புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

‘KAVITHAIMANJAREY’

தூறல்கள்... -ஜோதி

சில்லறைகள்!!!


அவ்பர் முஸ்தபா, அக்கரைப்பற்று
வயிறு பற்றி எரிகிறது!
நெஞ்சு இருண்டு வெடிக்கிறது!
முகம் முடு~~மை" பு+சி
கடு கடுக்கிறது!
தாடைகள் இடம் மாறி
பற்கள் நறு நறுக்கிறது!
மற்றவர்கள் முகங்கள்;
நேருக்கு நேர் கண்டால்
போர் புரியச் சொல்கிறது!

என்,
சக நண்பனில்;
சக ஊழியனில்;
தெரிந்தவனில்;
அறிந்தவனில்;
சொந்தக் காரனில்;
உறவுக்காரனில்;

நல்லது கண்டால்!
இவர்கள்,
உயர்வு பெற்றால்!
மதிக்கப்பட்டால்!
சந்தோ'ப் பட்டால்
இவர்கட்கு,
நல்லது நடந்தால்!

வயிறு பற்றி எரிகிறது!
நெஞ்சு இருண்டு வெடிக்கிறது!
முகம் முடு~~மை" பு+சி
கடு கடுக்கிறது!
தாடைகள் இடம் மாறி
பற்கள் நறு நறுக்கிறது!
மற்றவர்கள் முகங்கள்;
நேருக்கு நேர் வந்தால்
போர் புரியச் சொல்கிறது!

நான் ஒரு பட்டதாரி,
மன ஊனமுள்ள,
உளவியல் நோயாளி!
சிறுமை நோயாளி!!
பொறாமைக் கொடையாளி!!!

நான் மட்டுமல்ல
சில,
கற்றவனும்,
கல்லாதவனும்,
வணிகனும்,
சாமானியனும், கூட
விரும்பி இந்நோய்
வளர்க்கிறார். இது
முற்றி ~~குரோணிக்"
நிலையடைந்து.....

என்னை
சிரிக்க விடுவதில்லை - நல்ல
சிந்தனை தருவதில்லை
தூங்க அனுமதிப் பதில்லை
நல்லவை அணுக விடுவதில்லை
சபையில் அமரச் செய்வதில்லை

இந்நோயால்;
சிரிப்பில் போலி!
உறவில் வேலி!
அன்பில் வே'ம்!
விருப்பில் வி'ம்!
பொறாமையில் திருப்தி
சிறுமையில் விருத்தி!
என,
எனக்குள்
எண்ணற்ற கிருமிகள்;
எத்தனை கருமிகள்?
எய்ட்ஸ் வைரஸை
விடக் கொடுமையான
ஆள் கொல்லி
ஆட்டிலெறிகள்!

இக்கிருமிகள் பரவி
இரத்தத்தில் ஊறி,
மனதினுள் ஆழ ஊன்றி,
வருத்துகின்றன!!
இருந்தும்,
ஒரு அற்ப திருப்தி
தருகின்றன.

இந்நோயால்?
ஆத்மா வெட்கமடைகிறது.
வேதனைப் படுகிறது.
இறை அருள் - இன்னும்
தூரவே நிற்கிறது.

எனக்கு உள்ளேயே
மருந்து இருந்தும்!
மருந்து கட்ட - ஏனோ
மனம் மறுக்கிறது.
இறுக்கம் இன்னும்
இன்பமாய் இனிக்கிறது.

எப்போது அருள் பெறுவேன்?
எப்போது சுகம் பெறுவேன்?


பள்ளத்தில் விழும் எதிர்காலங்கள

எல்லா சுற்று நிரூபமும்
எதிர்காலத்துக்காகவும்
தூர பார்வைக்காகவும்
தோழா நீ
தூக்கி எறிவதற்கல்ல

காலமென்பதற்கு
வகுக்கப்பட்ட நியதிகளுக்கு
நீ ... கால்துடைக்கும் வேலை செய்யாதே

பசளை போதாத
பயிர்களை
விளைச்சலுக்கு அனுப்பாதே
தலைக்கணத்தை
கழற்றி எறிந்துவிடு
எரித்துவிடு

தடுமாறி பள்ளம் விழுந்த எதிர்காலம்
பின் நீ தடுமாறி
சிந்திக்காதே ..........

முறிந்த என்புகள்
இணையலாம்
பிரிந்த உயிர்களுக்கு
என்ன பதில்

சரிந்துபோன சமூகம்
இது
நிமிர்ந்து விடவே தேவை
தோழா
புரிந்துகொள்
கொஞ்சம் உணர்வுகளை
தெரிந்து கொள்
இல்லாவிடின்
விலகி கொள்


நீ......நான்......நிலை.....

