புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
அரசின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டே அரசு மீது மு.கா விமர்சனம்

தேர்தலை இலக்கு வைத்து இனவாதம், மதவாதம் பேசும் சிலர்:

அரசின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டே அரசு மீது மு.கா விமர்சனம்

கடந்த காலத்தை நினைவுபடுத்துகிறார் பைஸர் முஸ்தபா

அரசாங்கத் தின் சிறப்புரி மைகளை யும், சலுகை களையும் பயன்படுத்தி யும், அனு பவித்தும் வரும் ஸ்ரீல ங்கா முஸ் லிம் காங்கிரஸ், அரசாங்கத்திற்கே எதிரான செயற்பாடுகளை முன்னெ டுத்துள்ளதாக பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து பேசும்போதே அவர் இதனை கூறினார். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதனையே மேற்கொண்டு வந்தது எனவும், எனினும் மேல் மாகாண சபைத் தேர்தலில் மத்திய கொழும்பு மக்கள் அதனை மேற்கொள்ள இடமளிக்க மாட்டார்கள் எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். தேர்தலை இலக்கு வைத்து இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் எவருக்கும் மக்கள் வாக்களிக்கக்கூடாது.

அரசாங்கம் வழங்கிய வாகனங்கள், பாதுகாப்பு மற்றும் ஏனைய சிறப்புரிமைகளை பயன்படுத்திகொண்டு அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்து கனவான் அரசியல் அல்ல. இதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரட்டை நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.முஸ்லிம் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் முஸ்லிம் மக்களை ஏமாற்றி நாடு முழுவதும் வாக்குகளை கொள்ளையிட்டன. ஆனால் மேல் மாகாண சபைத் தேர்தலில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம் என சகல இன மக்களும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவமாக மத்திய கொழும்பு தொகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இதனை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். எனவே மக்கள் இதற்கு இடமளிக்கக்கூடாது என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.