புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
Features

ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே

பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே!

இந்த வரிகளுக்குச் சொந்தக்கார் மக்கள் திலகம் எம்.ஜp.ஆரை உச்சத்திற்கே கொண்டு சென்றவர். ஒரு பாடலைக் கேட்டுவிட்டு இந்தப் பாடல் கண்ணதாசனுடையதாக இருக்குமோ என்று எண்ணியவர்களுக்கு அது வாலி எழுதியது என்றதும் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு மிக எளிமையான வரிகளைக்கொண்டு கேட்பவர்களை வசப்படுத்திவிடுவார் கவிஞர் வாலி.

நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்,

இந்த ஏழைகள் வேதனைப்படமாட்டார்..., என தீர்க்கதரிசனமாக, எம்.ஜp.ஆர்.,ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, பாடல் எழுதிய கவிஞர் வாலி அறிஞர் அண்ணாதுரை மறைந்தபோது..

பு+ முகத்து புன்னகையே இனி யார் முகத்தில் பார்ப்போம்!

புது நடையில் சொற்பொழிவை யாரிடத்தில் கேட்போம்!

நடை துள்ளும் தமிழுக்கு பகை வந்தால், அங்கே

உடைவாளை எடுக்கின்ற பெரும் வீரர் எங்கே?

இமை மூடிக் கொண்டாய்! புதை குழியில்

மெல்ல தமிழே உன் தலையெழுத்தை நான் என்ன சொல்ல?

இந்த வரிகள் தமக்கும் பொருந்தும் என்பதை கவிஞர் வாலி அப்போது உணர்ந்திருக்கமாட்டார்தான்

வாலி வந்துவிடு

தமிழ் மொழியாள் ஈன்றிட்ட கவிஞர்களின் நாயகனே!
தமிழ் மழையின் ஊற்றாக தரணியிலே நிலைத்தவனே!
தமிழ் பேசும் உள்ளங்களை கவிவரியால் ஈர்த்தவனே!
தரணியெங்கும் பாட்டாகி நெஞ்சமெல்லாம் நிறைந்தவனே!
தமிழ் மொழியின் இனிமையினைத் தரணிக்கு உணர்த்தியவனே!
தமிழ் சினிமா எழுச்சிக்கு ஏணிபோல் உழைத்தவனே!
தளர்வற்று உன்பணியை முடிக்கின்ற எண்ணத்தால்
தரைமீது உயிரெ¦ல்லாம் வாவென்று அழைக்குதம்மா!

உன்வரிகள் வந்ததனால் பல படங்கள் ஜெயித்ததுண்டு
உன்பாடல் பாடி பல நடிகர் உயர்ந்ததுண்டு;
உன் கவியும் உள்நுழைந்து சோகத்தை அழித்ததுண்டு;
உன் சிரிப்பு தனைக் கண்டு தமிழ் உலகம் மகிழ்ந்ததுண்டு;
உன் வாழ்வு கவிஞருக்கு உயிர்த்துடிப்பாய் இருந்ததுண்டு;
உன் வரிகள் ஆத்மாவின் அடித்தளத்தை அடைந்ததுண்டு;
உன் பணியை தொடர்வதற்கு யாருமில்லை என்பதனால்;
உலகத்து உயிரெல்லாம் வாவென்று அழைக்குதம்மா;

தமிழகத்தின் இசைவானில் தண்மதியாய் ஒளிர்ந்திட்டாய்!
தண்டமிழின் இனிமையினை தரணியெல்லாம் பரப்பிட்டாய்!
தளராத கடும் உழைப்பால் சிகரமென உயர்ந்திட்டாய்!
தமிழ்ப்பாடல் துறைதன்னில் விந்தை பல புரிந்திட்டாய்!
தளர்ந்திட்ட உடல் பெற்றும், இளைஞனென உழைத்திட்டாய்!
தண்மதியை தோற்கடிக்கும் இனியவரி இயற்றிட்டாய்!
தடையின்றி உன்பணியை முடிக்கின்ற எண்ணத்தால்
தயங்காமல் வந்துவிடு என்றுலகம் அழைக்குதம்மா!

