண்டும். சிறந்த கல்விமான்களையும், ஆய்வா ளர்களையும் கொண்ட நம்பிக்கைக்குரிய அமைப்பாக இருந்துவரும் இதுபோன்ற அமைப்புக்கள் மேலெழுந்தவாரியாக ஆய்வு செய்து அறிக் கைகளை விடுவது ஆரோக்கியமானதல்ல. இவ்வாறான அவசரமானதும், நன்கு ஆராயப்படாததுமான அறிக்கைகளை வெளியிடுவது ஏதோவொரு தரப்பினரைத் திருப்திப்படுத்தத் தயாரிக்கப்பட்டதோவெனும் சந்தேகத்தை மக்கள் மனங்களில் ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில் அதுவே உண்மை யாகவும் இருந்துவிடுகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.