புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
1958 இனக்கலவரத்தின் போது அண்ணா சமல் சக தமிழ்

1958 இனக்கலவரத்தின் போது அண்ணா சமல் சக தமிழ்

மாணவர்களை காப்பாற்றி அப்பாவின் பாராட்டைப் பெற்றார்.
ஏழைப் பிள்ளையின் நண்பன் - 19

இந்தக் கதையை கேட்டுக் கொண்டிருந்த மஹிந்தவின் நண்பர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். இவ்வளவு பெரிய உன்னதமான மனிதரின் மகனான நீங்கள் தமிழ் பிள்ளைகளைக் காப்பாற்ற இன்று முன்வராவிட்டால் யார் அவர்களைக் காப்பாற்றுவார்கள் என்று கங்கந்த மஹிந்தவிடம் கேட்டார். திரு.ஏப்ரஹாம் ரிகொவ்வுர் என்ற தத்துவஞானி அப்பாடசாலையின் மாணவர்களின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியராக இருந்தார். மஹிந்த சக தமிழ் மாணவர்களைக் காப்பாற்றிய செய்தி ஆசிரியர் கொவ்வுரின் காதுக்கு வந்தவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அன்று முதல் கொவ்வுர் பாடசாலையில் பிள்ளைகளின் நல் ஒழுக்கம் குறித்து மஹிந்தவுடன் கலந்துரையாட ஆரம்பித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறுவனாக இருந்த போது இடம்பெற்ற சம்பவங்களை தொகுத்து தெனகம சிறிவர்தன என்ற நூலாசிரியர் எழுதிய மூலப்பிரதியை செல்வி முதுபத்மகுமார ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், இந்த ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கத்தை ஏழைப்பிள்ளையின் நண்பன் என்ற தலைப்பில் எஸ்.தில்லைநாதன் மொழிபெயர்த்துள்ளார். இந்த கதை வாராவாரம் தினகரன் வாரமஞ்சரியில் வெளிவரும்.

* * * * * * * *

1958ம் ஆண்டின் இனக்கலவரம் வெடித்த போது பாராளுமன்ற உறுப்பினரான டி.ஏ.ராஜபக்ஷ தனது இளைய மகன் மஹிந்தவுடன் காலி ரிச்மன்ட் கல்லூரியில் கல்விக் கற்றுக் கொண்டிருந்த மூத்த மகன் சமலைப் பார்ப்பதற்கு சென்றிருந்தார். சமல், றிச்மன்ட் கல்லூரிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

“மகனே, உன்னைப்பற்றி ஒரு நல்ல செய்தி எனது காதுக்கு எட்டியது” என்று சமலை உற்சாகமூட்டிய தந்தை, “உனது தம்பி மஹிந்தவும் உன்னைப் போன்று தேர்ஸ்டன் கல்லூரியில் ஒரு நல்ல பணியை செய்திருக்கிறான்” என்றார்.

“சமல் நீ தம்பியிடமே கேட்டறிந்து கொள். நான் இப்போது பத்தேகமவுக்கு செல்கிறேன். நீ தம்பியுடன் இங்கு இரு. நான் இரண்டு மணித்தியாலயத்திற்குள் இங்கு வந்துவிடுவேன்” என்று கூறி விட்டு சென்றுவிட்டார். தந்தை சென்ற பின்னர், தேர்ஸ்டன் கல்லூரியில் தமிழ் மாணவர்களை காப்பாற்றிய கதையை மஹிந்த அண்ணனுக்கு விளக்கிக் கூறினார்.

“நாம் அப்படித்தான் செய்ய வேண்டும். என்னுடைய பாடசாலையிலும் தமிழ் மாணவர்கள் இருக்கிறார்கள். தம்பி உன்னைப் போல நானும் இந்த தமிழ் மாணவர்களுக்கு உதவி செய்தேன் என்று கூறிய போது மஹிந்த, என்ன நடந்தது சொல் அண்ணா” என்று கேட்டார். சமல், நடந்த சம்பவங்களை விளக்கிக் கூறினார்.

