புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச மாதிரி வினாத்தாள்கள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச மாதிரி வினாத்தாள்கள்

கல்வி மற்றும் மாணவர்களது வெளியீடுகளை வெளியிடும் விதீஷா பதிப்பகம் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன்கருதி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்களை இலவசமாக விநியோகிக்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அனுபவமுள்ள வளவாளர்களால் தயாரிக்கப்பட்ட இவ்வினாத்தாள்களை நாடு முழுவதிலுமுள்ள சகல பாடசாலைகளும் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்டதொரு தினத்தில் பரீட்சை நடாத்தக்கூடியவாறு வினாத்தாள்கள் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்படும்.

வினாத்தாள்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் தரம் - 5 புலமைப்பரிசில் வகுப்புக்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது பாடசாலைக்குத் தேவையான வினாத்தாள்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு அதிபரின் பதவி முத்திரையுடன் கூடிய உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தினை ஜுலை 30ம் திகதிக்கு முன்பதாக கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கவும். விண்ணப்பத்துடன் பாடசாலை, அதிபர், ஆசிரியர்கள் பெயர்விபரம் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களையும் மறவாமல் குறிப்பிட்டு அனுப்பவும்.

இயக்குனர், விதீஷா பதிப்பகம், 89தி புதுச்செட்டித்தெரு, கொழும்பு -13 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்கவும். மேலதிக விபரங்களை 072-6103648 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.


எனது நாடு இலங்கை

*இது இயற்கை அழகு மிக்கது. இதனை ஸ்ரீலங்கா, இரத்தினதுவீபம், தப்பிரபேன், ஈழம் என்றும் அழைப்பர்.

* இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும்.

* இது இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளது.

* இலங்கையில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் எனப்பல இனத்தவர் வாழ்கின்றனர்.

* இலங்கையில் இருந்து தேயிலை, இறப்பர், தைத்த ஆடைகள் என்பன ஏற்றுமதியாகின்றன.

* இலங்கையில் பேதுருதாலகால, சிவனொளிபாதம் போன்ற பெரிய மலைகள் உள்ளன.

* இங்கு மகாவலிகங்கை, களனிகங்கை, மாணிக்க கங்கை போன்ற ஆறுகள் பல உள்ளன.

* இலங்கையின் தலைநகர் ஸ்ரீஜயவர்த்தனபுர ஆகும்.

* கொழும்பில் அரசாங்க அலுவலகங்கள் பல உள்ளன.

* இலங்கையில் அழகான நீர்வீழ்ச்சிகள் பல உள்ளன.

* பிற நாடுகளில் இருந்து உல்லாசப் பயணிகள் பலர் இங்கு வருகின்றனர்.

* இவர்கள் நுவரெலியா, பாசிக்குடா, ஹிக்கடுவை, நீர்கொழும்பு,

* திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களுக்குச் செல்கின்றனர்.

* இலங்கையின் இயற்கை அழகு உல்லாசப் பயணிகளைப் பெரிதும் கவர்கிறது.

* இந்து சமுத்திரத்தின் முத்து என்று இலங்கையை எல்லோரும் போற்றுகின்றனர்.


கொஞ்சம் முதிரை கொஞ்சம் குதிரை

‘இந்தக் குதிரைப் பேரத்திற்கும் இந்த ஆணிகளுக்கும் என்ன தொடர்பு. குதிரைப் பேரத்தில் இந்த ஆணிகள் எம்மாத்திரம்’ என்று எண்ணும் போது, அவன் மனது மகிழ்ச்சியால் துள்ளியது.

சத்திர உரிமையாளனின் எண்ண ஓட்டத்தைக் கவனித்த வணிகன், இவனுக்கு வணிகத்தின் போக்கைத் தெளிவு படுத்த வேண்டும் என்பதாகப் பேச்சைத் தொடர்ந்தான்.

“நீங்கள் எனக்கு இந்த லாடத்தில், பதிக்கப்பட்டுள்ள ஆணிகளுக்குரிய விலை கொடுத்தால் போதும், என்று சொன்ன குதிரைக்காரன், மேலும் புரிய வைப்பதற்காகப் பேசினான்.

“நான் சொல்வதை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். பின்னர். குழப்பமடைய வேண்டாம்.

முதல் லாடத்தில் உள்ள முதல் ஆணிக்கு ஒரு பயிறு கொடுக்க வேண்டும். இரண்டாவது ஆணிக்கு இரண்டு பயறு கொடுக்க வேண்டும்.

மூன்றாவது ஆணிக்கு நான்கு பயறுகள் கொடுக்க வேண்டும் என்ன, நான் சொல்வது புரிகிறதா, நான்காவது ஆணிக்கு, நான் எட்டுப் பயறுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். குதிரைக்காரன் சொல்வதைக் கேட்ட சத்திரக்காரனுக்கு, தலை சுற்றியது. ஒன்றும் புரியாமல் விழித்தான். இவன் விழிப்பதைக் கண்ட குதிரை வணிகன், தொடர்ந்தான்.