கலாபூஷணம் கே. எம். எம். இக்பால்

ஆம், தமிழ் உலகத்தையே ஈர்த்திருந்த அந்த வாலிபக் கவிஞர் நேற்று முன்தினம் அக்கினியில் சங்கமமானார். அவரது உடலுக்கு, திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வெள்ளிக்கிழமை மாலை நடந்த இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளானவர்கள் பங்கேற்றனர். சென்னை பெசன்ட்நகர் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது உடலுக்கு மகன் பாலாஜp தீ மூட்டினார்.

கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வாலி, இரண்டு மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நுரையீரல் தொற்று நோய் மற்றும் மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை ஐந்து மணியளவில் உயிரிழந்தார்.

வாலியின் மனைவி ரமணத் திலகம், இரண்டு ஆண்டுக்கு முன் இறந்தார். பாலாஜp என்ற மகன் உள்ளார். கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931, அக்டோபர், 29ஆம் திகதி, ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்துள்ளார்.

சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடம் படித்தார். ஆரம்பத்தில் எழுத்தாளராக ஆசைப்பட்ட வாலி, நண்பர்களுடன் சேர்ந்து, நேதாஜp என்ற கையெழுத்து பத்திரிகையை துவங்கினார். திருச்சி வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதினார். திரைப் படங்களுக்கு பாடல் எழுத ஆசைப்பட்டு சென்னை வந்தார்; அவர் நினைத்தது நடந்தது. 1958ல், அழகர் மலை கள்வன் படத்தில், நிலவும் தரையும் நீயம்மா... என்ற பாடலை வாலி எழுத, டி. கோபாலன் இசையில், பி.சுசிலா பாடினார்.

இதன் பிறகு, எம்.ஜp.ஆர்., சிவாஜp கணேசன் முதற்கொண்டு இன்றைய இளைய முன்னணி கதாநாயகர் வரை அனைவரின் படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். இதுவரை, 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் எனப் பல துறைகளிலும் கால் பதித்துள்ளார். சிறுகதை, கவிதை, உரைநடை என, இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

வெற்றிலை பாக்கு பிரியரான இவர், இப்பழக்கத்தை 15 வயதிலிருந்து தொடர்ந்து, 76 வயதில் நிறுத்தினார். அவதார புரு'ன், அழகிய சிங்கர் என கவிதை, உரைநடை, சிறுகதை உட்பட, 15 புத்தகங்களை எழுதியுள்ளார்.

கவிஞர் வாலியின், அம்மா, அவதாரபுரு'ன், பாண்டவர் பு+மி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், கலைஞர் காவியம், கிருஷ்ண பக்தன், நானும் இந்திய நூற்றாண்டும், வாலிப வாலி ஆகிய நூல்கள் பிரபலமாக பேசப்பட்டன. இவர், சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்கால் குதிரை படங்களில் நடித்துள்ளார்.

கலியுகக் கண்ணன், காரோட்டி கண்ணன், ஒரு கொடியில் இரு மலர்கள், சிட்டுக்குருவி, ஒரே ஒரு கிராமத்திலே உட்பட, 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இயக்குனர் மாருதி ராவுடன் இணைந்து, வடை மாலை படத்தை இயக்கவும் செய்தார்.

வாலியின் கலைச் சேவையை பாராட்டி, 2007ல் பத்மஸ்ரீP விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். எங்கள் தங்கம், இவர்கள் வித்தியாசமானவர்கள், வரு'ம் பதினாறு, அபு+ர்வ சகோதரர்கள், கேளடி கண்மணி, தசாவதாரம் படங்களுக்கு பாடல்கள் எழுதியதற்காக, தமிழக அரசினால், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை, ஐந்து முறை பெற்றுள்ளார். பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருதுகளும் பெற்றுள்ளார்.1973ல், பாரத விலாஸ் படத்தில் இடம்பெற்ற இந்திய நாடு என் வீடு... இந்தியன் என்பது என் பேரு என்ற பாடல் வரிகளுக்காக, தேசிய விருது கிடைத்தது. ஆனால், வாலி விருதை ஏற்க மறுத்து விட்டார்.

