புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
ஜ. ம. மு எனது கட்சி, அதில் விரும்பியதை நான் செய்வேன்

என்னை விமர்சிக்க பிரபா கணேசன் யார்?

ஜ. ம. மு எனது கட்சி, அதில் விரும்பியதை நான் செய்வேன்

மனோ கணேசன் சீற்றம்

ஜனநாயக மக்கள் முன்னணி எனது கட்சி. அக்கட்சியின் வளர்ச்சிக்காக நான் விரும் பியதை விரும்பி யவாறு செய்வேன். அதனை எவரும் கேட்க முடியாது. குறிப்பாக அது பற்றி விமர்சிக்க பிரபா கணேசன் யார்? எனது பதவியை நான் சிங்கள பெண் மணிக்கும் கொடுப்பேன் அல்லது வேறு எவருக்கும் கொடுப்பேன். அது எனது இஷ்டம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தன் மீது பிரபா கணேசன் எம்.பி உட்படச் சிலர் தொடர்ச்சியாக தேவையற்ற குற்றச்சாட் டைத் தெரிவித்து வரு கின்றனர். இது அவர் களுக்குத் தேவையற்ற விடயம். எனது கட்சி விடயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.

அவர்கள் தமது அலுவலைப் பார்க்கட்டும் எனத் தெரிவித்த மனோ கணேசன் நான் சிங்களப் பெண்மணிக்கு மாநகரப் பதவியைக் கொடுத் ததாகத் தெரிவிக்கும் பிரபா கணேசன் எம்.பி தான் மட்டும் தமிழ் அரசாங்கத்திலா இணைந்து செயற்படுகிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.

உண்மையில் நான் இல்லையெனில் பிரபா கணேசனுக்கு எம்.பி பதவியே கிடைத்திருக்காது. அதுமட்டுமல்ல அவருக்கு அளிக்கப்பட்டு வெற்றிபெற்ற வாக்குகளும் தமிழரது வாக்குகளே எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.