“சுருக்கமாகவும் விளக்கமாகவும் சொல்வதென்றால், அடுத்த ஆணியை வாங்கும் பொழுது, முதல் ஆணிக்குக் கொடுத்தைப் போல, இரண்டு மடங்கு பயறுகள் கொடுக்க வேண்டும். அதைப் போல, அதற்கு அடுத்த ஆணியை வாங்கும் போது, அதற்கு முன் வாங்கிய ஆணிக்குக் கொடுத்ததைப் போல, இரண்டு மடங்கு கொடுக்க வேண்டும்”.

குதிரை உரிமையாளனுக்கும் சத்திர உரிமையாளனுக்கும் இடையில் நடக்கும், கொடுக்கல் வாங்கல் பேச்சைச் கேட்டுக் கொண்டிருந்த சத்திரத்தில் தங்கியிருந்த வாடிக்கையாளர்கள் வாய் விட்டுச் சிரித்தார்கள். அவர்கள் கண்களில் பொங்கிய கண்ணீர், கன்னத்தில் உருள்வதை அவர்களால், மறைக்க முடியவில்லை. சிரிப்பு! சிரிப்போ சிரிப்பு!

‘இதுவும் ஒரு பேச்சா...’ என்று ஆச்சரியத்தால் சத்திரத்து உரிமையாளன் வாய் விட்டுக் கத்தினான். உடனே எழுந்து, குதிரைக்காரனின் கையைப் பற்றிக் கொண்டு உற்சாகத்தில் குலுக்கினான். இருவரும் வியாபாரப் பேச்சு, ஒரு முடிவுக்கு வந்ததாக எண்ணிக் கொண்டார்கள்.

‘நமது வியாபாரப் பேச்சு ஒரு முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது.’ என்று சத்திரத்து உரிமையாளன் மிகுந்த பேராசையில் கத்தினான். குதிரையைப் பெறும் பேராசையால், பேச்சு முடியும்வரை காத்திருக்க முடியாமல், எழுந்து உலாவினான்.

எனவே, குதிரை வணிகன், ஒரு சாக்பீஸ் துண்டை எடுத்து, மேசையின் மேல், ஆணியும் அதற்குரிய விலையுமாக, அதாவது, ஆணியும் அதற்குரிய முதிரைப் பயறுகளின் எண்ணிக்கையுமாக எழுதத் தொடங்கினான்.

சத்திரத்து உரிமையாளன், ஆச்சரியத்தோடு அதிர்ச்சியோடும் பார்த்துக் கொண்டேயிருந்தான். 1- 2- 4- 8- 16- 32- 64 அவன் முன்பே கைநிறைய வைத்திருக்கிறான்’ என்று, சத்திரத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் சிரித்தார்கள்.

இன்னும், எழுதிக்கொண்டே போனான். 128 -256 -512 -1024 -2048 -4096 -8, 192 -16, 384 -32, 768

இப்படியே எழுதிக்கொண்டு போகும் போது, குதிரை வணிகன் பதினாறாவது ஆணியைக் கடந்திருக்க மாட்டான். அப்பொழுது, எண்ணிக்கையைக் கவனித்துக் கொண்டுவந்த சத்திரத்துக்காரனின் முகம் வாடியது; அசந்து தொங்கியது.

குதிரை வணிகன் இவ்வாறு எழுதிக்கொண்டு வரும்போது, அதன் எண்ணிக்கை நீண்டு கொண்டே போனது, அவனுக்கு முன்னால், இருந்த மேசை முழுவதும் எழுதி, எழுதி நிறைந்து விட்டது. மேலும் எழுத வேண்டுமென்றால், இன்னும் மேசைகள் போடப்பட வேண்டும். குதிரை வணிகன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மேலும் மேசைகள் போடப்பட்டன.

அங்கு கூடியிருந்த எல்லாரும், ஏற்கனவே, போதுமான அளவு, சிரித்து முடித்து விட்டிருந்தார்கள். இனிமேலும் சிரிப்பதற்கு அவர்களுக்குத் தெம்பில்லை.

சத்திர உரிமையாளன் இப்பொழுது வெளுத்து விட்டிருந்தான். அவனுடைய உடல், ஒரு வெள்ளைக்காரத் துரை போல, வெளுத்துத் துவண்டு விட்டிருந்தது.

இப்பொழுது, குதிரை வணிகன் கேட்டான். ‘இந்தத் தானியங்களைக் கொண்டு செல்வதற்கு எங்கிருந்து என்னால், நூற்றுக் கணக்கான வண்டிகளைக் கொண்டுவர முடியும்.’

இதைக் கேட்ட சத்திரத்துக்காரன் ஏதும் பதில் பேச முடியாமல், வாய் மூடி இருந்தான்.

குதிரை வணிகன் சொன்னான், ‘நான் இன்னும் பலமுறை வந்து, நீ, நிலவறையில் சேர்த்து வைத்திருக்கும் தானியங்களைத் துறைமுகத்தின் வழியாக, கப்பலில் எடுத்துச் செல்வேன். ‘ஏமாற்றுக்காரனே,’ என்று சத்திரத்து முதலாளி கத்தினான். அது, அவனின் ஏமாற்றுக் குரலாக ஒலித்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.