எம்.ஜp.ஆர்., சிவாஜp, ரஜpனி, கமல், சிம்பு, சிவகார்த்திகேயன் என, மூன்று தலைமுறைகள் கடந்து, திரைப்பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட, இவரது பாடல்களில்

"மன்னவனே அழலாமா... கண்ணீரை விடலாமா....

தரைமேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்...

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்......

காற்று வாங்க போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்...

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ, செந்தாமரை இரு கண்ணானதோ...

ஏன் என்ற கேள்வி, இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை...

அந்த நாள் ஞாபகம் - நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே...

மாதவிப் பொன் மயிலாள் தோகைவிரித்தாள்..

ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...

மல்லிகை... என் மன்னன் மயங்கும், பொன்னான மலரல்லவோ...

வெற்றி வேண்டுமா... போட்டுப்பாரடா எதிர்நீச்சல்...

புன்னகை மன்னன், பு+விழிக் கண்ணன் ருக்மணிக்காக...

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...

புதிய வானம், புதிய பு+மி எங்கும் பனிமழை பொழிகிறது

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ..

ஏமாற்றாதே ஏமாறாதே..

கண் போன போக்கிலே கால் போகலாமா...

நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வரவேண்டும்..

இதோ எந்தன் தெய்வம்

நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, ஆனால் இதுதான் முதல் இரவு...

இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு!

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை...

வாலி எம்.ஜி.ஆர் உடன்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே..

சுந்தரி கண்ணால் ஒரு சேதி" இப்படி எத்தனையோ பாடல்களைப் பட்டியலிடலாம்.

பழைய பாடல்கள் என்று இல்லை, காலத்திற்கேற்ப புதிய படங்களையும் இவரது வாலிபமான பாடல்கள் ஆக்கிரமித்தன. கொஞ்ச நாள் பொறு தலைவா... அந்த வஞ்சிக்கொடி இங்கு வருவா... அடி ஒன் இஞ்ச், ^ இஞ்ச், த்ரி இஞ்ச் கேப் ஏண்டியம்மா... மாசி மாசி... காதல் வாசி... மின்வெட்டு நாளில் இங்கு மின்சாரம் போல வந்தாய்..

இதைத் தவிர, தற்போது திரைக்கு வந்த தில்லு முல்லு, மரியான், உதயம் என்.எச்., 4, எதிர்நீச்சல், அலெக்ஸ் பாண்டியன் போன்ற பாடங்களிலும், இவரது படைப்புகள் இடம்பெற்றன.

காதோடு தான் நான் பாடுவேன்... மனதோடு தான் நான் பேசுவேன்...

இந்த வரிகள், ஒவ்வொரு தமிழ் திரைப்பட பாடல் ரசிகனுக்கும், தன்னைப் பற்றி கவிஞர் வாலி, சொல்லிவிட்டு சென்றதாகவே கருத வேண்டி உள்ளது. அவரது, வார்த்தைக்கு வயதில்லை கருத்துக்கு காலம் இல்லை சிந்தனைக்கு சிதைவு இல்லை -நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே, வயசாயிப்போச்சு... எனப் புலம்புவோர் மத்தியில், 82வது வயது வரை, வாலிபராகவே வலம் வந்தவர் வாலி. இதுவரை, அவர் இயற்றியது 1000 படங்களுக்கு, 15 ஆயிரம் பாடல்கள்.

வாலியின் ஏராளமான பாடல்கள், அழியாத காவியமாகவே விளங்குகின்றன. இது தவிர, கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்... உட்பட பல தனிப் பாடல்களும் வாலியை, பாராட்டு மழையில் நனைய வைத்தன.

