புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி; அகாஷிக்கு நாமல் எடுத்துரைப்பு

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி; அகாஷிக்கு நாமல் எடுத்துரைப்பு

டோக்கியோ மாநாட்டில் இரு தரப்பு பேச்சு

பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான நாமல் ராஜபக்ஷ, டோக்கியோவில் இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதியான யசூஷி அகாஷியுடன் இரு நாட்டு உறவுகள் தொடர்பாக விசேட பேச்சு நடத்தினார்.

டோக்கியோவில் நடைபெறும் வருடாந்த இலங்கை தேயிலை மற்றும் வர்த்தக மேம்பாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக நாமல் ராஜபக்ஷ ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த வியாழனன்று அகாஷியுடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது நாட்டின் தற் போதைய நிலைமை தொடர்பாகவும், வடக்கு, கிழக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி தொடர்பாகவும் நாமல் ராஜபக்ஷ எடுத்துரைத்தார். வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்களின் கிராமங்களில் குடியேற்றுவதிலும் பிரதான நடவடிக்கையாக அவர்களின் இல்லங்களை புனரமைப்பதிலும் இலங்கை அரசாங்கம் எடுத்துக்கொண்ட முக்கிய பங்களிப்பு பற்றியும் நாமல் ராஜபக்ஷ எடுத்துக் கூறினார்.

இடம்பெயர்ந்த ஏராளமான மக்கள் மீண்டும் தமது சுயதொழில் திட்டங்களை தொடரும் வகையில் விசேட பொருளாதார உதவியுடன் அவர்களை மீள்குடியமர்த்தியுள்ள தாகவும் ராஜபக்ஷ கூறினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அகாஷி, இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டியதுடன், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவின் முக்கியத்துவம் பற்றி கூறியதுடன், ஜப்பான் எப்போதுமே இலங்கைக்கு ஆதரவு வழங்குமென்றும் உதவி தேவைப்படும்போது வழங்குமென்றும் கூறினார்.

இலங்கைக்கு ஜப்பான் தொடர்ச்சியாக உதவி, ஒத்துழைப்புகளை வழங்கிவருவதாக ஏற்றுக்கொண்ட ராஜபக்ஷ, இரு நாடுகளுக்குமிடையிலான திடமான நட்புறவின் முக்கியத்தை வலியுறுத்தியதோடு, இரு நாடுகளுக்கிடையிலான 60 வருட இராஜதந்திர உறவுகளுக்கான கொண்டாட்டம் இரு நாடுகளிலும் இவ்வாண்டு கொண்டாடப்படுவதையும் நினைவுகூர்ந்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.