புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
அரசின் வரப்பிரசாதங்கள் மட்டும் எவ்வித குறைவுமின்றி வேண்டுமாம்

தேசியக் கொடியை ஏற்றமாட்டார்களாம்

அரசின் வரப்பிரசாதங்கள் மட்டும் எவ்வித குறைவுமின்றி வேண்டுமாம்

TNA மாகாண உறுப்பினர்களின் செயலுக்கு பாபு சர்மா கண்டனம்

சம்பந்தன், விக்கிக்குப் பாராட்டு

வடமாகாண சபையில் அங்கத்துவம் வகிக்கும் சில உறுப்பினர்கள் பொது வைபவங்களில் தேசியக் கொடியை ஏற்றமாட்டோம் எனக் கூறி வருவது மிகவும் வருந்தத்தக்க செயற்பாடாகும். அதிலும் அர சாங்க அதிகாரிகளாக கடமை யாற்றி ஓய்வு பெற்று அதிஷ்ட லக்ஷ்மியின் பார்வையால் அரசிய லுக்கு வந்தவர்கள் அரசாங்கம் வழங்கும் சகலவிதமான சுகபோ கங்களையும் அனுபவித்துக் கொண்டு அந்த அரசாங்கத்தின் தேசியக் கொடியை ஏற்ற மறுப்பது ஏன் என ஜனாதிபதியின் இந்துமத விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக் கள் கேள்வியெழுப் பியுள்ளார்.

நாட்டின் தேசியக் கொடி என் பது அரசாங்கத்தின் கொடியல்ல. அது எமது தாய் நாட்டின் கொடி.

அக்கொடியை இவர்கள் ஏற்ற மறுத்தால் அரசாங்கம் வழங்கி வரும் சகலவிதமான சுகபோகங் களையும் துறந்து தமது சொந்த உழைப்பில் வாங்கிய துவிச்சக்கர வண்டிகளிலேயே பயணங்களை யும் மேற்கொள்ள வேண் டும். அதேபோன்று ஏனைய சகலவித மான சலுகைகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது எனவும் பாபு சர்மா தெரிவித்தார்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா மற்றும் முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகி யோரை இவ்விடயத்தில் தான் பாராட்டுவதாகவும் பாபு சர்மா தெரிவித்தார். அரசாங்கம் வழங் கும் பொலிஸ் பாதுகாப்பு, வாகன வசதிகள், பங் களா வசதிகள் என மற்றும் பல வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள் தமது தாய் நாட்டின் மீதும், அதனை வழி நடத்தும் அரசாங்கத்தின் மீதும் மரியாதை வைத்துச் செயற் படுவதைத் தான் பெரிதும் வர வேற்று மதிப்பதாகவும் பாபு சர்மா தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.