புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

தத்துவஞானியாக மாற்றும் யோகம்

தத்துவஞானியாக மாற்றும் யோகம்

ஓர் இலகுவான சோதிட விளக்கம்

(சென்றவார தொடர்)

இனி இவ்வாரமும் இரு கேள்விகளுக்கு பதிலளிப்போம். இதில் சோதிட ஆர்வலர்களான வாசக நேயர்களுக்கு பயிற்சியளிக்கும் முகமாகவே கிரக விபரங்களும் அவற்றுக்கான பலன்களும் தரப்படுகின்றன.

வத்தளையிலிருந்து இ.விக்னேஸ்வரன் என்ற வாசகர் கேட்கிறார். கும்பலக்கினம், 2 இல் மாந்தி, 5 இல் சூரியன் சுக்கிரன், சனி, 6 இல் புதன், ராகு, 7 இல் வியாழன், செவ்வாய், 12 இல் சந்திரன், கேது. தற்போது வியாழ தசையில் ராகு புத்தி நடப்பு. கல்யாணமாகி 12 வருடங் கள். குழந்தையில்லை. புத்திரபாக்கியம் கிட்டுமா? அப்படியானால் எப்போது கிட்டும்? சொந்தமாக ஒரு வீடு அமையுமா? எதிர்கால பலன் எப்படியிருக்கிறது?

பதில்: புத்திரஸ்தானாதிபதி புதன் ஆறில் ராகுவுடன் கூடினார். வியாழ தசை முடியும் தருணமிது. நடக்கும் புத்தியோதோஷமுண்டாக்கிய ராகுவினுடைய புத்தி பிள்ளைப்பாக்கியம் பெறத் தடையான சர்ப்பதோஷம் இதுதான். இத்தோஷ நிவர்த்திக்கான சாந்திபரி காரங்களை நம்பிக்கையுடன் செய்துவர வேண்டும். வியாழன் 7 இல் இருந்து கொண்டு இலக்கினத்தை நோக்குவதால் குழந்தை பிறக்க உத்தரவாதமுண்டு. எதிர்வரும் ஆனியில் நிகழும் வியாழ மாற்றத்தின் பயனாக அந்த நன்மை கிடைக்கலாம். சொந்தத்தில் வீடு அமையும். எதிர்பார்த்தளவு எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும்.

அடுத்து குருநாகலிலிருந்து வர்த்தகர் ஒருவரின் கேள்வி:

சிங்க லக்கினம், இரண்டில் சுக்கிரன், மூன்றில் சூரியன், புதன், 4 இல் வியாழன், 5 இல் செவ்வாய், ராகு, 7 இல் சனி, 8 இல் சந்திரன், 11 இல் கேது. தற்போது சுக்கிர தசையில் கேது புத்தி நடக்கிறது. வியாபாரம் பரம்பரைத் தொழில் அதன் மூலம் காசை யல்ல, கடனையே என்னைச் சுற்றிலும் அதிகம் சம்பா தித்து வைத்திருக்கிறேன். என் கடன்கள் தீர்ந்து வியாபாரம் எப்போது செவ்வனே நடக்கும்?

பதில்: கிரக நிலைகளில் சூரியன் நீசமடைந்திருந்தாலும், நவாம்ச நிலைப்படி உச்சமடைந்துள்ளார். அவரின் தசையும் அடுத்து வரவிருக்கிறது. அத்தசையில் உங்களுக்கு சில நன்மைகளுண்டாகும். வியாபாரமும் செழிக்கும். வியாழன் - செவ்வாய் பரிவர்த்தனையாலும் சில நன் மைகள் விளைய இடமுண்டு. நீசம் பெற்ற கிரகங்க ளுக்கு நீச பங்கமும் ஏற்படுவதால் உங்களுக்கு சூரிய தசையிலிருந்து முன்னேற்றம் ஏற்படும். (தொடரும்...)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.