புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
LLRC ஐ அமுல்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்துவது தமிழருக்கு ஆறுதல்!

LLRC ஐ அமுல்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்துவது தமிழருக்கு ஆறுதல்!

ஆக்கபூர்வ விடயத்திற்கு ஒத்துழைப்பாராம் மனோ

அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டதே தவிர, இலங்கை அரச தலைவர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம், இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டதே தவிர, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தருஷ்மன் அறிக்கையை அடிப்படையாக கொண்டது இல்லை.

இதில் இலங்கை அரச தலைவர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் பற்றியோ அல்லது யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இறந்து போன ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் அமெரிக்க தீர்மானத்தில் எந்த ஒரு இடத்திலும் மருந்துக்குகூட, ஐ.நா.வின் தாருஷ்மன் அறிக்கையைப் பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை. இது இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெற்றி. நமது கற்றுக் கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்காக, இலங்கை அரசா ங்கம் ஐ.நா. மனித உரிமை ஆணை க்குழுவுடன் கூட்டு இணைந்து செயற்பட வேண்டும்என வலியுறுத்தப்பட்டிருப்பது ஒன்றுதான் கொஞ்சமாவது தமிழ் மக்க ளுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழ் தரப்பு அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும்.

எனவே இந்த ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசுகள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் அமுலாக்கப்படுவதை நாம் கண்காணிப்போம்.

அதற்கான அழுத்தங்களை இல ங்கை அரசாங்கத்திற்கு, தோழமை கட்சிகளுடன் இணைந்து நாம் வழங்குவோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.