புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
நோயாளர், பொதுமக்கள், அரசியல்வாதிகள் பலர் கொலை;

நோயாளர், பொதுமக்கள், அரசியல்வாதிகள் பலர் கொலை;

IPKF, விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களில்

நேரில் கண்ட சாட்சியாக இருக்கிறார் ஹரிகரன்

இலங்கையில் அமைதி காக்கும் படையில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவத்தினரும் (யிஜிறிபி), விடுதலைப் புலிகள் அமைப்பும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக விருந்த ஆர். ஹரிகரன் தெரிவித்துள்ளார். த இன்டர் நெஷனல் லோ ஜேர்னல் ஒப் லண்டன் சஞ்சிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதி காக்கும் படை வடக்கில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வல்வெட்டித் துறையில் படையினர் மேற்கொண்ட பதுங்கி தாக்குதலின்போது அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த மனித உரிமை மீறல்கள் தெடர்பில் உண்மையான விசாரணைகளை மேற் கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் இராணுவ தலை மையகமும் அரசாங்கமும் தவறு இழைத்துவிட்டதாக ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்த நோயாளர்கள் மற்றும் வைத்தியர்கள் அப்போது இந்திய அமைதிகாக்கும் படையினரால் படுகொலை செய்த மனித உரிமை மீறல்களை இந்திய அமைதி காக்கும் படையினர் புரிந்துள்ளதையும் ஹரிகரன் ஒத்துக்கொண்டுள்ளார்.

இதேநேரம் எல். ரி.ரி. ஈ. யினரும் இதே பாணியில் அப்பாவி மக்களை பிடித்து மின் கம்பங்களில் கட்டி டயர் இட்டு எரித்ததை தான் நேரில் கண்டதாகவும் அவர் குறிப்பிட் டுள்ளார்.

அவ்வாறு எரிக்கப்பட்ட மக்களின் பாதி எரிந்த உடல்களை தான் பார்த் ததாகவும் அவற்றை பார்த்தபோது பிரபா கரனின் தலைமைத்துவம் மற்றும் ஈழம் தொடர்பாக கருத்தில் தான் கொண் டிருந்த மிக குறைந்த ஆர்வத்தையும் தான் இழந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் தனக்கு முழு அதிகாரமும் வழங்கப்படவேண்டுமெனவும் இடைக்கால நிர்வாகத்தில் பகுதி அளவிலான அதிகாரம் வழங்கப்படுவதை அவர் விரும்பாமல் மோதல்களை தொடர்ந்தமையினாலும் போரில் அவர் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரபாகரனை ஒரு சுதந்திர போராளியாக நாம் கருதவில்லை. ஏனைய ஆயுத குழுக்களின் தலைவர்கள் மற்றும் தன்னுடன் ஒத்து வராத தமிழ் அரசியல் தலைவர்களை அவர் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்ததாகவும் ஹிரிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.