புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

x

மாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா? எதுவானாலும்

தெரிவுக்குழுவிலேயே இறுதித் தீர்வு இந்தியாவின் நிலைப்பாடும் இதுவே

அமைச்சர் பசில் திட்டவட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன் நிபந்தனைகள் எதனையும் விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வந்தால் மட்டுமே அதிகாரங்கள் குறித்து கலந்துரையாட முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஷபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சென்னையில் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

                                                            விவரம்»

 

 

 

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மாசிமக தேர்த் திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. அம்பாள் தேரேறி வீதியுலா வரும் காட்சி. (படங்கள்: எஸ். பாலா, டி.வி. குமார், சதுர்தீன்)

 

சமூகத்திற்காக குரல் கொடுத்தால் இனவாதி என்கிறார்கள்

சர்வதேச மயப்படுத்த தவறிய முஸ்லிம்களின் பிரச்சினைகள்

இன்று உணரப்படுவதாக கூறுகிறார் அமைச்சர் றிசாத்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர் பில் அன்று சர்வதேச மயப்படுத்தியிருந்தால் எமது மக்களது பிரச்சினைகள் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்று அந்தப்பணிகளை நாம் கட்சியமைத்து செய்ய வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இது தொடர்பில் அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதுடன் பேசியதாகவும்.....

                                விவரம் »

தெரிவுக்குழு மூலமே பிரச்சினைக்கு தீர்வு

இந்தியாவின் நிலைப்பாடு இதுவே

இலங்கையில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அந்நாட்டு அரசாங்கம் அமைந்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அனைத்து தரப்பினரும் இணைந்து அனைவரது ஒத்து ழைப்புடனும், சிறந்த தீர்வொன்றை அடைய முன் வருவதே சிறந்த வழியாகுமென இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தே இவ்வாறு தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்தியா ஆரம்பத்தில் உறுதியாக இருந்தது. இச்சட்டம் திருத்தம் என்பது ஓர் ஆரோக்கியமான ஆலோசனை தானே தவிர, இது திணிக்கப்பட்ட விடயமல்ல. அன்றைய காலத்தில் இரு நாட்டு அரசாங்கமும் இணங்கியதாலேயே இச்சட்டம் பற்றி விவாதிக்கப் பட்டது.

                                                            விவரம்»

தேசியக் கொடியை ஏற்றமாட்டார்களாம்

அரசின் வரப்பிரசாதங்கள் மட்டும் எவ்வித குறைவுமின்றி வேண்டுமாம்

TNA மாகாண உறுப்பினர்களின் செயலுக்கு பாபு சர்மா கண்டனம்

சம்பந்தன், விக்கிக்குப் பாராட்டு

வடமாகாண சபையில் அங்கத்துவம் வகிக்கும் சில உறுப்பினர்கள் பொது வைபவங்களில் தேசியக் கொடியை ஏற்றமாட்டோம் எனக் கூறி வருவது மிகவும் வருந்தத்தக்க செயற்பாடாகும். அதிலும் அர சாங்க அதிகாரிகளாக கடமை யாற்றி ஓய்வு பெற்று அதிஷ்ட லக்ஷ்மியின் பார்வையால் அரசிய லுக்கு வந்தவர்கள் அரசாங்கம் வழங்கும் சகலவிதமான சுகபோ கங்களையும் அனுபவித்துக் கொண்டு அந்த அரசாங்கத்தின் தேசியக் கொடியை ஏற்ற மறுப்பது ஏன் என ஜனாதிபதியின் இந்துமத விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமச்சந்திரக் குருக் கள் கேள்வியெழுப் பியுள்ளார்.

                                                           விவரம் »

ANCL ஸ்தாபகர் நினைவு தினம்

லேக்ஹவுஸ் நிறு வன ஸ்தாபகர் அமரர் டீ. ஆர். விஜயவர்தன வின் 128 வது ஜனன தின த்தை முன் னிட்டு எதிர் வரும் 22ம் திகதி சனிக் கிழமை இரவு பிரித் ஓதும் வைபவமும் மறுதினம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் பெளத்த குருமார்களுக்கான அனுஷ்டான வைபவங்களுடன் அன்னதானம் வழங்குதலும் இடம் பெறும்.

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.