ரங்கராஜனுக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது; நன்றாக படம் வரையும் திறமையும் இருந்தது. வார இதழ் ஒன்றில், ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த, ஓவியர் மாலியை போல, தானும் ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. இதை தெரிந்து கொண்ட பள்ளி தோழன் பாபு, மாலியை போல நீயும் சிறந்த ஓவியராக வரவேண்டும் என்று கூறி, ரங்கராஜனுக்கு, வாலி என, பெயர் வைத்தாராம்.

இந்திய சினிமா வரலாற்றில், 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய ஒரே கவிஞர்;. பாபநாசம் சிவனுக்கு பின், இசையறிவுடன் திகழ்ந்த கவிஞர் வாலியையும் வறுமை எனும் பேய் விரட்டியது. கவிதையின் இமயமாக கருதப்படும் வாலி, இளமையில் வறுமையின் காரணமாக, ஒருமுறை தற்கொலை முடிவை எடுத்தார். அப்போது கண்ணதாசன் சுமைதாங்கி என்ற படத்துக்காக எழுதிய,

மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா... என்ற பாடலில் வரும், உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்து பார்த்து நிம்மதி தேடு... என்ற பாடல் வரியைக் கேட்ட வாலி, மனம் மாறி தற்கொலை முடிவை கைவிட்டதாகச்; சொல்லப்படுகிறது.
எம்.ஜp.ஆர்., படங்களுக்கு அதிகளவில் வாலி பாடல்களை எழுதினார். எம்.ஜp.ஆர்., கருத்துக்களை பாடல்களில் வாலி பிரதிபலித்தார். எம்.ஜp.ஆர்., புகழுக்கு, வாலியின் பாடல் வரிகளும் ஒரு காரணமாக அமைந்தன.

அந்தளவு இருவரது உறவு, நட்பு வட்டத்தை தாண்டி இருந்தது.
எம்.ஜp.ஆரின் அன்புக்குரியவராக விளங்கிய வாலியை. எம்.ஜp.ஆர், ‘ஆண்டவனே’ என்றுதான் அன்புடன் அழைப்பாராம். எம்.ஜp.ஆருக்காக வாலி எழுதிய முதல் பாடல் சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் ~நல்லவன் வாழ்வான்'. இந்த படம் 1961ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆந் திகதி வெளியானது.
வாலி வீட்டில் தயாராகும் தோசை, மிளகாய் பொடிக்கு எம்.ஜp.ஆர். தீவிர ரசிகர் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.
எவ்வளவோ அழைப்புகள் வந்தும் வாலி இதுவரை எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை. அவரிடம் கடவுச்சீட்டே கிடையாது என்பது விசனத்திற்குரிய தகவல்தான். வாலியின் இஷ்ட தெய்வம் முருகன். அடிக்கடி ‘முருகா’ என்று உச்சரிப்பார்.
எம்.ஜp.ஆருக்கு ‘நல்லவன் வாழ்வான்’ தொடங்கி ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை 52 படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறார்.
சிவாஜp கணேசனுக்கு ‘அன்புக்கரங்கள்’ தொடங்கி ‘மன்னவரு சின்னவரு’ வரை 66 படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார்.
அடிமைப்பெண்” படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் முதல்-அமைச்சர் nஜயலலிதா பாடிய அம்மா என்றால் அன்பு’ பாடல் வாலி எழுதியதுதான்.
‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரெயிலு’, ‘முக்காலா முக்காபுலா’, ‘சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது’ ஆகிய வாலியின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை.
எம்.ஜp.ஆர் சுகவீனமுற்று அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது தமிழகமெங்கும் :ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்” என்ற வாலியின் பாடல்தான் ஒலித்ததாம். எம்ஜpஆர் சிகிச்சை முடிந்து வந்ததும் அவரை காப்பாற்றியது என் தாலி பாக்கியம் மட்டும் அல்ல. வாலி பாக்கியமும்தான் என்று ஜhனகி அம்மையார் சொல்லியிருக்கிறார்.
இத்தகு சிறப்புமிக்க கவிஞர் வாலியின் நாமம் என்றும் வாழி!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.