புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
பயணிகளின் வசதி கருதி நாடுபூராகவும் அதிசொகுசு பஸ் சேவைகள்

பயணிகளின் வசதி கருதி நாடுபூராகவும் அதிசொகுசு பஸ் சேவைகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ரொசான் குணவர்தனவுடனான நேர்காணல்

நாடு துரித அபிவிருத்தி கண்டு வரும் நிலையில், புதிய நெடுஞ் சாலைகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து சேவைகளும் துரித வளர்ச்சி கண்டு வரும் நிலையில் மக்கள் சொகுசாக பயணம் செய்வது குறித்து ஆர்வம் செலுத்துகின்றனர். இதற்கு உகந்தவாறு தனியார் பஸ் சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருவதோடு புதிதாக அதிசொகுசு பஸ்சேவைகளை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாராகி வருகிறது. இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ரொசான் குணவர்தனவுடன் நடத்தப்பட்ட நேர்காணல்.

கேள்வி: எவ்வாறான அதிசொகுசு பஸ்சேவையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தப்போகிறது?

பதில்: அமைதியான மனநிலையுடன் பயணம் செய்யக் கூடிய நியாயமான போக்குவரத்து சேவையொன்றை நாட்டுக்கு பிரதானமானது சொகுசு வசதி, பாதுகாப்புகளைப்பின்றி பயணம் செய்தல் ஆகிய போக்குவரத்து சேவையே முக்கிய விடயங்களாக உள்ளன.

தற்பொழுது எமது நாட்டிலும் அதிசொகுசு பஸ்சேவைகள் காணப்பட்டாலும் அதற்குத் தகுந்த சேவை வழங்கப்படவில்லை. வழங்கும் பணத்திற்கு உகந்த சேவை, பாதுகாப்பு கிடைப்பதில்லை.

பயணிகளுக்கு உச்ச பாதுகாப்பு, சொகுசு வசதி வழங்கக்கூடிய பஸ் போக்குவரத்தை அறிமுகப்படுத்துவதே எமது இலக்காகும். கொழும்பு - காலி நெடுஞ்சாலையிலும் கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கிடையிலும் அதிசொகுசு பஸ் சேவைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் இவற்றினூடாக உண்மையான அதிசொகுசு சேவை வழங்கப்படவில்லை. சாதாரண பஸ் கட்டணத்தை விட 3 மடங்கு கூடுதலாக இவற்றில் கட்டணம் அறவிடப்படுகின்றன.

மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் நடத்திய கணிப்பீட்டின் மூலமே அதிசொகுசு பஸ்களில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் ஏனைய பகுதிகளிலும் அவ்வாறான சேவைகளை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அறிய முடிந்தது. இதனடிப்படையில் நாம் அதி சொகுசு பஸ் சேவைகளுக்கு புதிய வரையறைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடந்த ஜுலை 10 முதல் அனைத்து வசதிகளுமடங்கிய அதிசொகுசு பஸ்களுக்கே இனிமேல் சேவையில் ஈடுபடஅனுமதி வழங்க உள்ளோம்.

கேள்வி: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்வைத்துள்ள வரையறைகள் என்ன? இதனால் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

பதில்: பைபர் உடற்பாகம் கொண்ட பஸ்களில் பயணிக்கையில் விபத்து சம்பவித்தால் பயணிகளுக்கு உயிராபத்து உள்ளது. தீவிபத்துக்களின் போது விரைவாக தீப்பற்றிக் கூடிய சந்தர்ப்பம் அதிகம்.

நாம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரையறையுள்ள பஸ்களினால் சொகுசாக பயணிக்க முடிவதோடு பாதுகாப்பும் உச்ச அளவில் கிடைக்கிறது.

அங்குமிங்கும் நகர்த்தக் கூடிய சொகுசு ஆசனங்களை கொண்டதாக இந்த பஸ்கள் இருக்க வேண்டும். அவற்றில் கை வைக்கக் கூடிய வசதிகளும் இருக்க வேண்டும்.

