புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* சம்பந்தனுக்கு எதிராக செயற்பட்ட ஐங்கரநேசன்

அரசாங்கம் வழங்கும் கார், சம்பளம், பங்களா எல்லாம் வேண்டும். ஆனால் நாட்டின் தேசியக் கொடியை மட்டும் ஏற்றமாட்டாராம் வட மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் ஐயா. மன்னார் பாடசாலை வைபவமொன்றில் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டவரை மக்கள் ஏளனத்துடன் நோக்கினராம். தலைவர் சம்பந்தன் ஐயா யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடியை உரிமையோடு ஏந்தியமைக்கு எதிர்மாறாக இத்தொண்டர் நடந்து கொண்டமை கட்சிக்குள் விசனத்திற்குள்ளாகியுள்ளதாம்.

* கல்முனை மேயரின் பெயரைக் கெடுக்கும் ஓர் குட்டிச் சுவர்

கல்முனை மாநகர சபையில் புதிய முதல்வரின் நற்பெய ரைக் கெடுக்கும் வகையில் அவரது உதவியாளர் எனக் கூறிக் கொள்ளும் அதே மாநகர சிற்றூழியர் ஒருவர் பெரும் அட்டகாசம் புரிந்து வருகிறாராம். மாநகர அதிகாரிகளுக்கு முதல்வரின் பெயரால் கட்டளைகளையும் பிறப்பித்து வருகிறாராம். இதனால் திக்குமுக்காடும் அதிகாரிகள் சிலர் இவர் சொல்லும் இடங் களில் கையெழுத்துக்களை இட்டும் வருகின்றனராம். போகிற போக்கில் முதல்வரது நற்பெயர் கெடுவது உறுதி. யார் அந்த கறுத்தாடு என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது புதிய முதல்வரின் பொறுப்பாகும்

தமிழ் வாக்குகளை அபகரிக்க

விக்கிரமபாகுவின் முயற்சி அது

தேசியக் கொடியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்திருக்கிறார். மேல் மாகாண சபைத் தேர்தல் வருவதால் தலைநகரில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைக் கவர ஐயா திட்டமிட்டிருக்கிறார் என்பது சிறு குழந்தைக்கும் புரிந்த விடயம். அதற்காக தேசியக் கொடியை இழுப்பது அவமானம், ஏற்றுக்கொள்ளவும் முடியாது. சிறுபிள்ளை வெளாண்மை வீடு வந்து சேராதுதானே. ஏதோ பிழைத்துவிட்டுப்போகட்டும்.  

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.