புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
இயற்கை அளித்துள்ள நன்மைகளை அனுபவிக்க சூழலைப் பாதுகாப்போம்

இயற்கை அளித்துள்ள நன்மைகளை அனுபவிக்க சூழலைப் பாதுகாப்போம்

சீனாவின் சிறப்பு

மலரும் நினைவுகள்

இறைவன் - உலகைப் படைத்தான்! அண்ட சரா சரங்களையும் படைத்தான்!

மனிதர்கள், மிருகங்கள் மரமட்டைகள், ஆறு, கடல், வானம், பூமி அனைத்தை யும் படைத்தான். மண்ணுலகை விண்ணுலகை சிருஷ்டித்தான்.

வான் மண்டலத்தில் கோடிக்கணக்கான கோளங்களை உருவாக்கினான். இச்சிருஷ்டிகள் அத்தனைக்கும் வரம்புகட்டி அவன் வகுத்த வழியில் நொடியும் பிசகாது பிறழாது இயங்கும் வழியையும் வகுத்துக் கொடுத்தான்.

இந்த இயற்கை வழி பிசகுமானால் அதனால் புவியின் கண் பயங்கரமான விளைவுகள் ஏற்படும். இறை கட்டளையின் மகத்துவம் இதுதான்.

இந்த சிருஷ்டிகள் அனைத்தையும் சித்தரிக்கும் ஒரே சொல்: இயற்கை!

இயற்கையோடு மனிதன் விளையாட முடியாது. விளையாடத் துணிந்தால் விபரீதம் ஏற்படும். காற்று புயலாக மாறும், - சுனாமியாக உருவெடுக்கும் - பிரளயம் புரளும்.

அழகிய ஆசியாவைப் படைப்போம்

‘அழகிய ஆசியாவை உருவாக்குவோம்’ என்று ஸ்கைப் ((Skype) மூலம் நிவ்யோர்க் நகரிலிருந்து மகா நாட்டுக்கு விசேட செய்தி விடுக்கும் ஐ.ந. பொதுச் செயலாளர் பாங்கீமுன்.

எனவே இயற்கையைப் பாதுகாப்போம் இயற்கை தந்த சூழலைப் பாதுகாப்போம். அப்பொழுது தான் அனைத்து சிருஷ்டிகளையும் இறைவன் பாதுகாப்பான் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவில் வைத்து விளக்கிச்சொன்னார்.

சீனாவின் ‘சாங்ஷி’ மாநிலத்தில் அரச விருந்தினர்கள் மனையில் 2013ம் ஆண்டுக்கான ஆசிய அரசுகளின் சர்வதேச மகாநாட்டில் உரை நிகழ்த்தினர். Asian Political Parties (I. C. A. P)  (யி. வி. தி. ஜி) அப்பொழுதே இயற்கையின் அற்புதமான தன்மைகளை மிகவும் நாசூக்காக மேற்குறிப்பிட்ட விதம் மகா நாட்டுப் பிரதி நிதிகளுக்கு விளக்கினார்.

“பசுமை, வளத்தை விருத்தி செய்து அழகிய ஆசியாவை நாம் ஒன்று சேர்த்து உருவாக்குவோம்”

இத் தொனிப் பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டின் தலைவர்கள். அள்ளி வீசிய கருத்துக்களும் அழகாகத் தான் அமைந்திருந்தன.

பழமை மிகு ஆசிய அரசியல் கட்சிகளின் மகா நாடு என்பதினால் இலங்கையின் பழம் பெரும் அரசியல் கட்சி ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவர் என்ற முறையில் இம் மகாநாட்டில் பேர் உரை நிகழ்த்த எமது ஜனாதிபதி அழைக்கப்பட்டிருந்தார்.

மஹிந்த தேரரை மேற்கோள்காட்டிய மஹிந்த ஜனாதிபதி

சூழலைப் பாதுகாப்பது எப்படி என்பதை விபரிக்க இலங்கை வரலாற்றிலிருந்து ஓர் ஏட்டைப் புரட்டினார் அவர்.

2500 ஆண்டுகளைத் தொட்டு அந்த விளக்கம் அமைந்திருந்தது.