பஸ்ஸின் ஜன்னல்கள் பாதுகாப்பான கறுப்புக் கண்ணாடி இடப்பட்டதாக இருப்பது அவசியம் பயணிகளின் பயணப் பொதிகளை வைப்பதற்கு 3 கனமீட்டருக்கு குறையாத இடவசதி ஒதுக்க வேண்டும்.

பஸ் கதவுகள் தூர இருந்து ‘ரிமோட் கொன்றோல்’ மூலம் இயக்கும் வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பும் வசதியும் கொண்ட தொங்கவிடப்பட்ட 6 வாயு பலூன்கள் கட்டாயம் இருக்க வேண்டும். கரடு முரடான பாதைகள் குலுங்காமல் களைப்பின்றி செல்லக் கூடியதாக இருக்கவேண்டும்.

ஆசன அமர்விடங்கள் 750 மி.மீக்கும் குறையாமல் இருப்பது கட்டாயமானது. இதன் மூலமே பயணிகளுக்கு இட வசதியுடன் சொகுசாக பயணிக்க முடியும். இருக்கைகள் 40 அல் லது அதற்குக் கூடுதலாக உள்ள பஸ்களாக இருந்தாக வேண் டும்.

தனித்தனியாக இயக்கும் வசதிகொண்ட குளிரூட்டல் தொகுதி இந்த பஸ்களில் காணப்பட ஆசனங்களில் அமர்ந்துள்ள பயணிகளுக்கு தெரியக் கூடியவாறு கடிகாரமொன்று பொருத்தப் பட்டிருப்பது மற்றொரு வரைய றையாகும். அது தவிர பயணிகளுக்கு பொழுது போக்கிற்காக 17 அங்குல இரு தொலைக் காட்சி வசதிகள் வழங்கப்பட வேண்டும் பயணிகளுக்கு இடையூறு இன்றி குடும்பத்துடன் ரசிக்கக் கூடியவாறு திரைப்படங்கள் காண்பிக்க வேண்டும்.

நீண்ட தூரம் பயணம் செய்வதால் பயணிகளுக்கு குளிரூட்டப்பட்ட நீர், பழரசங்கள் வழங்குவதற்காக குளிர்சாதனப்பெட்டியும் இந்த பஸ்களில் இருக்க வேண்டும்.

பயணிகளுக்கு தகவல்கள் வழங்கக் கூடியவாறு 18 அங்குலம் அகலமும் 10 அங்குலம் உயரமும் கொண்ட தகவல் பலகை யொன்று பயணிகளுக்கு முன்பாக ஆசனத்தில் பொருத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆசனத்திலும் ஆசனப்பட்டிகள் இருக்க வேண்டும. மறுபக்கம் திருப்பக்கூடிய கெமராக்களும் பஸ்களில் பொருத்தப்பட்டிருப்பது அவசியமாகும்.

நீண்ட தூரம் பயணம் செய்கையில் மலசலம் கழிக்க நேரிட்டால் தற்பொழுதுள்ள அதிசொகுசு பஸ்களில் அதற்குரிய வசதிகள் கிடையாது. குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் போன்றோர் இதனால் அதிக அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர். எனவே இருக்கை ஆசனக்கழிப்புடன் கூடிய கழிவறை வசதிகள் இந்த பஸ்களில் காணப்படவேண்டும். வேகமாக சென்று வாகனத்தை நிறுத்தினாலும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நவீன பிரேக் (கிrலீak) வசதி இவற்றில் இருக்கும்.