* * * * * *

இடைவேளையின் போது சமல் பாடசாலை மைதானத்திற்கு குறுக்கே சென்றுகொண்டிருந்த போது ஒரு மாணவன் அவருக்கு அருகில் ஓடி வந்தான். அந்த மாணவன் சமலின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச ஆரம்பித்தான். “சரி, ரவி என்னவென்று சொல் என்று சமல் கேட்ட போது, சமலுக்கு ரவி ராமச்சந்திரன் என்ற மாணவனின் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்ததைக் கூட கேட்கக்கூடியதாக இருந்தது. சமல், உனக்கு தெரியாதா, கடை வீதியில் தமிழ்க் கடைகளை மக்கள் தாக்கி சேதப்படுத்துகிறார்கள். இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தும் இருக்கிறார்கள். அவர்களில் எவராவது கொல்லப்பட்டார்களா என்று எங்களுக்கு தெரியாது என்று ரவி பதற்றத்துடன் கூறினான். சரி நாங்கள் சென்று பார்ப்போம் என்று சமல் சொன்ன போது எனக்கு அச்சமாக இருக்கிறது என்று ரவி பதிலளித்தான்.

பயப்படாதே ரவி, இந்த செய்தி உண்மையா என்று நாங்கள் சென்று பார்ப்போம் என்று சமல் கூறினார். நாங்கள் திரும்பி வரும் வரை நீ அமைதியாக வகுப்பறையில் எங்களுக்காக காத்திரு என்று தெரிவித்த சமல், நீ அழுவது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது” என்றும் அறிவுறுத்தினார். அங்கிருந்து சமல் ஆசிரியரை தேடிச் சென்று “தமிழர்கள் தாக்கப்படுகிற செய்தி உண்மையா சேர்” என்று ஆசிரியரிடம் கேட்டார்.

அதற்கு ஆசிரியர் “உண்மைதான், வெளியில் பதற்ற நிலை தொடர்கிறது” காலியில் உள்ள கடைகளும் தாக்கப்பட்டுள்ளன. வந்துரம்ப பிரதேசத்தில் குண்டர்கள் சில வீடுகளையும் தாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் அங்குள்ள மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று ஆசிரியர் கூறிய போது “சேர், எங்கள் பாடசாலையிலும் சில தமிழ் மாணவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னவாகும்” என்று சமல் கேட்ட போது, ஆசிரியர் இந்த சிக்கலான சூழ்நிலையில் எவ்விதம் சாதகமாக திருப்புவது என்று சிந்திக்க ஆரம்பித்தார்.

சேர் நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு இரண்டு தமிழ் மாணவர்களை என்னால் அழைத்துச் செல்ல முடியுமென்று சமல் கூறினார். அது நல்ல யோசனைதான். நம் பாடசாலை அதிபருடன் கூடிப் பேசி ஏதாவது நல்ல முடிவை எடுப்போம் என்று ஆசிரியர் கூறினார். அன்று சமல், இரண்டு தமிழ் நண்பர்களை தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

“இங்கு நீங்கள் அமைதியாக இருங்கள். எதற்கும் அஞ்ச வேண்டாம்” என்று சமல் தனது நண்பர்களுக்கு தெரிவித்தார். காலியில் குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மக்களை பொலிஸார் காப்பாற்றினார்கள். அன்றைய தினம் தமிழர்கள் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக தங்கியிருந்தார்கள். சமலின் தமிழ் நண்பர்களின் பெற்றோரும் இவ்விதம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்கள். ஓர் ஆசிரியர் சமலுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தமிழ் பெற்றோரை சந்தித்த போது அவர்கள் கதறி அழுதார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்ததென்று தெரியாமலே வேதனையில் அழுதார்கள். இந்த சந்தர்ப்பத்தில் சமலும், ஆசிரியரும் அவர்களின் பிள்ளைகளை பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள்.

* * * * * *

எங்கள் அப்பா சொன்னது போல், அண்ணா நீயும் ஒரு நல்ல செயலை செய்து முடித்திருக்கிறாய் என்று கதையை கேட்டு முடிந்தவுடன் மஹிந்த அண்ணனைப் பாராட்டினார். இந்த விடயத்தைக் கேட்டு அப்பாவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார் என்றார் மஹிந்த.

எங்கள் அப்பாவும் சிற்றப்பாமாரும் இவ்விதம் நற்பணிகளை செய்பவர்கள் என்பதனால் தான் அப்பா இந்தளவுக்கு மகிழ்ச்சியடைந்திருக்கிறார். அப்பாவும் சிற்றப்பாமாரும் இன ரீதியில் மக்கள் பிளவுபடுவதை வெறுக்கிறார்கள் என்றும் சமல் மேலும் கூறினார்.

“தம்பி, நான் இன்னுமொரு கதையை சொல்ல விரும்புகிறேன். இது 1915ம் ஆண்டில் நடைபெற்றது. ஒரு சிறிய சம்பவத்தினால் அன்று சிங்களவர்கள், முஸ்லிம்களுக்கு இடையிலான கலவரம் ஏற்பட்டது. அது நாடெங்கிலும் பரவியது” என்றார்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.