சூழலைப் பாதுகாப்போம் என்று மாநாட்டில் சூளுரைக்கும் ஜனாதிபதி.

இந்தியாவிலிருந்து புத்த மாதவனின் போதனையை இங்கு எடுத்து வந்த அசோக சக்கரவர்த்தியின் மகன் அரஹத் மஹிந்த தேரர் அநுராதபுர மிஹிந்தலை வனத்தில் வேட்டையாடிக் கொண்டிருந்த இலங்கை மன்னர் தேவ நம்பிய திஸ்ஸவை எதிர் கொள்கிறார். “மன்னரே! கேளுங்கள் சூழலை மாசுபடுத்தக் கூடாது சுற்றாடல்களை நாம் மாசுபடுத்தக் கூடாது. ஆட்சியாளர்கள் என்போர் சூழல்களின் சொந்தக் காரர்கள் அல்ல; அவர்கள் அதன் பாதுகாவலர்கள் மட்டுமே.

“அவ்வேளை என் கையிலிருந்த மஹிந்த சிந்தனையை புரட்டினேன் அரஹத் மஹிந்தவின் போதனையை ஜனாதிபதி மஹிந்த எவ்வளவு பொருத்தமாக மேற்கோள் காட்டினார் என்பதை இங்கு நீங்களும் படித்துப் பாருங்கள்.

“இம் மரம் செடி கொடிகள், இப்பூமி உங்களுடையதே. ஆனால் அவை அனைத்தும் உங்களுக்கு மட்டுமேயான தல்ல. உங்கள் எதிர்கால சந்ததிக்காகவும் பாதுகாக்கப்படவேண்டியவை.

ஆட்சியாளன் என்பது உங்கள் பிள்ளைகளுக்கு உரித்தானவைக்கு சொந்தக் காரனல்ல. தற்காலிக பொறுப்பாளன் மட்டுமே.

அல் - குர்ஆன் தரும் விளக்கம்

அல்குர் ஆனி யாkன் சூரா இதனை மிகவும் தெளிவாக மனுக்குலத்துக்கு விளக்கியிருக்கிறது.

சூரா யாkனைப் புரட்டிப் பார்ப்போம்:

இலங்கை அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க சீனாவின் எமது தூதுவர் ரஞ்சித் உயங்கொட ஆகியோர்.

“பூமி முளைப்பிற்கும் (புற்பூண்டு களையும்) யாவற்றையும், இவர்களையும் ஜதை ஜதையாக படைத்து இவர்கள் (இது வரையில்) அறியாத (மற்றவைகளையும் படைப்பவன் மிகத் தூய்மையானவன். (ஆயத்து:34)

“தன்னுடைய வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்) இது (யாவையும்) நன்கறிந்தோனும், மிகைத் தோனுமால் விதிக்கப்பட்டதாகும்”. (ஆயத்து 38)

“சூரியன் சந்திரனை அணுகமுடியாது. இரவு பகலை முந்தமுடியாது. (இவ்வாறே கிரகங்களும், நட்சத்திரங்களும்) ஒவ்வொன்றும் (தன்னுடைய) வட்டவறை க்குள் நீந்திச் செல்கின்றது.”

அல்-குர்ஆனின் வெளிச்சத்தில் நம் சிந்தனை ஓட்டத்தை அதற்கு செலுத்திக் கொண்டிருந்த போது நமது ஜனாதிபதி யின் உரையும் பொருத்தமாக மகாநாட்டு மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கி மூலம் ஒலித்தது.

இம் மாநாட்டில் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், டக்லஸ் தேவானந்த, விமல் வீரவன்ச, பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாமல் ராஜபக்ஷ, ஸஜின் வாஸ் குணவர்தன (வெளியுறவு அமைச்சின் மேற்பார்வை உறுப்பினர்) ஏ. எச். எம். அஸ்வர், அனோமா தயாகமகே, சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் ரஞ்சித் உயங்கொட, வெளியுறவு அமைச்சின் பிரதிச் செயலாளர் இப்ராஹிம் அன்ஸார் (தற்போதைய மலேசியாவின் தூதுவர்), வெளியுறவு அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான திருமதி ஷோபினி குணசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(படங்கள் - சுதத் சில்வா)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.