புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* கட்சி தாவும் போட்டியில் இவர் கின்னஸ் சாதனை

அரசியலில் இப்படியொரு பாய்ச்சலை எவராலும் பாய்ந்து சாதனை நிலைநாட்ட முடியாது. கின்னஸ் சாதனைப் பதிவிற்கு விண்ணப்பித்தாலும் உலக சாதனையாக பதிய வாய்ப்பு உள்ளது. அந்தளவிற்கு அசாத் சாலி ஐயாவின் கட்சி விட்டுக் கட்சி தாவும் பாய்ச்சல் அமைந்துள்ளது. புகழும் கட்சிகளைத் துவம்சம் செய்வதில் இவரை வெல்ல எவராலும் முடியாதுதான். ஐக்கிய தேசியக் கட்சியில் ஆரம்பித்த அரசியல் ஊர் சுற்றி உலகம் சுற்றி இருந்த இருப்பிற்கே வந்துவிட்டதாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையில் அது இப்போது மீண்டும் ஒரு தடவை ஊர், உலகம் சுற்றப் புறப்பட்டுவிட்டதாம்.

* மலையகத் தம்பியிடம் கேட்டுப் படிக்க வேண்டிய தலைமை

மலையகத்தின் மலை போன்ற கட்சி தனது வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றபோது உள்ளே மூவர்தான் செல்லலாம் எனக் கூறப்பட்டதால் தலைவர், செயலாளர் தவிர யார் செல்வது என்பதில் வெளியில் மெளன யுத்தம் நடைபெற்றதாம். என்ன முறுகல் என தலைவர் தம்பி திரும்பி ஒரேயொரு பார்வைதானாம் பார்த்தார். அவ்வளவுதான் சகலரும் கப்சிப். தலைமை என்றால் இதுதான் தலைமை. தமிழ்க் கூட்ட மைப்பின் தலை மேடையில் இருக்கும்போதே வால் துள்ளி ஆடுமாம். தம்பியிடம் அவர்கள் தலைமை பற்றிக் கேட்டுப் படிக்க வேணும். முறுகலின் இறுதியில் முன்னாள் பிரதி யமைச்சர் முந்திக்கொண்டது வேறுகதை. கம்பி எண்ண இருக்கையிலும்

குறும்புத்தனமான பேச்சு

தமிழர் இன அழிப்பு சகலவற்றுக்கும் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமாம். அப்போ புலிகளின் கொலைப் பட்டியலையும் சேர்க்கச் சொல்லுகிறாரோ அண்ணன் விக்ரமபாகு. தமிழரின் வாக்குகளைக் கவர என்ன வேஷம் எல்லாம் போட வேண்டியிருக்கு. ஐயா தனது கட்சியின் வேட்புமனுவில் செய்த தில்லு முல்லான சட்டவிரோத செயலுக்கு விரைவில் கம்பி எண்ணஇருக்கையிலும் இப்படியொரு குறும்பு அவருக்குத் தேவைதானா? இன்னொருவர் என்றால் செய்த வேலைக்குக் கிடைத்த அவமானம் தாங்காமல் அரசியலிலிருந்தே ஒதுங்கியிருப்பார்.

* ஜெனீவா பிரச்சினையும் தமிழ்த்

தேசிய கூட்டமைப்பும்

ஜெனீவாவில் தமிழர் பிரச்சினை தொடர்பாகப் பேச தமிழ்த் தரப்பினருக்கு அருகதை கிடையாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழரைக் கொன்றதுதானே பிரச்சினை என்றால் அதற்குத் தலைமை தாங்கிய தளபதி சரத்திற்கே வாக்களித்து ஜனாதிபதியாக்க முனைந்தவர்கள் எப்படி அவருக்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும்? ஒருவேளை ஜனாதிபதியாக சரத் பொன்சேகா வந்திருந்தால், தமிழ்த் தரப்பு வாயை மூடிக்கொண்டிருந்திருக்குமா, அவரது சுயரூபம் தெரியாது அவரை வெல்ல வைக்க முனைந்தவர்கள் இன்று நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன்?

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.