புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

இலங்கைச் சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா நனோ

எரிபொருள் சிக்கனம் வாய்ந்த பயணிகள் வாகனம்

இலங்கைச் சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா நனோ

டீமோ நிறுவனம் டாடா நனோ உரிமையாளர்களுக்கு டாடா நனோ மைலேஜ் சலேஞ் ரலியை (Tata Nano Mileage Challenge Rally) இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்தது. இலங்கையிலேயே எரிபொருள் சிக்கனத்துடன் இயங்கும் வாகனம் டாடா நனோ மட்டும் தான் என்ற விழிப்புணர்வை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இந்த வாகனப் பேரணி, கொழும்பு மாநகரசபையிலிருந்து ஆரம்பித்து வாதுவைக்குச் சென்று பின் மீண்டும் கொழும்பை வந்தடைந்தது.

இந்த வாகனத் தொடரணியில் பெண் ஓட்டுநர்கள் உள்ளடங்கலாக இருபத்தைந்து டாட்டா நனோ வாகன உரிமையாளர்கள் பங்கு பற்றியிருந்தனர். தனது டாடா நனோ காரில் லீற்றருக்கு 50 கி.மீ தூரத்தைப் பதிவு செய்து முதன்மையான எரிபொருள் சிக்கனத்தை எஸ்.பி.எஸ்.சம்பத் பதிவு செய்தார். இரண்டாவது இடத்தை ஏ.எம்.பி.பிரியங்காரவும் மூன்றாவது இடத்தை கே.எஸ்.பி.குமாரவும் பெற்றுக்கொண்டனர். லீற்றருக்கு 30 கி.மீற்றருக்கு மேற்பட்ட தூரம் சராசரிப் பதிவாக இந்தத் தொடரணியில் காணப்பட்டது.

தமது டாடா நனோவில் உச்சபட்ச எரிபொருள் சிக்கனத்தைப் பெறுவதற்கு எத்தகைய வாகனம் செலுத்தும் முறைமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவூட்டுவதற்காக டாடா மோட்டார் நிறுவனமும் டீமோவும் இணைந்து நடாத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமே இந்த டாடா நனோ மைலேஞ் சலேஞ் ரலி ஆகும். முடிவிடத்தை அடைவதற்குக் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்கள், வரைபடம் ஆகியன டாடா நனோ உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. டொப்-அப்-டு-டொப்-அப் (Top-up- to top-up)  முறை மூலம் வாகனம் லீற்றருக்கு எத்தனை கிலோ மீற்றர் பயணித்துள்ளது என்பது துல்லியமாகக் கணிப்பிடப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.