கேள்வி: எவ்வாறான வீதிகளில் இத்தகைய பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

பதில்: நாட்டில் ஆரம்பிக்கப்படும் சகல நெடுஞ்சாலைகளிலும் அதிசொகுசு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும். செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட உள்ள கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இத்தகைய சகல வசதிகளினூடாக அதி சொகுசு பஸ்களை ஈடுபடுத்த உத்தேசித்துள்ளோம். அது தவிர கொழும்பில் இருந்து - நுவரெலியா,அநுராதபுரம், பொலன்னறுவை, கதிர்காமம், கண்டி, மொனராகலை, பதுளை போன்ற பகுதிகளுக்கும் தலா 2 பஸ்கள் வீதம் முதற்கட்ட மாக ஈடுபடுத்தப்படும். பின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும்.

கொழும்பு - மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பிக்கப்பட்டபின் அதி லும் இந்த அதிசொகுசு பஸ் சேவையை ஆரம் பிப்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.

கேள்வி: மக்கள் அதிசொகுசு பஸ் சேவையை விரும்புவார்களா?

பதில்: ஏன் இல்லை. இன்று மக்கள் சொகுசாக களைப்பின்றி பயணிப்ப தையே விரும்புகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இன்று அதிசொகுசு பஸ்களில் பயணிப்பதை விரும்புகின்றனர். நீண்ட தூரம் தமது வாகனத்தை ஓட்டிச் செல்வதைவிட சொகுசாக பஸ்ஸில் பய ணிப்பதையே பலரும் விரும்புகிறார்கள்.

இதனூடாக வாகன நெரிசல் குறைவடையும். கொழும்பு வரும் அரச வாகனங்களில் ஓரிருவரே வருகின்றனர். இது குறை யும். எம் பிகளும் அதி சொகுசு பஸ்களை பயன் படுத்துவதால் மக்களும் இவற்றில் பயணிக்க ஆர்வம் காட்டுவர்.

கேள்வி: வேறு என்ன வசதிகள் இந்த பஸ்களில் செய்யப்படும்?

பதில்: ஜி.பி.எஸ். (பி.ஜி.ஷி.) செல்லிடம் காட்டும் தொழில்நுட்பமும் இந்த பஸ்களில் காணப் படும். குறித்த பஸ் எந்த இடத்தில் உள்ளது. எந்த வீதியினூடாக பயணிக்கிறது போன்ற தகவல்களை வீட்டில் இருந்து தொலை பேசியூடாக அறியலாம். தமது பிள்ளைகளை தனி யாக அனுப்பினாலும் கூட பெற்றோருக்கு பஸ் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. தொலைபேசியூடாக ஆசனப்பதிவுகளை செய்துகொள்ளவும் வசதி அளிக்கப்படும்.

அதிசொகுசு பஸ்களில் நன்கு பயிற்றப்பட்ட சாரதிகளே ஈடுபடுத்தப்படுவர். தொழிற் பயிற்சி அமைச்சு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து சாரதிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்.

கேள்வி: எப்பொழுது இலங்கையில் சகல வசதிகளுடன் கூடிய அதிசொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்படும்.

பதில்: ஜனாதிபதியுடன், தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரத்னாயக்க கடந்த வாரம் பேச்சு நடத்தினார். இவ்வாறான பஸ் சேவை ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார். ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை முன்னேற்றும் முயற்சியில் இதுவும் ஓர் அங்கமாகும். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதால் அவர்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதி வழங்க வேண்டியுள்ளது. எனவே 2 மாத காலத்தினுள் இவ்வாறான அதிசொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த உத்தேசித்துள்ளோம்.

அடுத்த சொகுசு, குளிரூட்டப்பட்ட பஸ் சாதாரண பஸ்களுக்கு பதிலாகவும் அதிசொகுசு பஸ்களுக்கான வரையறைகள் அறிமுகப்படுத்தப்படும். தற்பொழுது சேவையிலுள்ள பஸ்களை ஒரேயடியாக சேவையில் இருந்து ஒதுக்க முடியாது. கட்டம் கட்டமாக அதிசொகுசு சேவையை முழுமையாக அறிமுகப்படுத்துவதே எமது இலக்காகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.