புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் 73வது பரிசளிப்பு விழாவும் கல்லூரி தினமும்

மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் 73வது பரிசளிப்பு விழாவும் கல்லூரி தினமும்

மஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரியின் 73வது பரிசளிப்பு விழாவும் கல்லூரி தினமும் கல்லூரி முதல்வர் JP U.K.R இராமையா தலைமையில்;, கல்லூரியிலும், PMD வரவேற்பு மண்டபத்திலும் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் மணவர்கள் காட்டிய திறமை மட்டங்களுக்கு ஏற்ப சான்றிதழ்கள், பதக்கங்கள், பணப்பரிசில்கள் என்பன வழங்கப்பட்டு கௌரவிக் கப்பட்டார்கள்.

இவ்விழா வில் கௌரவ அதிதிகளாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமாகிய பெ. இராஜதுரை, கல்லூரியின் பழைய மாணவரும் பொறியிய லாளருமான சண்முகம் பாரதன்;, காப்பாளராக அட்டன் வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ஊ. கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் உரையாற்றிய இராஜதுரை எம்.பி, சென்ஜோசப் கல்லூரியின் வளர்ச்சி பாராட்டத் தக்கது. இவ் வளர்ச்சிக்கு பாடசாலை சமூகத்தின் பங்களிப்பு பிரதானமானது. அதிபர், ஆசிரி யர், பெற்றோர், மாணவர் ஆகியோரின் நட்புறவுகளும் தொடர்புகளும் பிரச்சினைகளைக் குறைத்து வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

இதற்கு இப்பாடசாலையின் அதிபர் எடுத்துக்காட்டாக உள்ளார். பாடசாலைகள் மாணவரை அடைத்து வைத்து வெளியே விடும் பட்டிகளாக அல்லாமல் உயிரோட்டமுள்ளவையாக இருக்கவேண்டும்.

கல்வி வளர்ச்சியினூடாகவே ஒரு சமூகம் வளர்ச்சியடைய முடியும். இதனால் தான் ஆயிரம் கோயில்கள், ஆயிரம் அன்னசத்திரங்களை கட்டுவதை விட ஒரு பாடசாலை கட்டுவது சிறப்பானது”என எமது முன்னோர் கூறியுள்ளனர்.

அனைவரும் வாழ்க்கையில் வெற்றியடைய விரும்பவேண்டும். “மதிப்பு வாய்ந்த இலக்கை நோக்கிய தொடர்ந்தேர்ச்சியான முயற்சியே வெற்றியாகும். எனவே எமது சிறந்த இலக்கை அடைய நாம் அயராது உழைக்க வேண்டும். வாழ்வின் இறுதி மூச்சுவரை வெற்றிக்காக உழைப்பவர்களாக நாம் மாறவேண்டும்.

ஒருவரின் வெற்றிக்குத் தடையாக அமையும் பல காரணிகள் உள்ளன. தாழ்வு மனப்பாங்கு அதில் பிரதானமானது இதனை கலைய வேண்டும். அதே நேரம் கர்வத்தையும் அகற்ற வேண்டும். பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து அதற்கு தீர்வுகாண வேண்டும்.

முயற்சி களை இடைநிறுத்தாது முன்னேற வேண்டும். சிறந்த பல அறிவார்ந்த நூல்களைத் தேடிக் கற்று அனுபவத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஒரு விடயத்தை பின்பற்றுபவர்களாக மட்டுமல்லாது பிரதிபலிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

சுவாமி விவேகானந் தர், அலெக்சாண்டர், மகாத்மா காந்தி போன்ற பல முன்னோர் களின் வாழ்வில் இருந்து இதனை அறியலாம். பழைமை வாய்ந்த தமிழரின்; பண்பு சிறப்பானது. எனினும் எமது அடையாளத்தை இழந்து மலையக தமிழராகிய நாம் வாழ்ந்து வருகிறோம். எனவே எமது வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சி இன்றியமையாதது.

எமது பிரதேசத்தில் வசதி குறைவு என்றாலும் அதனை முறியடித்து முன்னேற வேண்டும் இதற்கு கல்வித்துறையை வளர்க்க வேண்டும். சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து முன்னேறி சமூகத்திற்கு வழிகாட்டிய அறிஞர் அப்துல் கலாம் போன்று நாமும் உணர்வு பு+ர்வமாக சிந்தித்து சமூகத்தின் வெற்றிக்கு வழிவகுப்போம் என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.