புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 


கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிவேல் விழா நேற்று ஆரம்பமாகி தேர் பவனி வந்தது. அலரிமாளிகையின் முன்றலில் தேர் நிற்பதையும் ஜனாதிபதியின் பாரியாரான முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஆலய அறங்காவலரின் பாரியார் திருமதி சாரதா மாணிக்கவாசகம் மாலை அணிவிப்பதையும் படங்களில் காணலாம். (படம் : லலித்வெலிவெட்டிகொட)

மத்திய மாகாண சபை தேர்தல். தொ.கா. வேட்பாளர் தெரிவு பூர்த்தி

அதிகளவு புதுமுகங்கள்; பெண்கள் எவரும் இல்லை

மத்திய மாகாண சபைத் தேர்தலில் இ. தொ. கா. சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களில் 90 வீதமானவர்கள் புது முகங்கள் என கட்சியின் தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இ. தொ. கா. தனது வேட்பாளர் தெரிவை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளதகாவும், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

                                                           விவரம் »

யாழ். ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கு

அரசாங்க தகவல் திணைக்களம் யாழ். மாவட்ட செயலகத்துடன் இணைந்து யாழ். பொது நூலக கேட்போர்கூடத்தில் நடாத்தும் மாவட்ட அபிவிருத்தியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு தொடர்பான ஊடகக் கருத்தரங்கு எதிர்வரும் 23ம் திகதி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தலைமையில் நடைபெறும் இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகவும், யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர். யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அங்கு முக்கிய உரை நிகழ்த்தவிருப்பதுடன் களனிப் பல்கலைக்கழக வெகுஜன ஊடக கற்கைப் பிரிவின் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல, தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன், சட்டத்தரணியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.பீ. வைஸ் ஆகியோர் சிறப்புரையும் நிகழ்த்துவர்.

                                                           விவரம் »

வீசா காலம் முடிவடைந்த நிலையில்

சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்ய பாரிய நடவடிக்கை

இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது

கடல் மார்க்கமாக வந்தவர்களும் இருக்கலாம்

சுற்றுலா வீசாவில் வந்து தொழில் புரிகின்றனர்

வீசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டுக்குள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைக் கைது செய்வதற்கான பாரிய வேலைத்திட்டமொன்றை ....

                                                           விவரம் »

பொதுநலவாய அமைப்பிலுள்ள 53 நாடுகளும் மாநாட்டில் பங்கேற்கும்

இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை பொருட்படுத்தவில்லை

பொதுநலவாய உச்சிமாநாட்டை இலங் கையில் நடத்துவது நாட்டுக்குக் கிடைத்த பெருமை. இதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு கட்சி அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் மூலம் எதிர்வரும் 2 வருடங்களுக்கு பொதுநலவாய நாடுகளுக்கு இலங்கையே தலைமை வகிக்கும்.

                                                           விவரம் »

மேல் மாகாணத்தில் கோப்பி விரியன் பாம்புகள் ஊடுருவல்: அவதானம் அவசியம்

விலங்கியல் நிபுணர் என்ஸ்லம் டி சில்வா அறிவுரை

விறகு, காய்கறிகள், பூச்சாடிகளூடாக கொழும்புக்கு வருகின்றன

மேல் மாகாணத்தில் கோப்பி விரியன் பாம்பு (சிuசீp னிosலீனீ Vipலீrs) கடிகளுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசிய மென இலங்கையின் .....

                                                           விவரம் »

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.