புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

வேறிடத்திற்கு இடம் மாறும் அமானா தகாஃபுல்

வேறிடத்திற்கு இடம் மாறும் அமானா தகாஃபுல்

அமானா தகாஃபுல் அண்மையில் தமது கிளையினை இல.32, மல்லிகா கட்டடம், பிரதான வீதி, கல்முனை என்ற அதிக இடப்பரப்பு மிகு, நவீன அலுவலகத்திற்கு இடமாற்றியதன் ஊடாக தமது செயற்பாடுகளை புதுப்பித்துக்கொண்டது. இந்த கிளை, அமானா தகாஃபுல் பி.எல்.சி. பிரதம நிறைவேற்று அதிகாரி ஃபசால் கபூரினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அமானா தகாஃபுல் கிழக்கில் தமது இருப்பை வலுப்படுத்தியுள்ளதுடன், குறித்த பிராந்தியத்தில் தாஃபுல் காப்புறுதி முறைமையை பலப்படுத்தியுள்ளது. “பிராந்தியத்தில் எமது இருப்பினை வலுப்படுத்தும் நோக்கிலும், தன்னியக்கம் மற்றும் சிறந்த சேவை மட்டங்களை எட்டும் நோக்குடனும் அண்மையில் திருகோணமலையில் புதிய கிளை ஒன்றையும், மட்டக்களப்பில் பிராந்திய அலுவலகம் ஒன்றையும் நாம் அங்குரார்ப்பணம் செய்துள்ளோம்” என அமானா தகாஃபுல் பி.எல்.சி. கிழக்குப் பிராந்தியத்திற்கான வர்த்தக மேம்படுத்தல் முகாமையாளர் திரு. அப்துல் கரீம் தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டு முதல் கல்முனையில் செயற்பட்டு வரும் அமானா தகாஃபுல் கடந்த ஆண்டு பொது மற்றும் ஆயுள் காப்புறுதி வர்த்தகத்தில் மிகை வளர்ச்சியைப் பதிவு செய்ததன் மூலம் வலுவான ஒரு இடத்தை அடைந்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.