புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
ஈழத் தமிழருக்கு கவிதை எழுதிய கருணாநிதி மீண்டும் நீலிக் கண்ணீர்!

ஈழத் தமிழருக்கு கவிதை எழுதிய கருணாநிதி மீண்டும் நீலிக் கண்ணீர்!

ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து தமிழகத்தில் உள்ள அனைத் துக் கட்சிகளுமே ஒருமித்த நிலைப்பாட்டினையே மேற்கொண்டு தெரிவித்திருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் கள் பற்றிய ஐ.நா. தீர்மானம் தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளின் அடிப்படை யில் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா 8.03.2012 அன்று சென்னையில் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க நாட்டின் சார்பில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில் முக்கியமாக கொலைகள் மற்றும் காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எடுத்துரைத்துள்ள திட் டங்களை நடைமுறைப்படுத் துவதற்கு உரிய ஆலோசனைகளையும், தொழில் நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வழங்க வேண்டும். அதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.