புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

மேற்கு லண்டன் பல்கலையின் LLM சட்டக் கற்கை நெறிகள் ANC கல்வி நிறுவனத்தில் ஆரம்பம்

மேற்கு லண்டன் பல்கலையின் LLM சட்டக் கற்கை நெறிகள் ANC கல்வி நிறுவனத்தில் ஆரம்பம்

செப்டம்பர் 2012 பருவகாலத்துக்கான LLM சட்டக் கற்கைநெறிக்கான மாணவர் தொகுதியை ANC கல்வி நிறுவளம் முழுமையாக உள்வாங்கியுள்ளது.

இதனையிட்டு கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பாடநெறியின் தலைவரான டாக்டர் பிலிப் எலியட்-ரைட் மற்றும், மேற்கு இலண்டன் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் யரசரவ் கிரைவோய் ஆகிய முன்னணி கல்வியலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். LLM பாடத்திட்டத்தில் 30 வீதத்தைப் பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு தவணையும் மேற்கு லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் இலங்கைக்கு வருகை தருவர்.

ANC வழங்கும் சட்டக் கற்கைநெறிகளில் LLM International Business and Commercial Law, LLM International Banking & Finance Law, LLM International Studies in Intellectual Property Law and LLM International Investment & Arbitration Law Mfpad உள்ளடங்களுகின்றன. வணிக பட்டமேற்படிப்பு கற்கை நெறிகளில் The postgraduate business programmes include the MBA, MA Contemporary Marketing MSc International Business Management and MSc Management ஆகிய தெரிவுகள் உள்ளடங்கியுள்ளன.

இலங்கையில் அமைந்துள்ள தினிவி கல்வி நிறுவனத்தில் மேற்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் உள்ளகக் கற்கை நெறிகளாகும். இக்கற்கை நெறிகளுக்குப் பதிவு செய்பவர்கள் மேற்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் (UWL) மாணவர்கள் என்ற அங்கீகாரத்தைப் பெறுகின்றனர். பாடத்திட்டங்கள் உள்ளடங்கலாக அனைத்து கற்பித்தல் விடயங்களும் லண்டன் பல்கலைக்கழகத்துக்கு இணைவானவையாகவே நடாத்தப்படுகின்றன.

அது மட்டுமன்றி UWL வேர்ச்சுவல் கற்றல் வசதிகளையும் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என கலாநிதி பிலிப் எலியட் ரைட் அவர்கள் எடுத்துக் கூறினார். ஒரு தொழினுட்பக் கல்லுரியாக 1860 இல் ஆரம்பிக்கப்பட்ட UWL, 1990 இல் பல்கலைக்கழம் என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.