திடிரென்று வருகிற மழையைப்போல
எவ்வித அறிக்கையும் இல்லாமல்
இயல்பாய் எதிர்ப்படுகிறாய் நீ....
ஒதுங்க இடமில்லாத நெடுஞ்சாலையில்
தனியே அகப்பட்டது போல
திணறிப்போகிறேன் நான்......


 கவிதை மஞ்சரி -விசு

முறிந்த காதல்


குருணாகல்
என் காதலை அழைத்தேன்
தற்காலிகமாய் பாவனையில்
இல்லையென பதில் வந்தது
ஒருசில நாட்களில்
மீண்டும் அழைத்தேன்
துண்டிக்கப்பட்டுவிட்டதென
தகவல் வந்தது
***
மெய்யாய் நானிருக்கையில்
உயிராய் என்னில் கலந்து
உயிர் மெய்யாக்கிய ஜீவன்
இப்போது எங்கே?
நான் தேடுகிறேன்
***
காதலின் பல்லவி
மோகனராகத்தில் அமைந்தது
அதே காதலின்
சரணம் மட்டும் எப்படி
முகாரி ராகமானது?
***
முகில்கள் ஒன்றுடன்
ஒன்று மோதிக் கொண்ட
வேதனையில் வானமகள்
கண்ணீர் விடுகிறாள்
நானோ உன்முகம்
பார்க்க முடியாத
வேதனையில் கண்ணீர்
விடுகிறேன்


புன்னகை

சம்மாந்துறை
காலத்தின் கோலம்
கரைந்தபின் எதற்கு
வினாவும் விடையும்

துளிர் விடும் வதனத்தில்
துன்பங்கள்
தோய்வது எதற்கு?

புன்னகை செய்துகொள்
வேரினுள் ஈரமாய்
கசிந்து வடியும் இதழோரத்தில்...


ஆனால் நான் ஞானி அல்லன்

நான் இன்பத்தில் ஆடவும் மாட்டேன்
துன்பத்தில் துடிக்கவும் மாட்டேன்
இரண்டையும் ஏற்றுக் கொள்ளும்
இதயம் எனக்குண்டு
ஆனால் நான் ஞானி அல்லன்!

எனது வாழ்க்கை நாணயத்தின்
இரண்டு பக்கந்தான் இவையிரண்டும்
எனக்குள்ளே
ஆசை அடம் பிடிக்கவுமில்லை - நான்
அதன் வாய்ப்பட்டுத் துடிக்கவுமில்லை
உலகம் என்னை ஈர்க்கவுமில்லை
என்னையே நான்
ஏமாற்றிப் பார்க்கவுமில்லை

விழிப்பு - உறக்கம், இளமை - முதுமை
எப்படியோ அப்படியே இன்பமும் துன்பமும்
விருப்பு வெறுப்பின்றி இவ்விரண்டையும்
ஏற்றுக்கொள்கின்றேன்.
முழுப் பிரபஞ்சத்திற்கும்
பொறுப்புமிக் கோனைப் போதுமென்ற மனத்தோடு
போற்றிக் கொள்கின்றேன்

‘இருத்தல்’ என்னும் வாழ்க்கை
ஒரு சுழலுஞ் சக்கரம்
‘இறத்தல்’ என்னும் மரணந்தான்
அச்சக்கரத்தை நிறுத்துங் கரம்
அக்கரம்-
வாழ்வை நிறுத்தும் வரை நான்
அலாதியானவனாக இருக்கின்றேன்!

‘உண்மையில் வாழ்தல்’ எனின் என்னவெனும்
அந்தரங்கம் அறிந்து கொண்டேன்
இல்லாத ஒன்றுக்கு ஏங்க மாட்டேன்
இறைவனே எஜமான் - அவன்
அல்லாது அணுவும் அசையாதவல்லவா!
ஆதலால் நான்-
இன்பத்தில் ஆடவும் மாட்டேன்
துன்பத்தில் துவழவும் மாட்டேன்
ஆனால் நான் ஞானி அல்லன்!


இறையளித்த கடமை!

மள்வானை.
நோன்பிது நன்னோன்பு
ரமழான் பொன் னோன்பு
நோயற்ற வாழ்வுக்கு
நோன்பும் மருந்தாகும்!

விடியுமுன் எழுந்தே
உணவருந்தி உறுதிகொண்டு
இருட்டுக்கு முன் முடித்தல்
இறைவனின் கடமையாகும்!

அண்ணலார் நபிகளாரின்
அருட்கொடை நோன்பினை
எண்ணத்திடை வைத்திடல்
என்றென்றும் புனிதமாகும்!

ஏழைகளுக்கு ஈவதிலும்
இதயத்தை நிறைப்பதிலும்
இறையளித்த உடமையாகும்
மறையளித்த வழிநடப்போம்!

முப்பது நாள் நோன்பிருந்து
தப்பெல்லாம் துறந்திட்ட
இப் புனித பெருநாளை
எப்போதும் வரவேற்போம்!

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.