புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

பஹன் மீடியா நெற்வேர்க்ஸ{டன் இணைந்து PEO TV அறிமுகப்படுத்தும் புதிய அலைவரிசை

பஹன் மீடியா நெற்வேர்க்ஸ{டன் இணைந்து PEO TV அறிமுகப்படுத்தும் புதிய அலைவரிசை

பெளத்த தர்மத்தை போதிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஷ்ரத்த TV தொலைக்காட்சி அலைவரிசையை அங்குரார்ப்பணம் செய்யும் நோக்கில், பஹன் மீடியா நெற்வேர்க்ஸ் உடன் SLT PEO TV கரம்கோர்க்கின்றது. குறித்த இந்த தொலைக்காட்சி அலைவரிசை சமய தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு புதியதொரு பரிமாணத்தை அளிப்பதுடன், புத்த பெருமானின் போதனைகள் மற்றும் கோட்பாடுகளை பார்வையாளர்களுக்கு அறியத்தருகின்றது. 2012 செப்டெம்பர் 29ம் திகதி ஆரம்பிக்கப்படும் ஷரத்த தொலைக்காட்சி அலைவரிசை காலை 04.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரை வாரத்தின் அனைத்து நாட்களும் ஒளிபரப்பாகும்.

இந்த நிகழ்வில் தனது எண்ணங்களைப் பகிரந்துகொண்ட ஷிழிஹி பிரதம நிறைவேற்று அதிகாரி கிரெக்யங் “ஷரத்த தொலைக்காட்சி அலைவரிசையின் அங்குரார்ப்பணத்தின் மூலம் புத்த சமயத்தின் போதனைகள் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை அனைவருக்கும் கொண்டு செல்ல விழைகிறோம். இந்த அலைவரிசையின் அங்குரார்ப்பணத்திற்கு பொருத்தமானதொரு நாளான பெளர்ணமி தினமான 2012 செப்டெம்பர் 29ம் திகதி, நாம் இந்த அலைவரிசையினை ஆரம்பிக்கின்றோம். பிரத்தியேகமான பார்வையிடல் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதையே நோக்காகக் கொண்டுள்ள SLT PEO TV யின் பெளத்த அலைவரிசை ஒன்றை ஆரம்பிப்பதான தீர்மானமானது, ஏராளமானவர்களின் கோரிக்கையின் விளைவாகவே மேற்கொள்ளப்பட்டது. பன்முக நிகழ்ச்சிகளை உள்ளடக்கியுள்ள ஷ்ரத்த தொலைக்காட்சி அலைவரிசை, அனைத்து வழிகளிலும் பெளத்த தர்ம போதனைகளைக் கொண்டுவருவதன் காரணமாக, எமது ரசிகர்களின் விருப்பத்திற்குரிய அலைவரிசையாக மாறும் என்பதில் நம்பிக்கை உண்டு. SLT PEO TV எமது ரசிகர்களுக்கு பரந்தளவான நிகழ்ச்சி தெரிவுகளை அவர்களின் வசதி மற்றும் செளகர்யம் ஆகியவற்றுடன் ஒட்டியதாக அளிக்கின்றது. 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தினம் தொட்டு, பல்வேறு மைல்கற்களை பதித்துள்ள SLT PEO TV பார்வையாளர்களுக்கு முன்னெப்போது மில்லாத பார்வை அனுபவத்தை அளிக்கின்றது” எனத் தெரிவித்தார். குறித்த இந்த அலைவரிசையின் அங்குரார்ப்பணத்தின் போது பேசிய சங்கைக்குரிய அலுதெனிய சுபோதி தேரர், “முன்னெப்போதுமில்லாத வகையில், புத்த பகவானின் போதனைகள் இக்காலப்பகுதிக்கு மிகப்பொருத்தமாக உள்ளது. புத்தரின் கோட்பாடுகள், இனம், சாதி மற்றும் தராதரம் போன்ற மனித குலத்தின் மனப்பாங்கை குறுக வைக்கும் தடைகளை மாற்றியமைக்கின்றது. ஷ்ரத்தா தொலைக்காட்சி, குறித்த இந்த ஆழ்ந்த சிந்தனைகளை அனைவர் மத்தியிலும் பரப்பி அதனை வெளிப்படுத்துவதன் ஊடாக மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது. ஷ்ரத்த தொலைக்காட்சி அலைவரிசை நவீன பாணியில் , சிந்தனையை தூண்டும் வகையில் பன்முக விடயங்களை கையாள்கையில் , பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றி அளித்தல் மூலம் புத்த பெருமானால் கடைப்பிடிக்கப்பட்ட குறித்த இந்த போதனைகளை இளையோர் முதியோர் மத்தியில் கொண்டு செல்ல எண்ணியுள்ளது என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.