புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

SLT வாடிக்கையாளர்களும் T20 உடன் இணையும் வாய்ப்பு

SLT வாடிக்கையாளர்களும் T20 உடன் இணையும் வாய்ப்பு

டயல் செய்தால் வெற்றி SLT கிரிக்கட் நட்சத்திரமாகுங்கள் போட்டி ஊடாக SLT வாடிக்கையாளர்களுக்கும் T20 உடன் இணையும் வாய்ப்பு இலங்கையில் தேசிய தொலைத்தொடர்பாடல் வழங்குனர்களான ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT), தனது வாடிக்கையாளர்களும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் T20- உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளுடன் ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கின்றது.

இதன்படி, டயல் செய்தால் வெற்றி SLT கிரிக்கட் நட்சத்திரமாகுங்கள் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது வாடிக்கையாளர்களை அழைக்கின்றது.

செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 31ஆம் திகதிவரை இடம்பெறும் இந்த போட்டியில், எந்த வயதையும் சேர்ந்த மெகாலைன் மற்றும் சிற்றிலிங்க் வாடிக்கையாளர்கள் கலந்துகொள்ள விரும்பினால் செய்ய வேண்டியதெல்லாம் 1298 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, வினாவிடைப் போட்டியில் கலந்துகொள்வது மட்டுமே. இதன் ஊடாக மாபெரும் பரிசாக ரூ. 50,000 த்தை வெற்றி கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கலாம்.

இந்த வினாவிடைப் போட்டியானது 5 மட்டங்களைக் கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு மட்டங்களும், 20 பந்துகளைக கொண்ட கிரிக்கட் போட்டியை ஒத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டங்கள் 20 பல்தெரிவு வினாக்களிற்கு அளிக்கப்படும் சரியான விடைகளின் அடிப்படையில் வழங்கப்படும். முழுமையான அதிகூடிய புள்ளிகளைப் பெறுபவரே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படும் அதேநேரம், ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே புள்ளியினைப் பெறுவார்களாயின், சீட்டிழுப்பு நடாத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்.

இப்போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ. 50,000, ரூ. 40,000 மற்றும் ரூ. 30,000 பணப்பரிசில்களாக வழங்கப்படும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.