புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
கம்பன் விழா; நிறைவு இன்று

கம்பன் விழா; நிறைவு இன்று

கொழும்புக் கம்பன் கழகத்தின் கம்பன் விழாவின் நிறைவு நாள் காலை நிகழ்வு கள் 9.30 மணிக்கு முன்னாள் ஐ.நா. வின் வதிவிடப் பிரதிநிதி திரு. எஸ். திருஞான சம்பந்தர் தம்பதியரின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிறது. இந்நிகழ்வில் திரு. பி.நித்தியானந்தன் கடவுள் வாழ்த்து இசைப்பார். தொடர்ந்து, தலைமையுரையினை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் சி.தில்லைநாதன் ஆற்றுவார். மாலை நிகழ்வுகள் 4.30 மணிக்கு திரு.எஸ்.சிதம்பரநாதன் குழுவினரின் மங்கல இசையுடன் ஆரம்பமாகின்றது.

இந்நிகழ்வின் மங்கல விளக்கினை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாட அதிபர் திரு.ஏ.பி.ஜெயராஜா தம்பதியர் ஏற்றிவைப்பர். கடவுள் வாழ்த்தினை திரு.அ.ஆரூரன் வழங்குவார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முதுநிலை பேராசிரியர் சுனில் ஆரியரத்ன அவர்கள் தலைமை யுரையை நிகழ்த்துவார்.

உலகப் புகழ் பெற்ற இசை மேதை நாதவாணி “கலைமாமணி” பம்பாய் ஜெயஸ்ரீ அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா பொற்கிழி, விருதுப் பட்டயம் என்பனவற்றைக் கொண்ட கம்பன்புகழ் விருது வழங்கப்படவுள்ளது.

நிறைவாக, சிறப்பு நிகழ்ச்சியான வழக்காடு மன்றம் ‘கம்பவாரிதி’ இ.ஜெயராஜ் அவர்களும் கெளர வடத்தோ சரவணன் அவர்களும் நீதியரசர்களாக அமர நடைபெறவுள்ளது. “முன்பின் முரணான ராமனின் செயற்பாடுகள்” குற்றம் என்ற தலைப்பில் வழக்கு முன்வைக் கப்படுகிறது. ‘இராமனுக்கு வழங்கிய வாய்ப்பை வாலிக்கு வழங்காமையை’ “அகலிகைக்கு வழங்கிய வாய்ப்பை சீதைக்கு வழங்காமை” ஆகிய குற்றங்களை தி. திருநந்தகுமார், த. இராமலிங்கமும் ஆகியோர் சுமத்த வுள்ளனர். இரெ.சண்முகவடிவேலும் வி.அசோக்குமாரனும் எதிர்த்து வாதிடவுள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.