புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

மூன்று மொழிகளில் தம்பலா

மூன்று மொழிகளில் தம்பலா

தமிழில் எழுதப்பட்ட ஒரு சிறுகதை ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே நூலாக தொகுக்கப்பட்டு “தம்பலா” என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இவ்விதம் ஒரே கதை மும்மொழி தொகுப்பாக வருவது தமிழைப் பொறுத்தவரை இதுவே முதல் முறை. இது சற்று அபூர்வமான நிகழ்வு. அந்த வகையிலும் தம்மலா சாதனை படைக்கிறது. என்கிறார் திருப்பூர் சிரஹ்தைன்.

‘தம்பலா’ பாரதிவசந்தன் எழுதிய சிறுகதை தம்பலாவை சமூகச் சிறுகதை என்பது ஒரே வரியில் கூறிவிட முடியாது. அதனை சமகால சரித்திர சிறுகதை என்றே சொல்ல வேண்டும். இந்த ‘தம்பலா’ என்ற சிறுகதையை எழுதியதற்காக, பலரின் தூற்றுதலுக்கும் சிலரின் பாராட்டுதல்களுக்கும் உள்ளாகியிருக்கிறார் எழுத்தாளர்.

“தம்பலா” என்ற இந்த சிறுகதை மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட ஓர் உண்மை சம்பவத்தை நமக்கு கதைப்போல தந்துள்ளார். புதுச்சேரியில் வாழ்ந்த பாரதிவசன் தன் ‘தம்பலா’ என்பது இந்த சிறுகதையின் நாயகனின், பெயர் அத்தோடு சிறுகதையின் முக்கியத்துவம் நமது மகாவி பரிதி புதுச்சேரியில் வாழ்ந்த பொழுது நடைபெற்ற சம்பவமே கதைக்கான கரு.

படைப்பிலக்கியம் காலத்தில் கண்ணாடி என்பது வழக்கம். பாரதி வசந்தன் தம்பலா சிறுகதையை அப்படியொரு நிஜ பாத்திரத்தின் மூலம் ஒரு நிஜத்தை மேலும் மெருகேற்றியிருக்கிறது.

தம்பலாவில் பாரதியை உயிரோட்டமான கதாபாத்திரமாக உலவவிட்டிருக்கிறார். கனகலிங்கத்துக்கு பாரதி பூனூல் போடுவதில் கதை தொடங்குகிறது. கதை கூடவே தம்பலா என்பவன் முரட்டு தனமானவன் என்கிற அறிமுகப்படலம். பாரதி அவனைச் சந்திக்கிறார். அவன் ஏன் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான் என்கிற நியாயத்தை அவனுடைய வாய் வார்த்தையாகவே கேட்கிறார் பாரதி. மேட்டுக்குடியினரைப் பழிவாங்க மலச்சட்டிகளை புதுச்சேரி துய்ப் லெக்ஸ் வீதியில் கொண்டுபோய் உடைத்ததைச் சொல்கிறான் பாரதி. அவனுடைய நியாயத்தை உணர்கிறார்.

சமூகப்பார்வை உள்ள சிறுகதையாக ‘தம்பலா’ சிறப்புற்று விளங்குவதாக பல சிறுகதை எழுத்தாளர்கள் பாராட்டி உள்ளனர்.

பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்டு இன்று முதல் நீர் பிராமணன், யாரகிலும் உன்னை என்ன ஜாதி என்று கேட்டால் நான் பிராமணன் என்று தைரியமாகச் சொல் என்கிற நிலைக்கு கொண்டுவரப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ரா.கனகலிங்கம் என் குருநாதர் பாரதியார் எனும் நூலை எழுதியிருக்கிறார். சென்னை 1947இல் அதனை வெளியிட்டிருக்கிறது. அதில் ‘தம்பலா’ என்கிற தோட்டியை பாரதி சந்தித்தது பற்றி சில வரிகள் குறிப்பிட்டிருப்பதைக் கண்டேன். இது எனக்குள் மிகுந்த ஆர்வத்தை உண்டுபண்ணியது. மேற்கொண்டு பல நூல்களை தேடி ஆராய்ந்ததில் சிறு சிறு தகவல்களே கிடைத்தன என்று கூறும் பாரதிவசந்தன். அந்த சிறுகதை எழுத அவர் பட்ட சிரமங்களையும் உழைப்பையும் எனக்கேற்பட்ட அவமானங்களையும் நான் மேற்கொண்ட கள ஆய்வுகளையும் ஓர் இலக்கிய ஆவணம் போல நேர்மையான முறையில் தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் தம்பலாவை தந்த பாரதி வசந்தன்.

பாரதி தான் வாழும் காலத்திலேயே சமூக சீர்திருத்தவாதியாக வாழ்ந்தான் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அதில் ஒன்று கனகலிங்கத்துக்கு பூணூல் அணிவித்தது. ‘தம்பலா’ என்கிற மலம் அள்ளும் மனிதனிடம் பாரதியின் நட்பும், தம்பலாவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வசந்தனுக்கு எமது வாழ்த்துக்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.