புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

உச்ச பாதுகாப்பை வழங்கும் Kaspersky Lab இன் புதிய உற்பத்திகள்

உச்ச பாதுகாப்பை வழங்கும் Kaspersky Lab இன் புதிய உற்பத்திகள்

Kaspersky Lab ஆனது வாடிக்கையாளர் களின் அபிமானம் வென்ற உற்பத்திகளில் ‘Kaspersky Internet Security 2013’ Premium Security suite என்ற முன்னணி பாதுகாப்புத் தொகுதி மற்றும் Kaspersky Anti-Virus 2013’ Essential Protection Solution என்ற அத்தியாவசிய பாதுகாப்புத் தீர்வு மென்பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. இவை சகல விதமான அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு வழங்கக்கூடியவை.

இரு உற்பத்திகளும் சீராக்கப்பட்டதும், எளிதாகப் பயன்படுத்தக்கூடியதுமான முகப்புத் தளத்தைக் கொண்டிருப்பதுடன், இத்தகைய பாதுகாப்பை வழங்கக்கூடிய புதிய தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொடுக்கின்றது.

ஒவ்வொரு நாளும் மாறக்கூடிய அச்சுறுத்தல் நிறைந்த பரப்பில், அதிகமாக பாதிக்கக்டிய பிரயோகங்களின் பாதுகாப்பு மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Automatic Exploit Prevention என்ற தன்னியக்க துஷ்பிரயோகத் தடுப்பு தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியப்பட்டிருக்கிறது.

Kaspersky Internet Security இன் புத்தம் புதிய வடிவத்தைப் பயன்படுத்தும் பாவனையாளர்கள் மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடிய Safe Money என்ற அம்சத்தின் மூலம் இணையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பொருட் கொள்வனவுகள், வங்கிக் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிற்கு முழுமையான பாதுகாப்பைப் பெறுகிறார்கள்.

Avian technologies (Pvt) Ltd என்பது 2007 ஆம் ஆண்டு தொடக்கம் Kaspersky Lab உற்பத்திகளின் ஏக விநியோகஸ்தராகத் திகழ்கிறது. Kaspersky Anti-Virus  மென்பொருளானது கடந்த மூன்றாண்டு களாக இலங்கையிலும், மாலைதீவிலும் சில்லறை மற்றும் ஸ்தாபன வடிவங்களில் முதன்மை உற்பத்தியாகத் திகழ்ந்து வருகிறது. மிகவும் சிறந்த உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கக்கூடிய ஆற்றலும், அர்ப்பணிப்பும் கொண்டவர் களான இளமையும், துடிப்பும் கொண்ட தொழில்துறை நிபுணர்கள் மூலம் விற்பனைக்கு முந்தியதும், பிந்தியதுமான ஒப்பற்ற சேவைகளை வழங்கக்கூடியவாறு வளர்ச்சி கண்டுவரும் ஸ்தாபனமாக திvian நிறுவனம் நன்மதிப்பையும், அங்கீகார த்தையும் பெற்றுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.